திருக்குறள்

13/02/2014

ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரான திருமிகு ஈஸ்வரன் அவர்களிடமும், பொதுச்செயலருமான.திருமிகு.ரங்கராஜன் அவர்களுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு.செ.முத்துசாமி அவ்ர்கள்

ஒன்றுபட்ட போராட்டம் நடந்திட வாய்ப்பு அனைத்து சங்கங்கள் இணைந்து (தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் சேர்த்து) ஒருமித்த உணர்வோடு வேலை நிறுத்தப்போராட்டத்தை ஒன்று பட்டு நடத்திட இரண்டு நாட்களாக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மூத்த தலைவரான திருமிகு ஈஸ்வரன் அவர்களிடமும், பொதுச்செயலருமான. திருமிகு.ரங்கராஜன் அவர்களுடனும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலருமான திருமிகு. செ.முத்துசாமி அவ்ர்கள்.

12/02/2014

வருமான வரி பிடித்தம் குறித்த திருவண்ணாமலை சார்கருவூல அலுவலரின் வழிகாட்டு சுற்றறிக்கை


இடைநிலை ஆசிரியருக்கு ஆங்கில பயிற்சி 19.02.2014 முதல் 20.03.2014வரையில் 30 நாட்கள்.


டி.இ.டி., புதிய மதிப்பெண்: டி.ஆர்.பி., இணையத்தில் விவரம்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப்பின், புதிய மதிப்பெண் விவரம், ஆசிரியர் தேர்வு வாரிய (டி.ஆர்.பி.,) இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

கடந்த 3ம் தேதி, டி.இ.டி., தேர்வில், 5 சதவீத மதிப்பெண் சலுகை அளித்து, முதல்வர் அறிவித்தார். இதையடுத்து, கடந்த ஆண்டு நடந்த டி.இ.டி., தேர்வில், தேர்வர் பெற்ற மதிப்பெண் விவரங்களை, மீண்டும், www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது. முதல்வர் அறிவிப்பின்படி, 55 சதவீத மதிப்பெண் (150க்கு 82) எடுத்து, தேர்ச்சி பெற்றதை, இணையதளத்தில் பார்த்து, உறுதி செய்து கொள்ளலாம். மேலும், பல தேர்வர்கள், தங்கள் தேர்வு பதிவு எண்ணை தவறவிட்டு விட்டதாகவும், இதனால், மதிப்பெண் விவரத்தை அறிய முடியவில்லை என்றும், டி.ஆர்.பி.,யிடம் தெரிவித்தனர். இப்படிப்பட்ட தேர்வர்கள், தங்கள் விண்ணப்ப எண்களை பதிவு செய்தால், தேர்வு பதிவு எண்களையும், மதிப்பெண் விவரங்களையும் அறிந்து கொள்ளலாம். முதல்வர் அளித்த சலுகையினால், தேர்ச்சி பெற்றவர்கள் எண்ணிக்கை, 40 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக, டி.ஆர்.பி., வட்டாரம், தெரிவித்தது. இவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு பணியை நடத்துவது குறித்து, அதிகாரிகள், தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013




11/02/2014

பள்ளிகளில் பாலியல் விழிப்புணர்வு கையேடு : புதிய சட்டப்படி தண்டனை விவரம் வெளியீடு

தமிழக பள்ளி, கல்லூரிகளில், பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு வழங்கப்பட்டு வரும் நிலையில், புதிய சட்டப்படி, குற்றங்களுக்கான தண்டனை விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு எதிராக நடக்கும், வன்முறை சம்பவங்களை தடுக்க, குடும்ப வன்முறை பாதுகாப்பு, வரதட்சணை தடுப்பு, பலாத்காரம் தடுப்பு, வாரிசு உரிமை, விதவை மறுமணம், ஈவ் டீசிங், வன்கொடுமை, சொத்து உரிமை, ஜீவனாம்சம் பெறும் உரிமை என, சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. பெண்களுக்கான பாதுகாப்பு சட்டம் இருந்தாலும், குழந்தைகள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு சட்டங்களில், கடுமையான தண்டனை இல்லாமல் இருந்தது. இந்நிலையில், 2012ம் ஆண்டு, டில்லியில், மருத்துவக் கல்லூரி மாணவி, ஒரு கும்பலால் கற்பழித்து கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய, மாநில அரசு, பாலியல் தொடர்பான சட்டங்களில், சில திருத்தங்களை கொண்டு வந்தன. அதன்படி, நான்கு விதமான பாலியல் தாக்குதல் வகைகள், அந்த பாலியல் தாக்குதல், யாரால் எல்லாம் ஏற்படுகிறது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்கள், புதிய சட்டவிதிமுறைகள் மற்றும் தண்டனைகள் ஆகியவை வரையறுக்கப்பட்டன.

கடுமையான பாலியல் தாக்குதல் பிரிவில், போலீசார், ராணுவ வீரர், அரசு ஊழியர், சிறைச்சாலை ஊழியர், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர், கல்வி நிறுவன ஊழியர் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு, ஆறு மாதம் முதல், ஆயுள் தண்டனை வரை, சிறை தண்டனை கிடைக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது. பாலியல் தொடர்பான புகாரை, போலீஸ், சிறப்பு சிறார் போலீஸ் யூனிட், பஞ்சாயத்து தலைவர், வி.ஏ.ஓ., குழந்தைகள் நலக்குழு, குழந்தைகள் பாதுகாப்புக் குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றில் புகார் தெரிவிக்கலாம். அதற்காக, "சைடு லைன் தொலைபேசி எண்: 1098' என்பதை தொடர்பு கொள்ளலாம். இந்நிலையில், பாலியல் தொடர்பான விழிப்புணர்வை பெற, பள்ளி மற்றும் கல்லூரிகளில், பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டம், 2012 மற்றும் குழந்தை திருமணத்தை தடுத்தல் தொடர்பான விழிப்புணர்வு கையேடு, தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்பட்டு வருகிறது. 

குழந்தைகள் பாதுகாப்பு குழு நிர்வாகி கூறியதாவது: பள்ளிகள் அளவில், எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலும், கல்லூரி அளவில், பட்டபடிப்பு மாணவ, மாணவியருக்கும், விழிப்புணர்வு கையேடு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மூலம் வழங்கப்படும். அதில், பாலியல் தாக்குதலுக்கான தண்டனை, கடுமையான பாலியல் தாக்குதலுக்கான தண்டனை, ஆபாச படம் எடுத்தல் தண்டனை, ஒரு முறைக்கு மேல், அதே குற்றத்தை செய்தல், குற்றத்துக்கு உடந்தையாக இருத்தல், குற்றங்களை மறைத்தல் உள்ளிட்ட முறைகளில், ஆறு மாதம், ஐந்தாண்டு, ஏழாண்டு, பத்தாண்டு, ஆயுள் தண்டனைகள் வழங்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

தொடக்கக் கல்வி துறையின் கீழுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 10.01.2014 அன்றைய நிலவரப்படி காலிப் பணியிட விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

தொடக்கக்கல்விதுறையின் கீழுள்ள அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 10.01.2014 அன்றைய நிலவரப்படி இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் பட்டதாரி தலைமை ஆசிரியர் காலிப் பணியிடத்தின் விவரத்தை (பாடவாரியாக) அனுப்ப அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறபித்துள்ளார்.

த.அ.உ.ச 2005 - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழ் நாடு அரசின் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பிரதி மாதம் பிடித்தம் செய்யப்படும் ரூ.150/-ஐ வருமான வரி 80D பிரிவின் கீழ் முழுமையான வரிச் சலுகை உண்டு என தகவல்



பிப்.25ல் உள்ளிருப்பு போராட்டம், பிப்.26ல் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த முடிவு

இன்று நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டத்தில் வருகிற பிப்ரவரி 25ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும், மறுநாள் பிப்ரவரி 26ஆம் தேதி ஒரு நாள் ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தவும் முடிவு.

10/02/2014

வங்கி ஊழியர்கள் இன்று,நாளை 2 நாள் ஸ்டிரைக்

நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் 10.02.2014 முதல் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

ஊதிய விகிதத் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதல் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும் இந்த 2 நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே பணம் எடுப்பது, போடுவது ஆகிய பணிகள் ஸ்தம்பிக்கும் என்று தெரிகிறது.



இருப்பினும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிபிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்டவை வழக்கம் போல இயங்கும்.

நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகளின் ஆயிரக்கணக்கான கிளைகளில் 8 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

07/02/2014

பள்ளிக்கல்வி- பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ஆசிரியர் பணி வழங்குதல் - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.

தொடக்கக் கல்வி - அரசாணை (நிலை) எண்.179, 216 மற்றும் 234ன் படி வழக்கு தொடர்ந்து தீர்ப்பாணை பெற்றவர்களால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, நீதிமன்ற தீர்ப்பாணை பெற்றவர்களுக்கு பணப்பயன் பெற்று வழங்கப்பட்டு விவரம் அளிக்க உத்தரவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது அரசாணை வெளியீடு

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அண்மையில் 5% மதிப்பெண் தளர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த கணக்கீடின்படி 82.5 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. இதையடுத்து 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண் தளர்வு SC/ST/MBC/BC/BCM ஆகிய பிரிவினருக்கு பொருந்தும். மேலும் 2013ல் தேர்வு எழுதியவர்களுக்கு இந்த மதிப்பெண் தளர்வு பொருந்தும் என்றும் உத்தர்விடப்பட்டுள்ளது.

அகஇ - 2013-14ஆம் ஆண்டிற்கு 40% தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி, குழந்தை உரிமைகளும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் 22.02.2014 அன்று நடைபெற உள்ளது

த.அ.உ.சட்டம்-அரசாணை எண்.240-ன்படி மறு ஊதிய நிர்ணயம் ஏற்கனவே நிர்ணயம் செய்த ஊதியத்தை விட குறைவான ஊதியத்திற்கு மறு நிர்ணயம் செய்ய அனுமதி இல்லை என தகவல்