திருக்குறள்

12/01/2014

அரசு பள்ளிகளை தத்தெடுப்பதில் சிக்கல்?

பள்ளிகளில் வசதிகளை மேம்படுத்தும் வகையில் ‘தத்தெடுப்பு திட்டத்தை’ அரசு அறிவித்துள்ளது.

அரசு பள்ளிகளில், முழுமையான அளவிற்கு உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும், மாணவர்களுக்கு தேவையான பல்வேறு வசதிகள் உடனுக்குடன் கிடைத்திடவும் தமிழக அரசு இந்த புதிய திட்டத்தை அறிவித்துள்ளது.

தொழில் நிறுவனங்கள், தனி நபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து, ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் வரை தேவையான வசதிகளை செய்து கொடுக்க அனுமதி அளித்துள்ளது.

இந்தத் திட்டத்தால், அரசு பள்ளிகளுக்கு கூடுதலான வசதிகள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. செல்வந்தர்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும், அரசு பள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆனால், பள்ளியை தத்தெடுக்க நினைப்பவர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. எந்தெந்த அரசு பள்ளிகளுக்கு, என்னென்ன தேவை என்ற விவரம் அவர்களுக்கு தெரியாத நிலை இருக்கிறது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களைத் தொடர்புகொண்டு கேட்டால் விவரம் கிடைக்கும் என்றாலும், நடைமுறை ரீதியாக தாமதம் உள்ளிட்ட பல்வேறு முட்டுக்கட்டைகள் ஏற்படலாம்.

அரசு பள்ளிகளின் தேவை குறித்த விவரங்களை, கல்வி மாவட்ட வாரியாக, வருவாய் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியிட்டால் நன்கொடையாளர்களுக்கு உதவியாக இருக்கும். பள்ளிக் கல்வித் துறை குறித்த முழுமையான புள்ளி விவரங்களுடன், ‘பள்ளிக்கல்வி.காம்’ என்ற பெயரில் இணையதளம் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த இணையதளத்தில் அரசு பள்ளிகளின் தேவை குறித்தும், திட்டங்களுக்கான மதிப்பீடு, தேவைப்படும் நிதி உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டது. இந்த இணையதளம் பயன்பாட்டுக்கு வந்தால் நன்கொடையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.

‘இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவோ அல்லது வரும் கல்வியாண்டு துவக்கத்திற்குள்ளோ பள்ளிக்கல்வி இணையதளம் துவக்கப்படும்’ என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment