அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியை மறுக்காமல் ஏற்க வேண்டும் என்பதில் வேறுபட்ட கருத்துகள் இருக்க முடியாது. ஏனெனில் தேர்தல், மக்கள் தொகை கணக்கெடுப்பு போன்றவை தேசியப்பணிகள் என்பதால், தற்பொழுது தேசியப்பணிகள் என்பவை ஆண்டு முழுவதும் ஏதோவொரு வகையில் தொடர்ந்து வந்து கொண்டே தான் இருக்கிறது.
எனவே இது போன்ற தேசியப்பணிகளுக்கு நிரந்தரமாக பணியாட்கள் நிரந்தரம் செய்யப்பட்டு ஆசிரியர்கள் கல்விப் பணியை மட்டுமே கவனிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஆனாலும் தேர்தலுக்கு முதல் நாள் காலையில் தேர்தல் வகுப்பு பிறகு அப்படியே நேராக முந்தைய நாள் மதியம் 12 மணிக்கே தேர்தலில் பணிபுரியும் இடத்திற்குச் செல்ல வேண்டும் என்பதும் அடுத்த நாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை ஏறத்தாழ 11 மணி நேரம் ஓய்வில்லாமல் இடைவிடாத தொடர்ந்த பணி...
இந்திய அரசியல் சட்டம் என்ன சொல்கிறது?
ஒரு தொழிலாளிக்கு 8 மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து வேலை கொடுக்கக் கூடாது என்கிறது. ஆனால் அரசாங்கமே இதனை மீறுகிறது. வயதானோரும், பெண்களும் தொடர்ந்து இரண்டு நாட்கள் வீட்டை விட்டு வெளியேறி தேர்தல் நாளன்று தொடர்ந்து இடைவிடாமல் 11 மணி நேரம் தேர்தல் பணி பார்ப்பது என்பதும் தனி மனித சுதந்திரத்தை பறித்தல் மற்றும் அப்பட்டமான மனித உரிமை மீறல் என்பதும் இதுவரையிலும் யாருக்குமே தெரியாமல் போனதெப்படி?
மேலும் தேர்தல் பணிபுரியும் அலுவலர்களுக்கு தொகுப்பூதியம் வழங்காமல் அவர்கள் பெற்று வரும் அடிப்படை ஊதியத்தை கணக்கிட்டு ஊதியம் வழங்கிட வேண்டுமெனவும் கோரிக்கைகள் ஏன் எழுப்பப்படவில்லை?
இது குறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நாமக்கல் மாவட்டக் கிளை இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கும் கடிதம் அனுப்பியுள்ளது
No comments:
Post a Comment