திருக்குறள்

03/01/2014

இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 6-10 ம் தேதிக்குள் தமிழக அரசின் நிதித்துறை பதில் - எதிர்பார்ப்பு

இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கு 33399/2013..
நமது வழக்கில் வருகிற 6-10 ம் தேதிக்குள் தமிழக அரசின் நிதித்துறை பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது ..

104க்குப் போன் செய்தால் இலவச மருத்துவ ஆலோசனை.. தொடங்கி வைத்தார் ஜெ.

தொலைபேசி மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் புதிய திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார். கொடநாடு முகாமிலிருந்தபடி இதைத் தொடங்கி வைத்தார். தமிழக அரசு இலவச 108 ஆம்புலன்ஸ் சேவையை நடத்தி வருகிறது. இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகிறார்கள். 108 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு போன் செய்து இந்த இலவச ஆம்புலன்ஸ் சேவையை பெறலாம். இப்போது இலவசமாக மருத்துவ ஆலோசனை பெறும் புதிய சேவையை முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் 104 என்ற எண்ணுக்கு கட்டணமின்றி போன் செய்து இலவச மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: பொதுமக்கள் முதலுதவி குறித்த தகவல்கள், மருத்துவ ஆலோசனைகள், தாய் சேய் நலம் பற்றிய தகவல்கள், ரத்ததானம், கண்தானம் பற்றிய தகவல்கள், தொற்று மற்றும் தொற்றா நோய்கள் பற்றிய தகவல்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல்கள், முதலமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள வசதிகள் ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை இனி இலவசமாக பெறலாம். குறிப்பிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் மற்றும் நிலையங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனைகள், எச்.ஐ.வி., பால்வினை நோய்கள் பற்றிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெற முடியும். இதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர தொலைபேசி ‘104' மருத்துவ சேவையினை கொடநாடு முகாமில் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

இணையத்தில் எழுத்துருக்கள்: முக்கிய உத்தரவு

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள், இணையதளங்களில், ஐந்து வகை தமிழ் எழுத்துருக்களை மட்டுமே, பயன்படுத்த வேண்டும்' என, அரசு உத்தரவிட்டுள்ளது. தற்போது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், 30க்கும் மேற்பட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன.இவற்றில், 5 வகை எழுத்துக்களை மட்டும் பயன்படுத்த வேண்டும் என, தகவல் தொழில்நுட்பத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழ் பாரதி, தமிழ் கபிலர், தமிழ் கம்பர், தமிழ் வள்ளுவர், தமிழ் காவேரி ஆகியவை இந்த எழுத்துருக்கள் ஆகும். இவ் எழுத்துருக்களை, http://tamilvu.org ல், 'டவுன்லோடு' செய்து பயன்படுத்தலாம். நிதித்துறை செயலர் உதயச்சந்திரன், இதுகுறித்த சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்

கடிதம் எழுதும் போட்டிக்கு ஒரு பள்ளி மட்டுமே விண்ணப்பம்

43வது சர்வதேச கடிதம் எழுதும் போட்டியில் சிவகங்கை மாவட்ட அளவில் ஒரே ஒரு பள்ளி மட்டுமே பங்கேற்க விண்ணப்பித்துள்ளது. முறையான தகவலை தெரிவிப்பதில்லை, என அரசு பள்ளி ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச தபால் துறை சார்பில், ஜன.5ல் "கடிதம் எழுதும் போட்டி" நடக்கிறது. மண்டல அளவில் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஆண்டு, "இசை வாழ்க்கையில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளது" என்ற தலைப்பில், தென்மண்டல அளவில் மதுரையில் நடக்கிறது.

இதற்கான விண்ணப்பம் தபால் துறை சார்பில்,கடந்த மாதம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது.விண்ணப்பிக்க டிச.18ம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. போட்டி குறித்த அறிவிப்பு, பெரும்பாலான பள்ளிகளுக்கு அறிவிக்கப்படவில்லை. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை, ஒரே ஒரு பள்ளியை சேர்ந்தவர்கள் மட்டுமே முறையான தகவலோடு பெயர் கொடுத்துள்ளனர்.

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: கடிதம் எழுதும் போட்டி குறித்த அறிவிப்பு, அரசு பள்ளிகளுக்கு அறிவிக்கப்படுவதில்லை. அப்படியே அறிவித்தாலும், போட்டிக்கு விண்ணப்பிக்கும் கடைசி இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அறிவிப்பு வருகிறது.

இது மட்டுமன்றி, பல்வேறு போட்டிகளுக்குரிய தகவல்களும் நீண்ட தாமதத்துக்கு பிறகே அரசு பள்ளிகளுக்கு தெரிவிக்கப்படுகிறது. எனவே கிராமப்புற மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அரசு சார்பில் நடத்தும் போட்டிகளுக்குரிய தகவலை முன் கூட்டியே தெரியப்படுத்த வேண்டும் என்றார்.

ஆசிரியர் பயிற்சி பட்டய தேர்வு முடிவு 6-ம் தேதி வெளியாகிறது

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் ஆசிரியர் பயிற்சி பட்டயத் தேர்வு எழுதியவர்களுக்கு வருகிற 6-ம் தேதி முடிவு வெளியிடப்படுகிறது. அன்றைய நாளிலேயே மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்பட இருக்கிறது.

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிலையத்தில் பயின்று வரும் முதல், இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கும், தனித்தேர்வர்களுக்கும் தொடக்க கல்வி பட்டயத் தேர்வு கடந்த ஜீன்-2013ல் நடைபெற்றது. இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் பட்டியல்கள் வருகிற வருகிற 6-ம் தேதி விநியோகப்பட இருக்கிறது.

அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிலையங்களைச் சேர்ந்த ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு அந்தந்த நிலையங்களில் மதிப்பெண் பட்டியல்களை பெற்றுக் கொள்ளலாம். அந்தந்த பயிற்சி நிலையங்களிலேயே கணினி பயிற்சி பெற்ற அலுவலர்கள் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவும் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் கூட்டத்தை தவிர்க்கும் வகையில், மதிப்பெண் சான்றிதழ் பெற்றவுடன் தனியாகவோ, இணைய தள மையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம் .

TAX - 2014 ஐ Payroll 9.1 Software ல் உள்ளீடு செய்யும்போது கவனித்தில் கொள்ள வேண்டிய முக்கிய அறிவுரை

ஜனவரி 24ல் கூட்டுறவுச் சங்கங்களுக்கான இடைத்தேர்தல்!


தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்புவதற்கான இடைத்தேர்தல் ஜனவரி 24ஆம் தேதி நடைபெறும் என கூட்டுறவுச் சங்கங்களுக்கான மாநிலத் தேர்தல் ஆணையர் மோகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்களுக்கு ஐந்து நிலைகளில் நடைபெற்ற தேர்தலில் 21,027 சங்கங்களில் 2,04,889 நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் 20,993 பேர் தலைவர்களாகவும், 20,996 பேர் துணைத்தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றனர். இதற்குப் பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் சிலர் இறந்து விடுதல் அல்லது தங்கள் பதவியை ராஜினாமா செய்தல் போன்ற காரணங்களால் அவர்கள் வகித்து வந்த பதவிகளில் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டன. இவ்வாறாக கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் பிற எட்டு செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள 316 கூட்டுறவுச் சங்கங்களில் 416 நிர்வாகக்குழு உறுப்பினர் பணியிடங்களும், 65 கூட்டுறவுச் சங்கங்களில் 37 தலைவர் பணியிடங்களும், 31 துணைத்தலைவர் பணியிடங்களும் தற்போது காலிப்பணியிடங்களாக உள்ளன.

மேற்குறிப்பிட்ட 416 நிர்வாகக்குழு உறுப்பினர் பணியிடங்களையும், 37 தலைவர் பணியிடங்களையும், 31 துணைத்தலைவர் பணியிடங்களையும் இடைத்தேர்தல் மூலம் நிரப்புவதற்கான தேர்தல் திட்டத்தையும், தேர்தல் அட்டவணையையும் தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தேர்தல் அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர். இந்த 416 நிர்வாகக்குழு உறுப்பினர் காலிப்பணியிடங்களில் 82 பணியிடங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தவரைக் கொண்டும், 114 பணியிடங்களை பெண்களைக் கொண்டும், 220 பணியிடங்களை பொதுப்பிரிவினரைக் கொண்டும் நிரப்பவேண்டும். தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தலில் வகுப்புவாரி இட ஒதுக்கீடு கிடையாது.

மேற்குறிப்பிட்ட 316 கூட்டுறவுச் சங்கங்களில் 416 நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கும், 65 கூட்டுறவு சங்கங்களில் 37 தலைவர்கள் மற்றும் 31 துணைத்தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் திட்டத்தின்படி தொடர்புடைய சங்கங்களில் இம்மாதம் 4ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இதன் பேரிலான ஆட்சேபணை ஏதும் இருப்பின் அதனை 6ஆம் தேதி வரை தெரிவிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் 8ஆம் தேதி வெளியிடப்படும்.

இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புமனுக்களை 20ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை தாக்கல் செய்யலாம். அன்று மாலை 5.30 மணிக்குள் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு அன்று மாலை 6.00 மணிக்கு தகுதியான வேட்பாளர் பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும்.

தாக்கல் செய்த வேட்புமனுவை திரும்பப் பெற விரும்புவோர் 21ஆம் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். அன்று மாலை 5.00 மணிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப்பட்டியல் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும். இந்த இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு 24ஆம் தேதி அன்று காலை 8.00 மணிக்குத் தொடங்கி மாலை 5.00 மணி வரை நடைபெறும். வாக்குகளை எண்ணும் பணி 25ஆம் தேதி காலை 10.00 மணிக்குத் தொடங்கும். வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டவுடன் முடிவுகள் அறிவிக்கப்படும்.

தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அறிவிப்பு 25ஆம் தேதி அன்று தேர்தல் அலுவலரால் வழங்கப்படும். தலைவர் மற்றும் துணைத்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 29ஆம் தேதி அன்று காலை 10.00 மணிக்கு நடைபெறும். இடைத்தேர்தல் நடைபெறவுள்ள கூட்டுறவுச் சங்கங்களின் பெயர் மற்றும் இதர விபரங்கள் குறித்து அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலரையும், மாவட்ட தேர்தல் பார்வையாளர்களான மண்டல இணைப்பதிவாளர்களையும் தொடர்பு கொள்ளலாம்'' எனக் கூறியுள்ளார்.

கற்கும் பாரதத் திட்டத்தில் 5 ஒருங்கிணைப்பாளர், 87 மைய பொறுப்பாளர் காலியிடங்கள்

அரியலூர் மாவட்டத்தில் கற்கும் பாரதத் திட்டத்தில் 5 ஒருங்கிணைப்பாளர், 87 மையப் பொறுப்பாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:அரியலூர் மாவட்டத்தில் கற்கும் பாரத திட்டத்தில் 3 மாவட்ட ஒருங்கிணைப்பாளர், 2 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களும், 87 மைய பொறுப்பாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கும், அரியலூர், ஆண்டிமடம் ஒன்றியங்களில் ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கும் பட்டயம் முடித்து, கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.மையப் பொறுப்பாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ. 6 ஆயிரம், மையப் பொறுப்பாளர் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.மையப் பொறுப்பாளர் காலிப் பணியிட விவரங்கள் அந்தந்த வட்டார வள மைய தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜன. 10 ஆம் தேதிக்குள் வட்டார வள மையங்களில் அளிக்க வேண்டும்.மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பத்தை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், அகில இந்திய கற்கும் பாரதத் திட்ட அலுவலகம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் என்ற முகவரியில் நேரிலோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும்.இந்தப் பணி முற்றிலும் தாற்காலிகமானது என்பதால், வரும் காலங்களில் எந்தவித முன்னுரிமையும் கோர இயலாது.

ஓய்வூதியம் - பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் மாநில கணக்காயரிடம் உள்ள கணக்குகள் அனைத்தும் 01.01.2014 முதல் ஆணையாளர், மாநில தகவல் மையத்திடம் ஒப்படைக்க உத்தரவு.

5 ஆம் வகுப்பு மூன்றாம் பருவம் ஆங்கிலப் பாடநூலில் முதல் பாடத்தில் விடுபட்டுள்ள பத்தியை இணைத்து திருத்தம் மேற்கொள்ளு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவு

பள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது.

பொங்கல் போனஸ் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திங்கள் கிழமை ஜனவரி 6 ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு

தமிழக ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் திங்கள்கிழமை அறிவிக்கலாம் என் எதிர்பர்க்கப்படுகிறது.மேலும் அரசாணையும் அன்றைய தினமே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரவு 10 முதல் காலை 6 மணி வரை பணம் எடுக்க முடியாது: ஏ.டி.எம்., மையங்களுக்கு கட்டுப்பாடு

பண பரிவர்த்தனை, மிகக் குறைவாக உள்ள, ஏ.டி.எம்., களை, இரவு நேரங்களில் மூட, வங்கிகள் நடவடிக்கை எடுத்து உள்ளன. பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு செலவு குறைப்பு ஆகிய காரணங்களால், இந்தநடவடிக்கை எடுக்கப்படுவதாக, வங்கிவட்டாரங்களில் கூறப்படுகிறது.


பெங்களூரில், ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுத்துக் கொண்டிருந்த, வங்கி பெண் அதிகாரியை, அடையாளம் தெரியாத நபர், கொலை செய்ய முயற்சித்தார். இதில், படுகாயம் அடைந்த அந்த பெண் அதிகாரி, உடல் நலம் தேறி வருகிறார்.

ரிசர்வ் வங்கி உத்தரவு:

இந்த சம்பவம் நாடெங்கும், வங்கி வாடிக்கையாளர்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும், ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பு குறித்து, ரிசர்வ் வங்கி புதிய நடைமுறைகளை அறிவித்தது.

இதன்படி,
*ஏ.டி.எம்., மையத்தில் உயர்ரக கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும்.
*24 மணி நேர பாதுகாவலரை நியமிக்க வேண்டும்.
*ஏ.டி.எம்., மையத்தின் கதவு மற்றும் சுற்றுப்புறம் பொருத்தப்படும் கண்ணாடிகளை, வெளியில் இருந்து பார்த்தால், உள்ளே இருப்பவர் தெரியும் படிஅமைக்க வேண்டும்.
*அவசர காலங்களில் உதவிக்கு அழைக்க, அலாரம் பொருத்த வேண்டும்.
*ஆயுதம் ஏந்திய காவலர்களை இரவு நேரங்களில் நியமிக்க வேண்டும்.இவ்வாறு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டது.

ஆனால், இந்த நடைமுறைகளை, எந்த வங்கியும் முழுமையாக கடைபிடிக்கவில்லை. இந்நிலையில், இரவு நேரங்களில், போதியளவு பண பரிவர்த்தனை இல்லாத ஏ.டி.எம்.,களையும், நகரின் ஒதுக்கு புறத்தில் உள்ள ஏ.டி.எம்.,களையும் மூட, தனியார் வங்கிகள் முடிவு செய்து, இதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி போன்ற தனியார் வங்கிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளன. இந்த வங்கிகளின் ஏ.டி.எம்., மையங்களில், 'இரவு, 10:00 மணி முதல், காலை, 6:00 மணி வரை, ஏ.டி.எம்., மையங்கள் மூடப்படும்' என, அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது.

பரிவர்த்தனை குறைவு:

இதுகுறித்து, வங்கி நிர்வாகம் கூறியதாவது;ஏ.டி.எம்., மையங்களுக்கு மின்சாரம், பாதுகாவலர் மற்றும் பிற பராமரிப்புப் பணிகளுக்கு மாதம், 40 - 50 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இரவு நேரங்களில், சில ஏ.டி.எம்., மையங்களில், ஒன்றிரண்டு பண பரிவர்த்தனை தான் நடக்கின்றன.ஒருஏ.டி.எம்., மையத்தில் குறைந்தபட்சம், 50 பணவர்த்தனை நடந்தால் தான், பராமரிப்புக்கும் செலவுக்கு ஏற்ப, வங்கிக்கு வருவாய் கிடைக்கும். ஒன்றிரண்டு பரிவர்த்தனைகளால், நஷ்டம் தான் ஏற்படும். எனவே, இந்த ஏ.டி.எம்., மையங்களை இரவு நேரங்களில் மூட நடவடிக்கை எடுத்துள்ளோம்.இவ்வாறு, வங்கி நிர்வாகம் கூறியது.

அறிவுறுத்த முடியாது:

ஏ.டி.எம்., மையங்களின் பாதுகாப்பு குறித்து போலீசார் கூறியதாவது:
ஏ.டி.எம்., மையங்களுக்கு, வங்கி நிர்வாகம் தான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ள பாதுகாப்பு நடைமுறைகளை அமல் செய்ய வேண்டும். 'ரிசர்வ் வங்கி நடைமுறைகளை அமல் செய்ய வேண்டும்' என, வங்கிகளுக்கு நாங்கள் அறிவுறுத்த முடியாது. எனவே, ஏ.டி.எம்., மையங்களை மூடும் முடிவு, வங்கி நிர்வாகத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


ஏடிஎம்களில் பணம் எடுக்கவும் கட்டணம் : ஆர்பிஐ அனுமதி


ஏடிஎம்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கவும், வாடிக்கையாளர்களிடம் கட்டணம் பிடித்தம் செய்யும் வங்கிகளின் பரிசீலனைக்கு ஆர்பியை அனுமதி அளித்துள்ளது.

வங்கிகள் வசூலிக்கும் கட்டணம் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் இருந்தால் வங்கிகளின் பொருளாதார நிலை கருதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும், அத்தகைய கட்டண வசூல் குறித்து ரிசர்வ் வங்கிக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை என்றும் ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் கே.சி. சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார்.

தற்போது , வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் ஏ.டி.எம்.,ல் ஒரு மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளலாம். அதே சமயம் மற்ற வங்கிகளின் ஏ.டி.எம்.,ல் மாதத்திற்கு 5 முறை வரை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ளவும், அதற்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. இனி வரும் காலங்களில் ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வகுப்பு 3, 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான அடைவுத் தேர்வு தேதி மாற்றம் மற்றும் சார்பான அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்

02/01/2014

மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வு பிப்ரவரி 16–ந்தேதி நடக்கிறது

மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் ஆசிரியர்களாக சேருவதற்கு மத்திய அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வை சி.பி.எஸ்.இ. நிறுவனம் நடத்துகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 16–ந்தேதி நாடு தழுவிய அளவில் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் அதே தேதியில் தேர்வு நடத்தப்பட உள்ளது. 1–வது வகுப்பு முதல் 5–வது வகுப்புவரை பாடம் சொல்லிக்கொடுக்க தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் தாள்–1 எழுதவேண்டும். 6–வது வகுப்பு முதல் 8–வது வகுப்புவரை பாடம் நடத்த தேர்வு செய்யப்பட உள்ள ஆசிரியர்கள் தாள்–2 எழுதவேண்டும். இரு தாள்களும் எழுத விரும்புவோர் இரு தாள்களையும் எழுதலாம்.