திருக்குறள்

05/11/2013

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியீடு


Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Provisional Mark List for Paper I


Tamil Nadu Teachers Eligibility Test 2013 - Provisional Mark List for Paper II Click here...


TRB CUT OFF IN DETAILS

The Cutoff given by TRB is follows:
+2
Above 90%-10 mark
80 to 90 %- 8 mark
70 to 80% - 6 mark
60 to 70%- 4 mark
50 to 60% - 2 mark

UG
Above 70% - 15 mark
50 to 70% - 12 mark
Below 50%- 10 mark

B.Ed
Above 70% - 15 mark
50 to 70% - 12 mark

T.E.T
Above 90% - 60 mark
80 to 90% - 54 mark
70 to 80%- 48 mark
60 to 70%- 42 mark

Those who are getting 100 marks in tet and getting 90 in tet coming under the same category that is 42 marks out of 60

but by actual calculation it comes a lot of difference so convert actual marks into 60 don;t give slab for tet. 

For eg
90/150 in tet converted into 60 means they will get 36 marks 

100/150 in tet converted into 60 means they will get 40 marks

see the difference. getting marks in tet is very difficult. 

also see the weightage marks. earlier days it is very difficult to get the marks. now-a-days see most of the b.ed., candidates (private) colleges getting more than 70% then how can we competate with them. 
So at least consider the cutoff for experience and employment seniority instead of plus two marks. 
or give weightage for higher qualification (PG or m.phil)

04/11/2013

வட்டார வள மைய அளவில் "READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி தொடக்க நிலை-16.11.2013 , உயர் தொடக்கநிலை-23.11.2013

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி

மாநில திட்ட இயக்குநர் (அகஇ) அவர்களின் செயல்முறைகள் ந.க.எண்.745/அ 11/பயிற்சி/2013, நாள். 10.2013ன் படி தொடக்க / உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார வள மைய பயிற்சி கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி

தொடக்க நிலை-06.11.2013

உயர் தொடக்கநிலை-08.11.2013


மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி

தொடக்க நிலை-12.11.2013

உயர் தொடக்கநிலை-19.11.2013


வட்டார வள மைய அளவில் "READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி

தொடக்க நிலை-16.11.2013

உயர் தொடக்கநிலை-23.11.2013

EMIS இல் மாணவர் ஆதார் எண் பதிவு செய்ய ஆணை - நவம்பர் 15 க்குள் முடிக்க உத்தரவு


அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) செயல்பாடுகள் தொடர்பாக "ஆவணப்படங்கள்' தயாரிக்க அரசு முடிவு

தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) செயல்பாடுகள் தொடர்பாக "ஆவணப்படங்கள்' தயாரிக்க அரசு முடிவு செய்துள்ளது. முதல் முயற்சியாக, மதுரை மாவட்டத்தில் இதற்கான பணி துவங்கியுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இதில் ஒரு பிரிவான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசு பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள் என ஒவ்வொரு ஒன்றியங்களிலும் உள்ளன.
இவற்றில், காது கேளாத, மனவளர்ச்சி குன்றிய, கை, கால் செயலிழந்த, மூளை முடக்கு வாதத்தால் பாதித்த, ஆட்டிசம் மற்றும் கற்றலின் குறைபாடால் பாதித்தவர்கள் என எட்டு வகை பாதிப்புடைய ஒன்று முதல் 18 வயது வøரான இயலாக் குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு, உடலை தூய்மையாக பராமரிப்பது, உடைகள் அணிதல், கழிப்பறையை எவ்வாறு பயன்படுத்துவது, பேச்சு மற்றும் எழுத்துப் பயிற்சி, தசைப் பயிற்சி போன்றவை சிறப்பாசிரியர்கள் மூலம் அளிக்கப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 430க்கும் மேற்பட்ட மையங்களில், 10,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். மேலும், மையங்களுக்கு தினமும் வரமுடியாத இயலாக் குழந்தைகளுக்கு, அவர்களின் வீடுகளுக்கு சென்றும் ஆசிரியர்கள் பயிற்சி அளிக்கின்றனர். இப்பயிற்சி மூலம் முன்னேற்றமடையும் மாணவர்கள், "ரெகுலர்' மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு இணையாக படிக்கின்றனர். இத்திட்டத்தின் கீழ் தற்போது அவ்வாறு பயனடைந்த மாணவர்கள் விவரம், அவர்களின் தற்போதைய நிலைமை குறித்து விவரங்கள் சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆவணப்படம்: இத்திட்ட செயல்பாடு, பயிற்சி மூலம் மாணவர்கள் பெற்ற வெற்றியின் வெளிப்பாடு, பெற்றோர் உணர்வுகள், சிறப்பாசிரியர்கள் அனுபவங்கள், மைய காப்பாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், கிராம மக்கள் கருத்துக்களை உள்ளடக்கிய ஆவணப்படங்கள் தயாரிக்க இத்திட்ட அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இதற்காக, முதற்கட்டமாக மதுரை மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, இங்குள்ள 15 அரசு பகல்நேர மையங்கள் மற்றும் 15 ஆதார மையங்களில் தேர்வுசெய்யப்பட்ட மையங்களில் இதற்கான படப்பிடிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இத்திட்ட இணை இயக்குனர் நாகராஜ முருகன் கூறியதாவது: அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. ஆவணப்படம் தயாரிப்பது மூலம் திட்ட செயல்பாடுகள், மாணவர்களுக்கு அரசு செய்து கொடுத்துள்ள வசதிகள் குறித்தும் மக்களிடம் சென்றடையும். 30 நிமிடங்கள் வரை ஓடும் வகையில் ஆவணப்படம் தயாரிக்கப்படுகி றது. மாநிலத்தில் முதன் முறையாக மதுரை மாவட்டத்தில் இப்படம் தயாரிப்பதற்கான பணிகள் துவங்கியுள்ளன. இதன் தொடர்ச்சியாக அனைத்து மாவட்ட செயல்பாடுகள் தொடர்பாகவும் ஆவணப்படங்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது, என்றார்

01/11/2013

அனைவருக்கும் ஒளி மயமான தீபாவளி நல்வாழ்த்துக்கள் - பாதுகாப்பான தீபாவளியே…ஆனந்தமான தீபாவளி..,!

பள்ளிகளில் கணிதஉபகரணப்பெட்டி பயன்பாட்‌டில் இருக்க அறிவுறுத்தல்

ரூ.5,000 லஞ்சம் வாங்கிய ஏ.இ.ஓ., அலுவலக ஊழியர் அதிரடி கைது: ஊழல் தடுப்பு வாரத்தில் நடவடிக்கை

ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி கடைபிடித்து வரும் வேளையில், தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், லஞ்சம் வாங்கிய கிளர்க்கை, லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று கைது செய்தனர்.


அக்டோபர், 28 முதல், நவம்பர், 2ம் தேதி வரை, ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி நாட்களாக கடைபிடிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில், அனைத்து அரசு ஊழியர்களும், ஊழல் தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொள்வர். இந்நிலையில், தாரமங்கலம் உதவி தொடக்கக் கல்வி அலுவலகத்தில், பில் செக்ஷனில், எழுத்தராக பணியாற்றி வருபவர் மோகன்ராம், 50. இவர், தாரமங்கலம் யூனியன் வணிச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின், பி.எஃப்., மற்றும் ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு, ஈட்டிய விடுப்பு ஆகியவற்றுக்காண பில்களை பாஸ் செய்ய, 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார். இதுகுறித்து, வணிச்சம்பட்டி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வம், சேலம் லஞ்ச ஒழிப்பு போலீஸில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீஸார், தலைமை ஆசிரியர் செல்வத்திடம், ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து அனுப்பினர்.

நேற்று முன்தினம் மாலை, தாரமங்கலம் ஏ.இ.ஓ., அலுவலகம் சென்ற தலைமை ஆசிரியர் செல்வம், ரசாயன பவுடர் தடவிய பணத்தை, எழுத்தர் மோகன்ராமிடம் வாங்கினார். அப்போது, அங்கு மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., சந்திரமௌலி, இன்ஸ்பெக்டர் செல்வகுமார் உள்ளிட்ட போலீசார், மோகன்ராமை கையும் களவுமாக பிடித்து, கைது செய்தனர். சேலம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மோகன்ராம் சிறையிலடைக்கப்பட்டார்.

அனைத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகளும் EMIS விவரங்களை சரி பார்த்து 31.10.2013 க்குள் ஒப்படைக்க உத்தரவு

EMIS இல் மாணவர் விவரங்களை OFF-LINE இல் (இணையதள இணைப்பு இல்லாமல்)

அனைத்து பள்ளிகளும் (EMIS இல்)பதிவேற்றம் செய்த விவரங்களை சரி பார்த்து ஆதார் எண்களையும் பதிவேற்றம் செய்தும் 31.10.2013 க்குள் ஒப்படைக்க வேண்டும். EMIS இல் அனைத்து விவரங்களும் சரியாக பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளது எனவும், இதில் ஏதேனும் தவறு இருப்பின் அதற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று தலைமை ஆசிரியர்கள் எழுத்துப் பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும் என உத்தரவு இடப்பட்டுள்ளது.

இந்திய நாட்டின் மிக உயரிய விருதுகள்:

இந்தியாவின் மிக உயர்ந்த விருது - பாரத ரத்னா

(1 கோடி பரிசுத்தொகை கொண்ட விருது - காந்தி அமைதி விருது)

அமைதிக்கான மிக உயர்ந்த விருது - அசோக் சக்ரா விருது

மிக உயர்ந்த இலக்கிய விருது - பாரதீய ஞானபீட விருது

மிக உயர்ந்த சர்வதேச நட்புறவு விருது - நேரு சமாதான விருது

மிக உயர்ந்த பத்திரிகையாளர் விருது - பி.டி.கோயங்கா விருது

மிக உயர்ந்த பால்வள விருது - கோபால் ரத்னா விருது

மிக உயர்ந்த கெளரவ ராணுவ விருது - ஃபீல்ட் மார்ஷல் விருது

மிக உயர்ந்த விளையாட்டு வீரர் விருது - அர்ஜுனா விருது

மிக உயர்ந்த விளையாட்டுப் பயிற்சியாளர் விருது - துரோணாச்சார்யர் விருது

மிக உயர்ந்த வீரதீர விருது - மஹாவீர் சக்ரா

மிக உயர்ந்த மிகச் சிறந்த விளையாட்டு வீரர் விருது - ராஜீவ்காந்தி கேல்ரத்னா விருது

மிக உயர்ந்த வேளாண்மை விருது - க்ருஷி பண்டிட் விருது

மிக உயர்ந்த சினிமா விருது - தாதா சாகிப் பால்கே விருது

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட விருது - தங்கத் தாமரை விருது

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகர் விருது - பாரத்

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட நடிகை விருது - ஊர்வசி

மிக உயர்ந்த மிகச் சிறந்த திரைப்பட இயக்குநர் விருது - இந்திரா காந்தி விருது

தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு

விடுமுறை நாட்களில் பயிற்சி ஈடு செய்யும் விடுப்பு வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தல்

விடுமுறை நாட்களில் நடத்தப்படும் பயிற்சிகளுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.

கடந்த கல்வி ஆண்டுகளில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி வேலை நாட்களில்தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு 10 நாட்கள் குறுவள மைய பயிற்சி மற்றும் 10 நாட்கள் வட்டார வள மைய அளவில் பயிற்சி, ஆண்டுக்கு 20 நாட்கள் பயிற்சிகள் வழங்கப்பட்டன. அதிகமான பயிற்சிகள் வழங்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இப்பயிற்சி நாட்கள் ஆண்டுக்கு 7 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.ஆனால் அதே வேளையில் பள்ளி விடுமுறை நாட்களில் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. 



கடந்த ஆண்டுகளில் விடுமுறை நாட்களில் பயிற்சியில் கலந்து கொள்ளும் உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கப்பட்டு வந்தது. அரசு ஊழியர்கள் விடுமுறை நாளில் பணியாற்றினால் அவர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு அல்லது ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.தற்போது விடுமுறை நாட்களில் பயிற்சியில் பங்கேற்கும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் இந்த சலுகை வழங்க வேண்டும். 6 மாதங்கள் வரை இந்த ஈடு செய் விடுப்பை அனுமதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாரத்திற்கு ஐந்து பாட வேலையாவது கம்ப்யூட்டர் பயன்படுத்தி பாடம் நடத்தவேண்டும். நடுநிலை பள்ளிகளுக்கு தொடக்கக் கல்வித்துறை உத்தரவு

தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார் கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன. இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி (ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசுமுடிவுசெய்திருக்கிறது. அரசு - தனியார் கூட்டுமுயற்சியுடன் இது நிறைவேற்றப்படவுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதும் வட்டாரத்துக்கு ஒரு பள்ளி வீதம் 2,500 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படும்.

இதற்காக தனியார் புதிய பள்ளிகளை தொடங்கலாம். அல்லது தற்போதைய பள்ளிகளையே மாதிரி பள்ளிகளாக மாற்றிக்கொள்ளலாம். பள்ளியின் உள்கட்டமைப்பு வசதிக்காக மொத்த செலவில் 25 சதவீத தொகையை மத்திய அரசு மானியமாக ஆண்டுதோறும் வழங்கும்.

அரசு ஒதுக்கீடு

பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களில் 40% பேர் அரசால் ஸ்பான்சர் செய்யப்படுவர். எஞ்சிய 60% பேர் பள்ளி நிர்வாகத்தால் சேர்க்கப்படுவார்கள். அரசு ஸ்பான்சர் செய்யும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே பள்ளிக்கு செலுத்திவிடும். நிர்வாகப் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே நிர்ணயித்துக்கொள்ளலாம். ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகம்தான் சம்பளம் வழங்க வேண்டும்.

நுழைவுத்தேர்வு

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் கொண்ட இந்த மாதிரிப் பள்ளிகள்,கேந்திரிய வித்யாலயா பள்ளிகளைப் போல் செயல்படும். இப்பள்ளிகளில் நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அரசு ஸ்பான்சர் செய்யும் மாணவர்களுக்கும் இது பொருந்தும். மாதிரிப் பள்ளிகளுக்கு மத்திய அரசின் 25 சதவீத மானிய உதவி 10 ஆண்டுகளுக்கு கிடைக்கும். அதன்பிறகு அந்தந்த மாநில அரசுகள் உதவிசெய்ய வேண்டும்.

356 பள்ளிகள்

நாடு முழுவதும் தொடங்கப்படவுள்ள 2,500 மாதிரிப் பள்ளிகளில் தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்காக கல்வியில் பின்தங்கிய பகுதி அல்லாத இடங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. சென்னையில் எழும்பூர், அடையாறு, மயிலாப்பூர், புரசைவாக்கம், பெரியமேடு,ராயபுரம், திருவல்லிக்கேணி, தி.நகர், பெரம்பூர் ஆகிய 9 இடங்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

மாதிரிப் பள்ளிகள் தொடங்க விரும்பும் அறக்கட்டளைகள்,சங்கங்கள், தனியார் நிர்வாகங்கள் போன்றோரிடம் இருந்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஏற்கெனவே விண்ணப்பங்களை பெற்றுவிட்டது. மாதிரிப் பள்ளிகள் தொடங்குவதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் என்று தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தகவல் அனுப்பியிருக்கிறது. இதுவரை தமிழக அரசு தனது நிலைப்பாட்டை மத்திய அரசுக்கு தகவல் தெரிவிக்கவில்லை. மாதிரிப் பள்ளிகள் தொடங்க நிச்சயம் அரசு எதிர்ப்பு தெரிவிக்கும் என்று கல்வித்துறையினர் தெரிவித்தனர்.

அரசு பள்ளிகள் பாதிக்கும்

சாதாரணமாகவே தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்களின் பெற்றோர் படையெடுப்பது வழக்கம். ஆங்கில மோகம்தான் அதற்கு காரணம். தற்போது சி.பி.எஸ்.இ. பள்ளிகள் பக்கமும் பல பெற்றோரின் பார்வை திரும்பியிருக்கிறது. இந்த நிலையில்,கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான வசதியுடன் இலவசமாக படிக்கக்கூடிய வாய்ப்புடன் மாதிரி பள்ளிகள் வரும்பட்சத்தில் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளை இதுபோன்ற பள்ளிகளில் சேர்க்கவே ஆசைப்படுவார்கள். இதனால். அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் எச்சரிக்கிறார்கள்.

வேண்டுகோள்

மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகள் தொடங்கப்படுவது குறித்து பொதுப் பள்ளிமுறைக்கான மாநில மேடை அமைப்பின் தலைவர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “மத்திய அரசு-தனியார் கூட்டுமுயற்சியில் உருவாகும் மாதிரிப் பள்ளிகள் திட்டத்துக்கு தமிழக அரசு உடனடியாக தனது ஆட்சேபணையை தெரிவிக்க வேண்டும். இந்த திட்டத்திற்காக தனியாருக்கு மத்திய அரசு வழங்கும் 25 சதவீத மானியத்தொகையை தமிழக அரசு கேட்டுப்பெறவேண்டும். அதை இங்குள்ள அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பயன்படுத்திக ்கொள்ளலாம். மாதிரி பள்ளிகளில் கல்விக்கட்டணத்தை நிர்ணயிக்கும் அதிகாரம் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனால், கல்வி முற்றிலும் வணிகமயமாகிவிடும்” என்று குறிப்பிட்டார்.

இந்த திட்டத்தில், தமிழ்நாட்டுக்கு 356 பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது

தபால் துறை சார்பில், உடனடி "ஸ்டாம்ப்" வடிவமைக்கும் போட்டி, பள்ளி மாணவர்களுக்கு இடையியே நடத்தப்படுகிறது.

தபால் துறை சார்பில், அவ்வப்போது புதிய கருத்துகளுடன் ஸ்டாம்ப்கள் வடிவமைக்கப்படுவது உண்டு. சில நேரங்களில்,மாணவர்களிடையே இதற்கான போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் சிறந்த வடிவமைப்பு தேர்வுசெய்யப்படும்.

இந்தாண்டு, புதிய ஸ்டாம்ப்களை வடிவமைக்க, "உடனடி ஸ்டாம்ப் வடிவமைக்கும் போட்டி" நவ., 17ம் தேதி நடத்தப்படுகிறது.
இதில், தமிழக வட்டம் சார்பில், சென்னை, புதுச்சேரி, திருச்சி,மதுரை, கோவை மற்றும் சில நகரங்களில் நடக்கிறது. இதில்,நான்காம் வகுப்பு வரை ஒரு பிரிவும், ஐந்து முதல் எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவும், ஒன்பதாம் வகுப்பில் இருந்து, பிளஸ் 2வரை ஒரு பிரிவும் என, மாணவர்கள் மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டு, போட்டி நடத்தப்படுகிறது.
இந்தாண்டில், ஸ்டாம்ப் வடிவமைப்பிற்கு, "என் தாத்தா பாட்டியுடன் ஒரு நாள்" என்ற மைய கருத்து வழங்கப்பட்டு உள்ளது.
இப்போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக, 10ஆயிரம்; இரண்டாம் பரிசாக, 6,000; மூன்றாம் பரிசாக, 4,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
போட்டி நடக்கும் இடம் மற்றும் பதிவு குறித்து, அந்தந்த பகுதியில் உள்ள தபால் நிலையங்களின் முதுநிலை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளை அணுகலாம். அல்லது, 044- 2852 0509 / 2858 7912 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இந்த தகவல்களை, தமிழக வட்ட தலைமை தபால் துறை தலைவர் சித்ரா தேவி தெரிவித்து உள்ளார்.

அலுவலக பணிகளுக்கு ஆசிரியர்களை பயன்படுத்தக் கூடாது - நாமக்கல் DEEO ஆணை