திருக்குறள்

02/01/2014

டிட்டோஜாக் பொறுப்பாளர்கள் பள்ளிக்கல்வி அமைச்சருடன் சந்திப்பு

டிட்டோஜாக் சார்பில் அத்திலுள்ள 7 சங்க பொறுப்பாளர்களும் 31.12.2013 செவ்வாய் காலை 11 மணியளவில் கல்வி அமைச்சரை சந்தித்தனர். நேரமின்மை காரணமாகவும்,அவசர வேலையின் காரணமாகவும் விரிவாக கோரிக்கை குறித்து விவாதிக்க முடியாமைக்கு வருத்தம் தெரிவித்ததுடன் பிரிதொரு நாளில் விளக்கமாக கேட்பதாக கூறிய அமைச்சர் 7 கோரிக்கைகள் அடங்கிய டிட்டோஜாக் மனுவினை பெற்றுக்கொண்டார்.

பின்னர் நீண்ட நேர காத்திருப்புக்கு பின்னர் நிதிச்செயலர் அவர்களை சந்தித்து டிட்டோஜாக்கின் கோரிக்கை மனுவினை அளித்தனர்.அப்போது பள்ளிக்கல்விச்செயலர் அவர்களும் நிதிச்செயலருடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது, அப்பொழுது இரட்டைப்பட்டம் மற்றும் மூன்று வருட பட்டப்படிப்பு சார்பான வழக்கறிஞ்சர்கள் வேறு ஒரு பணி நிமித்தமாக ஆஜாராகாததால் வருகிற 7ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்

01/01/2014

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் நாளை (2.1.2014 ) விசாரணைக்கு வருகிறது

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நாளை (2.1.2014 ) சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் வரிசை எண்50 ல் வழக்கு விசாரணைக்கு வருகிறது.

மேலும் ஏற்கனவே அரசு சார்பில் மூன்று வருட பட்டப்படிப்பே சிறந்தது என பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.இனி வருங்காலங்களில் மூன்று வருட பட்டப்படிப்பு வேலை வாய்ப்பு மற்றும் பதவி உயர்வுக்கு எடுத்துகொள்ளப்படும் என்று அரசு முடிவு எடுத்துள்ளதால் நாளை வழக்கு முடிவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.!

நடுநிலை பள்ளி தலைமையாசிரியருக்கு பி.எட் ஊக்க ஊதியம் தரலாமா ? இயக்குநர் தெளிவுரை

மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க உத்தரவு



மாற்றுத்திறனாளிகளுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மையங்கள் மாவட்ட அளவில் திறக்க இடங்களை தேர்வு செய்து அனுப்புமாறு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மையம் உத்தரவிட்டுள்ளது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பயிற்சி நிறுவனம் அனுப்பி உள்ள உத்தரவு: பி.எட் படித்துப் பணியில்லாமல் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு எளிதில் பணி கிடைக்க ஏதுவாக, தனியாக ஒரு சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும். தேர்வில் தகுதி பெறும் பி.எட் பட்டதாரிகள் தற்போதுள்ள பின்னடைவு காலி பணியிடங்களிலும், இனிமேல் ஏற்படக்கூடிய காலி பணியிடங்களிலும் பணியமர்த்தப்படுவர். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பார்வையற்றவர்களுக்கு மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் மூலம் சிறப்புப் பயிற்சி வழங்க பள்ளிக் கல்வித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை குறித்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் ஆசிரியர் தகுதி தேர்விற்கான சிறப்பு பயிற்சிக்கு திட்டமிட உத்தரவிடப்பட்டுள்ளது.

2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 10% முதல் 11% வரை உயரக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது

நவம்பர் 2013 மாதத்திற்கான விலைவாசி உயர்வு குறியீட்டு எண் நேற்று (31.12.2013) வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி உயர்வு 99.12 சதவீதமாக உள்ளது. அதேபோல் வருகிற டிசம்பர் மாதத்திற்கான விலைவாசி குறியீட்டு எண் 100 சதவீதத்திற்கு மேல் உயரக்கூடும்.எனவே 2014 ஜனவரி முதல் அகவிலைப்படி உயர்வு 100% முதல் 101% வரை உயரக்கூடும். டிசம்பர் 2013 மாத விலைவாசி உயர்வு குறியீட்டு எண் 31.01.2014 அன்று வெளியிடப்படும். அதன் பிறகே அகவிலைப்படி எத்தனை சதவீதம் உயரும் என்பது உறுதியாக தெரிய வரும். எப்படிப்பார்த்தாலும் 01.01.2014 முதல் அகவிலைப்படி 100%க்கு குறையாது என உறுதியாக நம்பலாம்.

தமிழகத்தில் 'ஆதார்' எண் பணி ஜனவரி இறுதி வரை நீட்டிப்பு

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில், ஆதார் எண் உருவாக்கும் பணி, 50 சதவீதத்துக்கும் கீழ் இருப்பதால், ஜனவரி இறுதி வரை, இப்பணி நீடிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை, இம்முடிவை எடுத்துள்ளது.

ஆதார் அட்டை உருவாக்கும் பணி, நாடு முழுவதும் தீவிரமாக நடந்து வருகிறது. ஆதார் அட்டை தயாரிப்பதற்கு முன், ஒவ்வொரு குடிமகனுக்கும், தனி எண் ஏற்படுத்தப்படுகிறது. இதற்காக, புகைப்படம் எடுத்தல், கைவிரல் ரேகை பதிவு, விழிரேகை பதிவு ஆகியவை, தமிழகத்தில், 2011 ஜனவரியில் துவங்கப்பட்டது.

மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் இப்பணி நடக்காமல், சில மாவட்டங்களைத்  தேர்வு செய்து முதல் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாநிலம் முழுவதும் இப்பணி நீட்டிக்கப்பட்டு, நடந்து வருகிறது.
ஆதார் எண் உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்ட மாவட்டங்களில், 70 சதவீதம் பேருக்கு, ஆதார் எண் உருவாக்கப்பட்டிருந்தால், அம்மாவட்டத்தில் ஆதார் எண் உருவாக்கும் பணி நிறுத்தப்படுகிறது.இதன்பின், நிரந்தர ஆதார் மையங்கள் துவங்கப்பட்டு, விடுபட்டவர்களுக்கு ஆதார் எண் உருவாக்கும் பணி நடக்கும் என, அறிவிக்கப்பட்டது.

சென்னை, திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பூர், கிருஷ்ணகிரி உள்ளிட்ட, 10 மாவட்டங்களில் இறுதி கட்டத்தில், ஆதார் எண் உருவாக்கும் பணி துவங்கப்பட்டது.இதில், சென்னை மாவட்டத்தில், 42 சதவீதம் பேருக்கே, ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக துவங்கப்பட்ட மாவட்டங்கள் எதிலும், 70 சதவீதம் என்ற இலக்கு எட்டப்படவில்லை.இந்நிலையில், டிச., 31ம் தேதியுடன், ஆதார் எண் உருவாக்கும் பணி முடிக்கப்படும். இனிமேல், நிரந்தர மையங்கள் துவங்கி, ஆதார் எண் உருவாக்கும் பணி நடக்கும் என, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை அறிவித்திருந்தது.தமிழகத்தில்,  இறுதியாகத் துவங்கிய மாவட்டங்களில், 70 சதவீத இலக்கு எட்டப்படாத நிலையில், ஆதார் எண் உருவாக்கும் பணியை, மேலும் நீட்டிக்க வேண்டும் என, தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இதையடுத்து, ஜனவரி, 31ம் தேதி வரை, ஆதார் எண் உருவாக்கும் பணியை நீட்டிக்க, தேசிய அடையாள எண் உருவாக்கும் துறை முடிவு செய்துள்ளது.

தமிழகத்தில், அரியலூர், நாகபட்டினம் மாவட்டங்களில், ஆதார் எண் உருவாக்கம், 80 சதவீதத்தை கடந்துள்ளதாகவும், அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் எண்ணை நாடு முழுவதும் பல்வேறு பணிகளுக்கு அடிப்படையாக மற்றும் ஏற்க வசதியாக, ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர்களில் ஏற்படும் தவறுகளை திருத்தவும் வசதிகள் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை மாவட்டத்தில், 42 சதவீதம் பேருக்கே, ஆதார் எண் உருவாக்கப்பட்டுள்ளது. இறுதியாக துவங்கப்பட்ட மாவட்டங்கள் எதிலும், 70 சதவீதம் என்ற இலக்கு எட்டப்படவில்லை
SASTRA UNIVERSITY B.Ed., - 2013 EXAM RESULTS PUBLISHED


CLICK HERE..
TO VIEW YOUR RESULTS .

TNOU - B.Ed & B.Ed (SE) Term End Examination December 2013 Results published


CLICK HERE...

மாணவர்கள் சேர்க்கை சரிந்தது : ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் தொடங்க ஆர்வம் இல்லை

ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பி.எட் கல்லூரிகள், உடற்கல்வி கல்லூரிகள் ஆகியவற்றை புதியதாக தொடங்க வேண்டும் என்றால் தேசிய ஆசிரியர் கல்வி கழகத்திடம் (என்சிடிஇ) அனுமதி பெற்று மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககத்தில் அங்கீகாரம் பெற வேண்டும்.அப்படி தொடங்கப்படும் கல்லூரிகள் பள்ளிகள் அனைத்தும் என்சிடிஇ விதிகளுக்கு கட்டுப்பட்டவை. இந்நிலையில் 2009ல் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தபோது அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கும்போது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க வேண்டும் என்று அறிவித்தது. 

அதனால் பி.எட் படித்தவர்கள் தகுதித் தேர்வு எழுத ஆர்வம் காட்டினர். மேலும் பி.எட் கல்லூரிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேரத் தொடங்கினர். ஆனால் 2010-11ல் என்சிடிஇ, 13 மாநிலங்களில் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், கல்லூரிகள் தொடங்குவதை நிறுத்தி வைத்தது. புதிய கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. 

இதற்கிடையே கர்நாடக மாநிலத்தில் இயங்கும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் படித்து பெறும் சான்று தமிழகத்தில் செல்லாது என்று அரசு தெரிவித்துவிட்டது. மேலும், தமிழகத்தில் ஆசிரியர் பயிற்சி முடித்து வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியாலும், தகுதித் தேர்வு எழுதித்தான் ஆசிரியர் வேலை பெற முடியும் என்ற நிலையும் ஏற்பட்டதால் ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை சரியத் தொடங்கியது. அவற்றின் மவுசு குறையத் தொடங்கியது. 

இதனால் கடந்த ஆண்டில் 100க்கும் மேற்பட்ட தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டன. தற்போதைய நிலவரப்படி அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 33, நிதியுதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 40 மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 450 தான் உள்ளன. ஏற்கனவே தனியார் ஆசிரியர் பள்ளிகள் 750க்கும் மேற்பட்டவை இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், நாட்டில் உள்ள ஆசிரியர் பயிற்சி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் சில கட்டுபாடுகளை கொண்டுவருவது தொடர்பாக புள்ளி விவரங்களை என்சிடிஇ சேகரிக்கத் தொடங்கியது. இதற்காக கடந்த ஜூலை மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் அனைத்து ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் தங்கள் பள்ளி பற்றிய அனைத்து விவரங்களையும் என்சிடிஇக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், அதை சரிபார்த்த பிறகு புதிய பள்ளிகள் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்துவிட்டது. 

ஆனால் தமிழகத் தில் உள்ளநிலையை அறிந்த தனியார்கள், புதிய பள்ளிகள் தொடங்க யாரும் விருப்பம் காட்டவில்லை. இதனால் தமிழகத்தில் இருந்து விண்ணப்பங்கள் வரவில்லை என்று என்சிடிஇ தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இந்த ஆண்டும் சில தனியார் ஆசிரியர் பயிற்சி பள்ளி களை மூட திட்டமிட்டுள்ளனர். 

தவிரவும், அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகளில் குறைந்த அளவே மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த ஆண்டும் தனியார் பள்ளிகள் மூடப்பட் டால் அரசுப் பள்ளிகளில் மொத்தமே 4000 பேராவது படிப்பார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குறை ந்த பட்ச மாணவர்களை வைத்துக் கொண்டு அரசுப் பள்ளிகளை எப்படி நடத்துவது என்று அரசும் யோசித்து வருகிறது. 

அதனால் வரும் காலத்தில் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளிகளும் மூடப்படும் சூழல் ஏற்படும் என்று கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எக்ஸ்ட்ரா தகவல்

மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனத்துக்கு கடந்த ஆண்டு மொத்தம் ரூ.63.46 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் ரூ.65.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் '104' முதலுதவி சேவை விரைவில் அறிமுகம்


தமிழகம் முழுவதும் 104 அவசரகால முதலுதவி சேவை திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் அவசரகால ஆம்புலன்ஸ் சேவை 108 என்ற ஹெல்ப் லைன் எண்ணுடன் இயங்கி வருகிறது. இந்நிலையில், அவசரகாலங்களில் முதலுதவி செய்ய முடியாமல் பலர் உயிரிழப்பை சந்தித்து வருகின்றனர். ஆம்புலன்ஸ் வந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்குள் முதலுதவி கிடைக்காதவர்கள் உயிரிழப்பை சந்திக்கின்றனர். இதனை தவிர்க்க 104 என்ற ஹெல்ப் லைன் சேவை எண்ணுடன் முதலுதவி ஆலோசனை கூறும் மையம் ஒன்று தமிழகத்தில் விரைவில் தொடங்கப்படுகிறது. இதற்காக அமைக்கப்படும் மையத்தில் டாக்டர்கள் கொண்ட குழு தயார் நிலையில் இருக்கும். 104 ஹெல்ப் லைன் எண் மூலம் தொடர்பு கொள்ளும்போது, மையத்தில் உள்ள டாக்டர்கள், இருக்கும் இடத்தில் உள்ள வசதிகளை கொண்டே பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி அளிக்கும் வழிமுறைகளை கூறுவர். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓரிரு நிமிடங்களில் முதலுதவி சிகிச்சை கிடைக்கும். அதன்பிறகு ஆம்புலன்ஸ் அல்லது வேறு வகையிலோ மருத்துவமனைகளுக்கு பாதிக்கப்பட்டவர்களை கொண்டு சென்று காப்பாற்ற முடியும். இதன் மூலம் முதலுதவி கிடைக்காமல் இறப்பவர்களின் விகிதத்தையும் குறைக்க முடியும். இந்த சேவையை முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கி வைக்க இருந்ததாகவும், ஆனால், பல மாவட்டங்களில் அதற்கான தயாரிப்புகள் முடிவடையாததால் தடை ஏற்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த சேவை அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தொகை உயர்த்த சங்கம் வலியுறுத்தல்


பொங்கல் போனஸ் தொகையை உயர்த்தி வழங்க சங்கம் வலியுறுத்தியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்பட்டு வருகிறது. சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கு ரூ.3 ஆயிரமும், ஏ மற்றும் பி பிரிவு பணியாளர்கள், சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் குறைந்தபட்சம் 240 நாட்களுக்கு குறையாமல் பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர் ஆகியோருக்கு ரூ.1000 சிறப்பு போனசாக வழங்கப்பட்டு வருகிறது. விலைவாசி உயர்வை கவனத்தில் கொண்டு இந்த ஆண்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு பணியாளர்களுக்கும் எவ்வித நிபந்தனையுமின்றி ஒரு மாத ஊதியம் போனசாகவும், ஏ மற்றும் பி பிரிவு பணியாளர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், கிராம உதவியாளர்கள், தொகுப்பூதிய பணியாளர்கள், ஒப்பந்த பணியாளர்கள் மற்றும் குறைந்தபட்சம் 240 நாட்களுக்கு குறையாமல் தொடர்ந்து பணியாற்றும் தினக்கூலி பணியாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் சிறப்பு போனஸாக வழங்க அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மது விலக்கு கோரி 4ம் வகுப்பு மாணவி அதிரடி உண்ணாவிரதம்.. மதுரையில் பரபரப்பு


குடிக் கொடுமையால் நானும், எனது குடும்பமும் கஷ்டப்படுவதைப் போல தமிழகத்தில் யாரும் கஷ்டப்படக் கூடாது. அதற்கு தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் 4ம் வகுப்பு மாணவி ஒருவர் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதத்தில் குதித்தது அனைவரையும் பரபரப்படைய வைத்து விட்டது. மதுக் கொடுமை எந்த அளவுக்கு தமிழகத்தில ஆழ வேறூண்றி மக்களை அழித்து வருகிறது என்பதற்கு இது ஒரு சோகமான உதாரணம். பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே 4-ம் வகுப்பு மாணவி ஜோதிமணி செவ்வாய்க்கிழமை காலை உண்ணாவிரதம் மேற்கொண்டார். இவரது தந்தை பெயர் மோகன்ராஜ். இவரும் உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டார். இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஏன் என்பது குறித்து மாணவி ஜோதிமணி நக்கீரனுக்கு அளித்த பேட்டியில், எனது அப்பா குடிப்பழக்கத்துக்கு ஆளானார். அவர் அந்த பழக்கத்திற்கு ஆளானபோது எங்க குடும்பம் ரொம்ப கஷ்டப்பட்டது. எனக்கு ஸ்கூல் பீஸ் கூட கட்டமுடியல. ஸ்கூல் படிப்பை நிறுத்தலாமா என்ற நிலைமை கூட வந்தது. இப்ப எங்க அப்பா நல்லாயிட்டாரு. எங்க அப்பா குடிக்கிறதில்ல.எங்க குடும்பத்தைப் போல வேறு எந்த குடும்பமும் கஷ்டப்படக் கூடாது. என்னைப்போல எந்த பசங்களும், யாரும் கஷ்டப்படக் கூடாது. எந்த பசங்களும் படிப்பை நிறுத்திவிடக் கூடாது. அதுக்காகத்தான் இந்த உண்ணாவிரதம். எங்க அப்பா போல மற்ற அப்பாக்களும் இந்த பழக்கத்தை நிறுத்திவிட்டு என்னைப் போன்ற குழந்தைகளை நன்றாக பாத்துக்கனும். தமிழக அரசும் தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்றார் ஜோதிமணி. உடன் இருந்த தந்தை மோகன் ராஜ் கூறுகையில், நான் குடிப்பழகத்தில் இருந்து மீண்டுள்ளேன். என்னைப்போல அந்த பழக்கத்திற்கு ஆளானவர்கள் மீளவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு அன்று மதுவிற்பனை கூடிக்கொண்டே இருக்கிறது, அரசே குடி குடி என்று சொல்வதைப்போல இருக்கிறது, குடியால் எத்தனை குடும்பங்கள் சீரழிந்துள்ளது என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். தமிழக அரசும் மதுவிலக்கை அமுல்படுத்தவேண்டும். மக்கள் மகிழ்ச்சியடையும் விதத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருவதாக கூறும் தமிழக முதல்வர், இந்த மதுவிலக்கையும் அமுல்படுத்தவேண்டும் என்றார். சிந்திக்க வைக்கிறது இவர்களின் கருத்தும், அறப் போராட்டமும்!.

ரூபாய் நோட்டில் பேனாவில் எழுதினாலும் செல்லும், ஆனாலும் எழுதாதீங்க.. ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டில் பேனாவில் எழுதினாலும் செல்லும், ஆனாலும் எழுதாதீங்க..  ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டுக்களில் எழுதினால் அது செல்லாது என்று இதுவரை முடிவெடுக்கப்படவில்லை. இருப்பினும் ரூபாய் நோட்டுக்களில் எழுதும் போக்கு குறைய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது. ரூபாய் நோட்டுக்களை எப்படியெல்லாமோ நம்மவர்கள் பயன்படுத்துகிறார்கள். காதலிக்கு ஐ லவ் யூ சொல்வதற்கும், காதலி பெயரை எழுதுவதற்கும், வீட்டுக் கணக்கை எழுதுவதற்கும், எதையாவது படம் வரைவதற்கும் தாராளமாக பயன்படுத்துகிறார்கள். கையில் பேப்பர் இல்லாவிட்டால், ரூபாய் நோட்டில் முகவரியைக் குறித்துக் கொள்வது, செல்போன் எண்ணை எழுதுவது என்று கூட சிலர் திகிலடிப்பது வழக்கம். இந்த நிலையில்தான் ஜனவரி 1ம் தேதி முதல் ரூபாய் நோட்டுக்களில் பேனாவில் எழுதியிருந்தால் அந்த நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியானது. இதனால் பலர் பீதியடைந்தனர். ஆனால் அபபடியெல்லாம் இதுவரை தடை விதிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி விளக்கம் கொடுத்துள்ளது. பேனாவால் எழுதப்பட்ட ரூபாய் நோட்டுக்கு தடை விதிப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எதுவும் எழுதாமல் ரூபாய் நோட்டை கையாளும் போக்கு அதிகரிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. கேட்டுக்கங்க மக்களே.. ரூபாய் நோட்டை பாழ்படுத்தாமல் இருக்க பழகிக் கொள்ளுங்க.