அடுத்த மாதம் நடக்க உள்ள ஊரக திறனாய்வு தேர்விற்கு, 8ம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்க, ஆக., 22 கடைசி நாள்,'' என, அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
அவரது உத்தரவு: அரசுத் தேர்வுத் துறையால் ஆண்டு தோறும், தமிழக ஊரகப்பகுதி 8ம் வகுப்பு மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. செப்டம்பரில் நடக்க உள்ள இத்தேர்விற்கான விண்ணப்பங்களை, 'ஆன்-லைன்' மூலம், காலை, 10:00 மணி முதல், www.tndge.in என்ற இணையதள முகவரி யில், அனைத்துப் பள்ளிகளிலும் பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களிடமிருந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக., 22க்குள் பெற்று, ஆக., 25 முதல் 28 வரை தலைமையாசிரியர்கள் பதிவு செய்ய வேண்டும். அதற்கான 'யூசர் - ஐ.டி., பாஸ்வேர்டு' வழங்கப் பட்டுள்ளது. ஆக., 22க்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்க வேண்டும். தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும். மாணவர்களிடம் தலா, 10 ரூபாய் தேர்வுக்கட்டணம் வசூலிக்க வேண்டும்.
தேர்வு மைய பட்டியலை, 25ம் தேதிக்குள் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அனுப்ப வேண்டும். வினாத்தாள் அனுப்புவதில் ஏற்படும் சிக்கலை தவிர்க்க, தேர்வர்களின் எண்ணிக்கையை துல்லியமாக குறிப்பிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இத்தேர்வில் ஊரகப்பகுதி மாணவர்கள் மட்டுமே கலந்து கொள்ள முடியும். வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஆண்டிற்கு, 1,000 ரூபாய் வீதம் நான்கு ஆண்டிற்கு அரசு சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்' என்றார்.
this exam is not for middle school students
ReplyDelete