திருக்குறள்

22/01/2014

ஏப்ரல் மாதத்தில் இருந்து துறைமுகத்தை பார்வையிட பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு இலவச அனுமதி சென்னையில் ஜி.கே.வாசன் தகவல்:

துறைமுக செயல்பாடுகளை, பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் ஏப்ரல் மாதத்தில் இருந்து இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள்” என்று, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் கலங்கரை விளக்கத்தை பார்வையிட அனுமதிக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அது ஏற்கப்பட்டு, இப்போது சென்னை கலங்கரை விளக்கத்தை குழந்தைகள் மட்டுமின்றி அவர்களின் பெற்றோரும் அனுமதிக்கப்படுகிறார்கள். சென்னை கலங்கரை விளக்கத்தில், ஒரே லிப்டில் ஏறி இறங்குவதில் ஏற்பட்டுள்ள சிரமத்தைப்போக்கும் வகையில் புதிதாக இன்னொரு லிப்ட் அமைத்து, ஏறுவதற்கு ஒன்றும், இறங்குவதற்கும் ஒன்றும் செயல்பட வகை செய்ய இருக்கிறோம். கலங்கரை விளக்கத்தைப்போல், துறைமுக செயல்பாடுகளை தெரிந்து கொள்வதற்கு ஏப்ரல் மாதத்தில் இருந்து வாரத்தில் ஒரு விடுமுறை நாளில் சென்னை துறைமுகம் உள்பட நாட்டில் உள்ள 12 துறைமுகங்களையும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என்று, மத்திய மந்திரி ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment