திருக்குறள்

11/11/2013

தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை சார்பாக ஏழை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித்தொகை, வரும் கல்வியாண்டு முதல் உயர்த்தி வழங்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை உயர்வு

அதன்படி, இனி இளநிலை பட்டப்படிப்பு மாணவருக்கு ரூ 500, முதுகலைப் பட்டப் படிப்பு மாணவருக்கு ரூ.600ம், பி.எச்டி. மாணவருக்கு ரூ.800ம் வழங்கப்பட உள்ளது.

பிஎச்டி மாணவர்களுக்கு ரூ.1500 மற்றவர்களுக்கு ரூ.500ம் உயர்த்தப்படுகிறது. அதே போல் இதுவரை 450 மாணவர்களுக்கு வழநங்கப்பட்ட உதவித்தொகை, இனி 500 பேருக்கு வழங்கப்படும். இந்த உதவித்தொகையை பெற மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சமாக இருக்க வேண்டும். மாணவர், 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும. மேலும், தற்போது முதலாம் ஆண்டு சேர்ந்துள்ள மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.


இதற்கான விண்ணப்பத்தைப் பெற ரூ.10 அஞ்சல்தலை ஒட்டிய விலாசமிட்ட உறையை கௌரவச் செயலாளர், தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை, ராணி சீதை மன்றம், 6வது தளம், எண் 603, அண்ணா சாலை, சென்னை-600006 என்ற முகவரிக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பிக்க நவம்பர் 30 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டண விவரம்: மொபைல் எண் வாங்கும் பணி துவக்கம்.

மின் கட்டண விவரங்களை, நுகர்வோருக்கு, எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்க, அவர்களிடம் இருந்து, மொபைல் எண் வாங்கும் பணியை, மின்சார வாரியம் துவக்கிஉள்ளது.தமிழகத்தில், குடியிருப்பு, தொழிற்சாலை, விவசாயம் என, மொத்தம், 2.44 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.

20 நாட்களுக்குள்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மூலம், மின் பயன்பாடு குறித்த விவரம், கணக்கு எடுக்கப்பட்டதில் இருந்து, 20 நாட்களுக்குள் 
கட்டணத் தொகையை செலுத்த வேண்டும். மின் வாரிய கணக்கீட்டு பிரிவு ஊழியர்கள், மின் கட்டண தொகை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வீடுகளுக்கு செல்லும் போது, நுகர்வோர் இல்லை என்றால், தகவல்பெறுவதில் சிக்கல் நிலவுகிறது. இதனால், குறிப்பிட்ட காலத்திற்குள் மின் கட்டணத்தை செலுத்த முடியாமல் போவதால், அபராதத்துடன் செலுத்த வேண்டிய நிலைஏற்படுகிறது. இதையடுத்து, எஸ்.எம்.எஸ்., மூலம் மின் கட்டண விவரத்தை, நுகர்வோருக்கு தெரியப்படுத்த மின்சார வாரியம் முடிவு செய்தது.

விரைவில் அறிமுகம்:

இத்திட்டத்திற்கான பணிகள், தற்போது, இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், விரைவில் இந்த சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, மின் நுகர்வோரிடம் இருந்து, மொபைல் எண் வாங்கும் பணியை, மின்சார வாரியம் துவக்கியுள்ளது. இது குறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,'அரசிடம் அனுமதி பெற்ற பின், எஸ்.எம்.எஸ், சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும்' என்றார்.

சுற்றறிக்கை தயார்:

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில், தங்களின் மொபைல் போன் எண்ணை பதிவு செய்யும் மின் நுகர்வோருக்கு, மதிப்பு கூட்டு சேவையாக, எஸ்.எம்.எஸ்., மூலம், மின் கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்த கடைசி நாள் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படும். ஆகையால், மின் நுகர்வோர் இவ்வசதியை பெற தங்களின் மொபைல் போன் எண்ணை பிரிவு அலுவலகங்களில், பதிவு செய்து பயன்அடையலாம்' என்ற சுற்றறிக்கை, நுகர்வோருக்கு தெரியப்படுத்தும் வகையில், மின் வாரியம் மூலம், அனைத்து பிரிவு அலுவலகங்களும் அனுப்பும் பணி துவங்கியுள்ளது.

மொகரம் பண்டிகை 14.11.2013 தேதிக்கு பதிலாக 15.11.2013க்கு தேதி மாற்றம் - அரசு உத்தரவு

மொஹரம் பண்டிகையை முன்னிட்டு வரும் 15ம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. முன்னதாக நவம்பர் 14ம் தேதி மொஹரம் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை என அறிவிக்கப்பட்டிருந்தது. பிறை தென்படாததால் நவம்பர் 15ம் மொஹரம் என தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

அனைத்து தொடக்க/நடுநிலை மற்றும் மழலையர் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் புகைப்படத்தை 15.11.2013 க்குள் கல்வித் தகவல் மேலாண்மை முறைமைக்காக (EMIS) கணினியில் பதிவேற்றம் முடிக்க தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

பாரதியார் பல்கலைக்கழகம் - தொலைநிலையில் பி.எட். படிப்பு

கோவையில் இயங்கி வரும் பாரதியார் பல்கலைக்கழகம் தனது தொலைநிலை பி.எட். படிப்பிற்கான சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்பு: பி.எட்.
காலம்: 2 ஆண்டுகள்
தகுதி :
குறைந்தது 2 வருட ஆசிரியப் பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.
ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை அல்லது முதுநிலை படிப்பை முடித்திருக்க வேண்டும்.

முதுநிலை பொருளியல் மற்றும் வணிகவியல் படித்தவர்கள் இளநிலையிலும் அதே படிப்பை படித்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கும் முறை  
நுழைவுத்தேர்வின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கை நடைபெறும்.


விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதி நாள்: 28 பிப்ரவரி 2014.
நுழைவுத்தேர்வு நடைபெறும் நாள்: 30 மார்ச் 2014.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு www.b-u.ac.in என்ற இணையதளத்தைக் காணவும்.

ஒரே பெண் குழந்தையா? UGC கல்வி உதவி தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

"லஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!' "தினமலர்' நாளிதழில், திங்கள்தோறும், வெளியாகவிருக்கும் சிறப்பு பகுதி

இது, "தினமலர்' நாளிதழில், திங்கள்தோறும், வெளியாகவிருக்கும் புதிய பகுதி."நான், இந்த தேசத்தை நேசிக்கிறேன்; எனது கடமையை செய்ய, ஒருபோதும் லஞ்சம் வாங்கமாட்டேன்...'என, வெளிப்படையாக அறிவித்து, கண்ணியத்துடன் கடமையாற்றி, மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ விரும்பும் அரசு அதிகாரிகள், ஊழியர்களின் விவரம், இப்பகுதியில் வெளியாகும். விருப்பமுள்ள அதிகாரிகள், ஊழியர்கள் தங்களது பாஸ்போர்ட் அளவு போட்டோ, பெயர், வகிக்கும் பதவி, பணியாற்றும் துறை, தொலைபேசி எண் குறித்த விபரங்களை அனுப்பலாம்.

அரசு அதிகாரிகள், ஊழியர்கள் என்றாலே, "லஞ்சம் வாங்குபவர்கள்' என்ற எண்ணம், பெருவாரியான மக்களிடம் மேலோங்கியுள்ளது. குறிப்பிட்ட ஒரு சாராரின் லஞ்ச முறைகேடுகள், ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதும் கறை பூசச்செய்து விடுகிறது. இதனால், வெட்கித் தலைகுனியும் பலரும், "லஞ்சம் வாங்குவது போன்ற ஈனச் செயலில் நாங்கள் ஈடுபடுவதில்லை. ஒட்டுமொத்த பணியாளர்கள் மீதும் பழி சுமத்துவது நியாயமல்ல...' என, குமுறுகின்றனர். இவர்களின் மனக் காயத்துக்கு மருந்திடுவதே,

தேசிய கல்வி தினம்: அபுல் கலாம் ஆசாத்தை நினைவு கூர்வோம்

இந்தியாவில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின், கல்வி துறை அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்த நாளையே, ஒவ்வொரு ஆண்டும் தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.

1888ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி மௌலானா கைருதுனுக்கும், அலியாவுக்கு மகனாக பிறந்தார் மௌலான அபுல் கலாம் ஆசாத். அவரது கல்வியறிவை கெய்ரோவில் உள்ள அல் அசார் பல்கலைக்கழகத்தில் கற்றார். இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மௌலானா அபுல் கலாம் ஆசாத் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்றார். 1947 முதல் 1958 வரை கல்வி அமைச்சர் பதவியில் இருந்தார்.

சாகித்திய அகாடமி (1954), லலித் கலா அகாடமி (1954), கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார். ஆங்கிலேய ஆட்சியில் இந்திய கல்வியில் கலாச்சாரம் தொடர்பான அம்சங்கள் குறைவாக இருந்ததை உணர்ந்த அவர், அவற்றை வலுப்படுத்தும் முயற்சிகளில் இறங்கினார். கல்விக்கான மத்திய ஆலோசனை வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.

வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார். உருது, பார்சி, அரபு மொழிகளை கற்றுத் தேர்ந்தவராக இருந்தாலும் தேசிய மற்றும் சர்வதேச தேவைகளை முன்னிட்டு ஆங்கில மொழியை தொடர்ந்து பயன்படுத்தச் செய்தவர் ஆசாத். ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்றார்.

"மதவாதத்தை ஒரேடியாக குழி தோண்டிப் புதையுங்கள்" என்பதுதான் ஆசாத் மாணவர்களுக்கு எப்போதும் கூறும் அறிவுரையாகும். இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்ற கருத்தினைக் கொண்டிருந்தார் ஆசாத். அரபு, உருது, பார்சி ஆகிய மொழிகளில் மௌலான அபுல் கலாம் ஆசாத் பல நூல்களை எழுதியுள்ளார்.

தொழில்நுட்பக் கல்விக்கான அகில இந்திய கவுன்சிலை வலுவான அமைப்பாக மாற்றினார். 1951ல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐஐடி.,க்கள் அமைக்கப்பட்டன. 1955ல் திட்டமிடுதல் மற்றும் கட்டிட கலைக்கான பள்ளி ஏற்படுத்தப்பட்டது.

நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை...ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது என்றார். நாட்டின் கல்வித் துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக பொறுப்பேற்று 11 ஆண்டுகள் இத்துறையை வழி நடத்திச் சென்றார்.

அனைத்து மாணவர்களுக்கும் சாதி, மத, இன பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் ஆசாத். 14வயது வரை அனைத்து குழந்தைகளுக்கும் இலவச கட்டாயக் கல்வி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெண் கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார். பல்கலைக் கழகங்களுக்கு கல்வித்துறை சார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.

மெளலானா அபுல் கலாம் ஆசாத் தனது 69ம் வயதில் தில்லியில் காலமானார். இந்திய‌ நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதான "பாரத ரத்னா" இவரது மறைவுக்கு பின் 1992ல் வழங்கப் பட்டது.!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்-எஸ்இ நுழைவுத்தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட்., நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

கடந்த ஜூன் மாதத்தில் பி.எட்-எஸ்இ., படிப்பில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.

தேர்வு முடிவுகளை அறிய www.tnou.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

09/11/2013

திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களை பிற மொழிகளில் மொழி பெயர்த்த வீரமா முனிவர் பிறந்த தினம் இன்று (1680)

வீரமாமுனிவர் பிறந்தநாள் - சிறப்பு பகிர்வு


கான்ஸ்டன்டைன் ஜோசப் பெஸ்கி என்பது இவரின் இயற்பெயர் .கிறிஸ்துவ மதத்தை இங்கே பரப்ப வந்தவர் அதற்கு இம்மக்களின் மொழியை கற்கவேண்டும் என கற்க ஆரம்பித்தவர் தமிழ் மீது தீராக்காதல் கொண்டார் என்பது வரலாறு .

தைரியநாதசாமி என்று தம் பெயரை மாற்றிக்கொண்டு பின்னர் அது வடமொழி சொல் என்றறிந்து வீரமாமுனிவர் என்று தன் பெயரை மாற்றிக்கொண்டார். 23 நூல்களை தமிழில் இயற்றிய இவர்
கிறிஸ்துவின் கதையை தேம்பாவணி என எழுதினார் . அந்நூலில் கதை மாந்தர்களின் பெயர்களை தமிழ்படுத்தினார். எடுத்துக்காட்டாக ஜோசப் என்பதை வளன் என்று மாற்றினார். இதற்கு மூல மொழியின் அர்த்தத்தை பயன்படுத்தினார் என்பது அவரின் உழைப்பை விளக்கும். திருக்குறளின் அறத்துப்பால் மற்றும் பொருட்பாலை இலத்தீன் மொழியில் மொழிபெயர்த்தார் .

தமிழில் செய்யுள்கள் மட்டுமே வழங்கிவந்த காலத்தில் உரைநடை காப்பியமாக இவர் பல நூல்களை இயற்றினார் .தமிழ் இலக்கணத்தை விளக்கும் தொன்னூல் விளக்கத்தை எழுதினார் .அதில் கொடுந்தமிழ் எனப்படும் பகுப்பளித்து பேச்சுத்தமிழை விவரிக்க முதல் முயற்சியை எடுத்தார் அவர் .தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி ஆகிய நூல்களையும் ஐரோப்பிய மொழியில் வெளியிட்டார் .இவர் எண்ணற்ற தமிழ் சுவடிகளை தேடி அலைந்ததால் 'சுவடி தேடிய
சாமியார்' எனப்பெயர் பெற்றார் தமிழ் கற்க ஏதுவாக தமிழ் - லத்தீன் அகராதியை உருவாக்கினார். அதில் சுமார் 1000 தமிழ்ச் சொற்களுக்கு லத்தீன் விளக்கம் அளிக்கப்பட்டது. இதுவே முதல் தமிழ் அகரமுதலி ஆகும்.

பின்பு 4400 சொற்களைக் கொண்ட தமிழ்-போர்த்துக்கீய அகராதியை உருவாக்கினார்.தமிழில் உயிர் எழுத்துக்களின் அருகில் ர சேர்த்தும் (அ:அர, எ:எர) . உயிர்மெய் எழுத்துகளின் மேல் குறில் ஒசைக்குப் புள்ளி வைத்துக்கொண்டிருந்தார்கள். அவைகளின் நெடில் ஓசைக்கு புள்ளி வைக்காமல்
விட்டார்கள். தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்தப் பழைய முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி "ஆ, ஏ" எனவும் , நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் ( கே ,பே ) வழக்கத்தை உண்டாக்கினார்.

பிறப்பு, இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம்: சென்னை மாநகராட்சி மேயர் தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சியின் மூலம் பிறப்பு – இறப்பு சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. மாநகராட்சியின் இணைய தளத்தில் இந்த சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் விண்ணபித்து பெற்றுக் கொள்ளலாம்.இதுவரை பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டன. இனிமேல் தமிழிலும் கிடைக்கும் வகையில் மாநகராட்சி புதிய ஏற்பாட்டினை செய்துள்ளது.பிறப்பு – இறப்பு சான்றிதழ் தமிழில் பதிவிறக்கம் செய்யும் வசதியை ரிப்பன் மளிகையில் இன்று மேயர் சைதை துரைசாமி தொடங்கி வைத்தார்.www.chennaicorporation இணையதளத்தில் இன்று முதல் தமிழ் பிறப்பு – இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யலாம். இதில் பிறந்த மற்றும் இறந்த தேதி மற்றும் நேரமும் குறிப்பிடப்பட்டு இருக்கும் எத்தனை மணிக்கு குழந்தை பிறந்தது என்பதை மருத்துவ அறிக்கையின் அடிப்படைப் பதிவு செய்து வழங்கப்படுகிறது.ஏற்கனவே, உள்ள பிறப்பு– இறப்பு சான்றிதழ்களில் தேதி மட்டுமே இடம் பெறும். நேரம் இடம் பெறாது.பொதுமக்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு மேயர் சைதை துரைசாமி கேட்டுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி கமிஷனர் விக்ரம்கபூர், துணை கமிஷனர் (சுகாதாரம்) பி.ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

9-11-2013 இன்று முதல் தானிய லட்டு அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ‌தொடக்கப்பள்ளிகளில்(1-5வகுப்புக்கு மட்டும்)வ‌ழங்கப்படுகிறது.இதனை மாவட்டஆட்சித்தலைவர் தொடங்கிவைத்தார்


இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் மாற்றம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து என 2 கோரிக்கைகளை முன் வைத்து போராட டிட்டோஜாக் கூட்டத்தில் முடிவு

தமிழகத்தின் தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர் அமைப்பின்அனைத்து சங்கங்களின் மாநிலபொதுச்செயலர்கள்,தலைவர்கள்,பொருளாளர்கள் ஆகியோர் கலந்துகொண்ட தொடக்கக்கல்வி இயக்கங்களின் கூட்டுநடவடிக்கைக்குழுவின்( TAMILNADU ELEMENTARY TEACHERS ORGANIZATION JOINT ACTION COMMITTY )பொதுக்குழு கூட்டம் 9/11/13 அன்று காலை 11.00 மணியளவில்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கத்தின்மாநிலஅலுவலகமான ஜே.எஸ்.ஆர்மாளிகையின் முதல் தள கூட்டஅரங்கில் கூடியது.


கூட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர் சங்கங்கள்,

1.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
2.தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்
3.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
4.தமிழக ஆசிரியர் கூட்டணி
5.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
6.தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
மற்றும்
7.தமிழ்நாடு தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் .
ஆகியன.

சுமார் இரண்டு மணிநேர கருத்துரையாடலுக்கு பின்னர்

அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவது
கடந்த கால நிகழ்வுகளை மறந்து ஒற்றுமையுடன்
"WE FOR SECONDARY GRADE TEACHERS" என்ற கோட்பாட்டின்படிஇடைநிலை ஆசிரியர் வாழ்வாதாரப்பிரச்சினையானஊதியக்குறைபாட்டினைக்களைய பாடுபடுவது என ஒருங்கிணைந்தகருத்துடன்
1.இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தினை மத்திய அரசுவழங்குவதுபோல
மாநில அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும்


2.பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதியதிட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்
என்ற இரு கோரிக்கைகள் மட்டும் டிட்டோ ஜாக் -ன் கோரிக்கைகளாகஅனைவராலும் ஏகமனதாக ஏற்று கொள்ளப்பட்டது

அடுத்தகட்டமாக

முதலில் தொடக்கக்கல்வித்துறை சார்ந்த சங்கங்கள் இனைந்துபோராட முடிவெடுத்துள்ளதை அரசுக்கும் ,கல்வித்துறை சார்ந்தஅமைச்சர்கள், அதிகாரிகளுக்கும் முரையாக தெரியப்படுத்தும்விதமாக வரும் 13/11/13 அன்று
மாண்புமிகு முதலமைச்சர்,
மாண்புமிகு நிதியமைச்சர்,
மாண்புமிகு கல்வியமைச்சர், ஆகியோர்களுக்கும்,
தமிழக அரசின் தலைமைச்செயலர்,
தமிழக அரசின் நிதிதுறைச் செயலர்,
தமிழக அரசின் கல்வித்துறைச் செயலர்,
மற்றும்
கல்வித்துறை சார்ந்த இயக்குனர்கள்
அனைவரையும்
7 சங்க பொறுப்பாளர்கள் ஒன்றினைந்து சந்தித்து கோரிக்கைமனுக்கள் அளிப்பது என்றும்,
வரும் 20/11/13 அன்று
அடுத்தகட்ட நடவடிக்கைகள் பற்றியும், மாவட்ட ,வட்டார அளவில்டிட்டோஜாக் கமிட்டிகள் அமைப்பது குறித்தும் பேச்சுநடத்த ஏதுவாகமாநில டிட்டோ ஜாக் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகமான “முத்துசாமிஅரங்கில்” நடைபெறும் என்றும் முடிவாற்றப்பட்டது,

அது சமயம் அனைத்து சங்கங்களின் மாவட்ட பொறுப்பாளர்களின்(தலைவர்,செயலர்,பொருளர்) பட்டியல் கொண்டுவரக்கேட்டுக்கொள்ளப்பட்டது

மேலும் டிட்டோ ஜாக் மாநில அமைப்பின் தொடர்பு அலுவலகமாக

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அலுவலகமே செயலாற்ற அனைவராலும் தீர்மானிக்கப்பட்டது.