வருமான வரி கணக்கை, இணையதளம் மூலம், "இ-பைலிங்' செய்பவர்கள், தபால் மூலம், ஐ.டி.ஆர்.வி., படிவத்தை இனிமேல் அனுப்பத் தேவையில்லை. இதற்கான, அறிவிப்பு, விரைவில் வெளியாக உள்ளது. மாத சம்பளதாரர்கள், தங்களின் வருமான வரிக் கணக்கை, ஆண்டுக்கு ஒருமுறை, வருமான வரித்துறையிடம், நேரிலும், இணையதளம் மூலமும், தாக்கல் செய்து வருகின்றனர்."இ-பைலிங்' முறையில், இணையதளம் மூலம், வருமான வரி கணக்கை தாக்கல் செய்பவர்கள், கணக்கை தாக்கல் செய்த, 120 நாட்களுக்குள், பெங்களூருவில் உள்ள, வருமான வரிக்கணக்கு தொகுப்பு அலுவலகத்திற்கு, தாங்கள், "இ-பைலிங்' செய்த, வருமான வரி கணக்கின் நகலை, ஐ.டி.ஆர்.வி., படிவத்தில், அனுப்பி வைக்க வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. இதை மாற்ற, மத்திய நிதித்துறை முடிவு செய்துள்ளது. "இ-பைலிங்' கணக்கு விவரத்தை, பெங்களூரு அலுவலகத்திற்கு, ஏராளமானோர், தபால் மூலம் தெரிவித்தும், பல தபால்கள், அந்த முகவரியை சென்றடையாததால், வரி செலுத்துபவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, தபாலில், தாக்கல் நகலை அனுப்பும் முறையை, வருமான வரித்துறை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது.
No comments:
Post a Comment