திருக்குறள்

31/08/2014

முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுக்கும் ஆசிரியர் பணியில் ஒதுக்கீடு வேண்டும்: ஐகோர்ட்டில் வழக்கு

முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகளுக்கும் இடஒதுக்கீட்டில் ஆசிரியர் பணி கோரிய மனு குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட் டம், அஞ்சுகுழிபட்டியை சேர்ந்தவர் சரண்யா. ஐகோர்ட் மதுரை கிளை யில் தாக்கல் செய்த மனு:நான், டிப்ளமோ ஆசிரியை பயிற்சி முடித்து, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளேன்.இடைநிலை ஆசிரியர் பணி தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று, மார்ச் 28ல் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டேன். எனது கல்விச் சான்றிதழ் உள்பட, எனது தந்தை முன்னாள் ராணுவ வீரர் என்பதால், அதற்கான சான்றையும் சமர்பித்தேன்.கடந்த 6ம் தேதி தமிழ் நாடு ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் வெளியிட்ட அறிவிப்பில், ‘ராணுவத்தில் பணியாற்றி இருந் தால் மட்டுமே, அந்த இட ஒதுக்கீட்டில் ஆசிரியர் பணி வழங்க முடியும்‘ என கூறியிருந்தார். ஆனால், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இட ஒதுக்கீட்டின் கீழ் அனைத்து அரசு பணிகளும் வழங்கப்படுகிறது. எனவே, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரின் அறிவிப்பை ரத்து செய்து, எனக்கு ஆசிரியர் பணி வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, இடைநிலை ஆசிரியர் பணி நியமனங்கள் அனைத்தும் வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்தே அமையும் என உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment