நாடு முழுவதும் பொதுத்துறை வங்கி ஊழியர் சங்கங்கள் 10.02.2014 முதல் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றன.
ஊதிய விகிதத் திருத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா முதல் அனைத்து பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்களும் இந்த 2 நாள் வேலைநிறுத்தத்தில் கலந்து கொள்ளவுள்ளனர். எனவே பணம் எடுப்பது, போடுவது ஆகிய பணிகள் ஸ்தம்பிக்கும் என்று தெரிகிறது.
இருப்பினும் ஐசிஐசிஐ வங்கி, எச்டிபிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி உள்ளிட்டவை வழக்கம் போல இயங்கும்.
நாடு முழுவதும் 27 பொதுத்துறை வங்கிகளின் ஆயிரக்கணக்கான கிளைகளில் 8 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். நாடு முழுவதும் 50,000க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment