தேசிய வாக்காளர் தினம் என்பது இந்திய அரசாங்கத்தால் இளம் வாக்களர்களை ஊக்கபடுதுவதற்காக இந்த தினம் அனுசரிக்கபடுகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25ஆம் தேதி "தேசிய வாக்காளர் தினம்" . ஒட்டு அளிப்பதை மக்கள் தங்கள் கடமை யாக கருத வேண்டும் .18 வயது நிரம்பிய இந்திய குடிமக்கள் அனைவரும் ஒட்டு அளிக்க தகுதி வாய்ந்தவர் .தேர்தல் என்பது பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகிறது .சதி,மதம் , இனம், என்ற வேறுபாடுகளை களைந்து 18 வயது நிரம்பிய இந்திய குடியுரிமை பெற்ற மக்கள் அனைவரும் ஓட்டளிக்க தகுதி உள்ளவர்கள் .வாக்காளர் அனைவரும் வாக்காளர் அடையாள அட்டை ஒன்று தேர்தல் ஆணையத்தால் வழங்கபடுகிறது.
நாளை தேசிய வாக்காளர் தினம்
தேசிய வாக்காளர் தினத்தை ஒட்டி (ஜனவரி 25) சென்னையில் ஆளுநர் மாளிகை உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமையன்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆளுநர் மாளிகையில் நடைபெறும் விழாவில், 18 வயது நிறைவடைந்து வாக்காளர் பட்டியலில் பெயர் களைச் சேர்த்த சிலருக்கு, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை ஆளுநர் கே.ரோசய்யா வழங்குகிறார். மேலும், பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு வாக்குச் சாவடி மையங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் வாக்காளர் அடையாள அட்டைகளை அதிகாரிகள் வழங்குகின்றனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.
உலகின் பெரிய ஜனநாயக நாடு இந்தியா. இதற்கு முதுகெலும்பாக விளங்கும் இந்திய தேர்தல் ஆணையம், ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. இது 1950 ஜன., 25ல் உருவாக்கப்பட்டு, 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் வகையில் 2011 முதல், ஜன., 25ம் தேதி தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படுகிறது. தேர்தலில் ஓட்டுப்பதிவை அதிகப்படுத்தி, ஓட்டளிப்பதின் முக்கியத்துவத்தை உணர்த்துவது இதன் நோக்கம். தேர்தல் ஆணையம் நவீன வளர்ச்சிக்குப் ஏற்ப, ஓட்டளிக்க மின்னணு எந்திரம், அனைவருக்கும் புகைப்பட அடையாள அட்டை, விரைவாக தேர்தல் முடிவுகள், ஆண்டுதோறும் வாக்காளர் பெயர் சேர்ப்பு என புதுமைகளை புகுத்தி வருகிறது.
ஓட்டளிப்பது அவசியமா
ஓட்டளிப்பது அவசியமா
இந்தியாவில் உள்ளூர் பஞ்சாயத்து தலைவர் முதல் பிரதமர் வரை, ஓட்டளிப்பதன் மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஓட்டளிப்பது, 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியரின் கடமை. இதை தவறாமல் நிறைவேற்ற வேண்டும். அப்போது தான், மக்கள் விரும்பும் உண்மையான மாற்றம் ஏற்படும். ஓட்டளிப்பது எவ்வளவு அவசியமோ, அதே போல 18 வயது நிரம்பிய அனைவரும் பெயரை வாக்காளராக இணைத்துக்கொள்வதும் அவசியம். எந்த தேர்தலாக இருந்தாலும், சராசரி ஓட்டுப்பதிவு 60 சதவீதத்தை தாண்டுவதில்லை. இதனால், 40 சதவீத மக்களின் விருப்பம் இல்லாமலேயே, ஆட்சியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேர்தல் நடப்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு நாள் மட்டும் தான். அத்தினத்தில் அனைத்து வேலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு, ஓட்டு உரிமையை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
விற்காதீர்கள்
இந்தியாவில் தற்போது, பணத்தை கொடுத்து ஓட்டு வாங்கும் புதிய வழியை அரசியல் கட்சிகள் புகுத்தியுள்ளன. இவர்களின் மாய வலையில் சிக்கி விட்டால், கிரிமினல் குற்றவாளிகள் தான் நம்மை ஆட்சி செய்வர். பின் எப்படி நமது வாழ்க்கைத் தரம் உயரும்; எப்படி இந்தியா வல்லரசாகும். எனவே பணத்திற்காக விலைமதிப்பற்ற ஓட்டுகளை விற்கக் கூடாது. இது நாட்டை விற்பதற்கு சமம்.
77.78 கோடி
இந்தியாவில் 2013, ஜன., 1ம் தேதி நிலவரப்படி புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளரின் எண்ணிக்கையும் சேர்த்து 77 கோடியே 78 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். பெண் வாக்காளரின் சதவீதம் 47.44.
5 கோடி பேர்
தமிழகத்தில் தற்போதைய கணக்கின் படி, 5 கோடியே 15 லட்சத்து 69 ஆயிரத்து 61 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 58 லட்சத்து 56 ஆயிரத்து 61. பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 57 லட்சத்து 10 ஆயிரத்து 567 பேர். மற்றவர்களின் எண்ணிக்கை 2,433 பேர்.
No comments:
Post a Comment