அரியலூர் மாவட்டத்தில் கற்கும் பாரதத் திட்டத்தில் 5 ஒருங்கிணைப்பாளர், 87 மையப் பொறுப்பாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு வரும் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:அரியலூர் மாவட்டத்தில் கற்கும் பாரத திட்டத்தில் 3 மாவட்ட ஒருங்கிணைப்பாளர், 2 வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களும், 87 மைய பொறுப்பாளர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பணிக்கும், அரியலூர், ஆண்டிமடம் ஒன்றியங்களில் ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கும் பட்டயம் முடித்து, கணினி அறிவு பெற்றவராக இருக்க வேண்டும்.மையப் பொறுப்பாளர் பணிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ. 6 ஆயிரம், மையப் பொறுப்பாளர் பணிக்கு தொகுப்பூதியமாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.மையப் பொறுப்பாளர் காலிப் பணியிட விவரங்கள் அந்தந்த வட்டார வள மைய தகவல் பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜன. 10 ஆம் தேதிக்குள் வட்டார வள மையங்களில் அளிக்க வேண்டும்.மாவட்ட மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கான விண்ணப்பத்தை கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், அகில இந்திய கற்கும் பாரதத் திட்ட அலுவலகம், அறை எண் 207, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் என்ற முகவரியில் நேரிலோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ அளிக்க வேண்டும்.இந்தப் பணி முற்றிலும் தாற்காலிகமானது என்பதால், வரும் காலங்களில் எந்தவித முன்னுரிமையும் கோர இயலாது.
No comments:
Post a Comment