திருக்குறள்

28/02/2014

கேரளாவில் சிறுவர்களுக்கு புகையிலை பழக்கம் அதிகம்: ஆய்வில் தகவல்

சமீபத்தில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனமும், தேசிய மருந்து சார்பு சிகிச்சை மையமும் இணைந்து தேசிய அளவில் போதைப் பொருள்களுக்கு சிறுவர்கள் அடிமையாவது குறித்த பன்முக ஆய்வை மேற்கொண்டது. 

இந்தியா முழுவதும் 4024 சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், கேரள அளவில் 5-18 வயதுக்குட்பட்ட 119 சிறுவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் வேலை செய்து வரும் சிறுவர்கள் மட்டுமில்லாமல், தெருவில் வசித்து வரும் சிறுவர்கள் மற்றும் வீட்டில் தாய் தந்தையரின் பாதுகாப்புடன் படித்து வரும் சிறுவர்களிடமும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. 

இந்த ஆய்வின் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. அதில், இந்தியாவிலேயே அதிக அளவில் கேரளாவில் உள்ள சிறுவர்கள் 74 சதவீதம் அளவிற்கு புகையிலை, மது, மற்றும் சிகரெட்டு போன்ற போதைப்பொருட்களுக்கு அடிமையாகியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வகையான போதை பொருட்கள் அவர்களுக்கு எளிதில் கிடைப்பதே இதற்கு முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கேரள மாநில அரசு கல்வித்துறையின் செயலாளர் ஷாஜகான் கூறுகையில், “கேரளாவிலுள்ள அனைத்து கல்வி நிலையங்களும் இந்த ஆய்வின் முடிவை கவனமாக எடுத்துக்கொண்டு இதுகுறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த வேண்டும். மேலும் மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாவதை தடுக்க பள்ளிகளுக்கு அருகில் புகையிலை போன்றவற்றை விற்க தடை விதிக்க வேண்டும்” என்றார்.

No comments:

Post a Comment