![]() | ||
|
திருக்குறள்
06/07/2014
05/07/2014
ராசேந்திரசோழன் அரியணையேறிய 1000-வது ஆண்டு விழா
ஜெயங்கொண்டம்:பெருவேந்தன் ராசேந்திரன் சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவையும், அவரது பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடுவது என கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமம் சார்பில் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் ராசேந்திரன் சோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டை முன்னிட்டு சிறப்பாக கொண்டாடுவது என கங்கை கொண்டசோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் பொறியாளர் கோமகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூடத்தில் அருகில் உள்ள கிராம தலைவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.மாவீரனான ராசேந்திர சோழன் கி.பி.1012–ல் அவர் தந்தை பெருவேந்தன் ராசராசசோழனோடு ஆட்சியேற்றிருந்தாலும், தந்தை இறந்த பிறகு கி.பி.1014–ல் அரியணையேறினார். அவர் ஆட்சியேற்ற பிறகு “அலை கடல் நடுவே பலகலம் செலுத்தி” என அவர் மெய் கீர்த்தி கூறுவது போல வட இந்தியா மட்டுமன்றி கடல் கடந்தும் இன்றைய மலேயா, கம்போடியா, பர்மா, இலங்கை, ஜாவா, நிக்கோபர், தாய்லாந்து முதலான நாடுகளை வென்ற இந்திய அரசன் அவர் ஒருவரே.அவர் பிறந்த நாள் பற்றி வரலாற்று அறிஞரிடையே நிலவிய முரண்பட்ட கருத்தை போக்கும் வண்ணம் அவரின் திருவாரூர் கல்வெட்டு அவர் பிறந்தது ஆடி ஆதிரை என்பதை உறுதி செய்கிறது.இந்நிலையில் கங்கை கொண்ட சோழபுரத்தை ஆண்ட ராசேந்திரசோழன் அரியணை ஏறிய ஆயிரமாவது ஆண்டு விழாவை ஜுலை 24–ந் தேதியும், ராசேந்திர சோழனின் பிறந்தநாளை வரும் ஆடிதிருவாதிரை இவ்வாண்டு 25–ந்தேதியிலும் கொண்டாட முடிவானது. அன்றைய தினம் பெருவுடையாருக்கு மகாபிஷேகம், ஆராதனையும், அன்னதானமும் நடத்த தீர்மானிக்கப்பட்டது.மாலை தஞ்சை பெரிய கோயிலில் இருந்து தொடர் ஓட்டமாக கொண்டு வரப்படும் ஜோதி மூலம் ஆயிரம் ஆண்டை குறிக்கும் விதமாக ஆயிரம் தீபங்கள் ஏற்றப்படுகிறது.மாலை சிறப்பு நாட்டியாஞ்சலி நடக்கிறது. கங்கைகொண்ட சோழபுரத்தை சிறப்பிக்கும் அனைத்து நூல்களை யானையின் மீது அம்பாரி வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்படும். அதை உருவாக்கியவர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்களை கவுரவிக்கும் வகையில் அலங்கார ஊர்தியில் அவர்களை அமரவைத்து மாளிகை மேட்டிலிருந்து கோவிலுக்கு ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறார்கள்.முன்னதாக கருத்தரங்கம் மற்றும் நூல் வெளியீட்டு விழா நடக்கிறது. ராசேந்திர சோழன் காலமான காலமான பிரமதேயம் மற்றும் அவர் வளாப்பு அன்னை பஞ்சவன்மாதேவிக்கு அவர் எழுப்பிய பள்ளிபடையான பஞ்சவன் மாதேஸ்வரம் (பட்டீஸ் வரம்), திருவாரூர், தஞ்சை போன்ற பல இடங்களில் அபிஷே கம், ஆராதணை ஆகியவை நடத் தவும் முடிவெடுக்கப்பட்டது.
பாழடைந்த பள்ளி கட்டிடம்: பெற்றோர்கள் கலக்கம்
ஜெயங்கொண்டம்-பழுதடைந்த பள்ளிக் கூடத்தில் படித்துவரும் பிள்ளைகளை பெற்றோர்கள் வேறு பள்ளியில் சேர்க்கும் அவலம், அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஒன்றியத்திற்குட்பட்ட கோ.கண்டியங்கொல்லை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.இதில் 1 முதல் 5 வகுப்புகள் வரை நடைபெறுகின்றன. மொத்தம் 25 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். ஒரு தலைமை ஆசிரியர், ஒரு உதவி ஆசிரியர் மட்டும் உள்ளனர்.இந்த பள்ளி பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் சேதமடைந்து மேல் கூரை காரைகள் கீழே விழுந்த நிலையில் உள்ளது. இதன் அருகே அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகின்றன. இதில் 6 மாதம் முதல் 3 வயது வரை உள்ள குழந்தைகள் உணவு சாப்பிட்டு வருகின்றனர்.இந்த பள்ளிக்கூடத்திற்கு பின்புறம் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மைதானத்திற்கு அருகில் 3 ஏக்கர் பரப்பளவில் ஒரு பெரிய குளம் உள்ளது. இரண்டுக்கும் நடுவில் சுற்றுச்சுவர் ஏதும் இல்லாமல் உள்ளது. மழை, காற்று காலங்களில் இந்த கட்டிடத்தில் இருந்து காரைகள் பெயர்ந்து விழுகின்றனவாம். இந்த கட்டிடத்தில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மீது எப்பொழுது இந்த காரைகள் பெயர்ந்து விழுமோ என்ற அச்சத்துடனே இருக்கிறார்கள்.இதனால் இந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அருகில் உள்ள கோடாலி கருப்பூர், தா.பழூர், ஜெயங்கொண்டம் போன்ற ஊர்களில் சென்று சேர்க்கின்றனர். தற்பொழுது படித்து வரும் பிள்ளைகளின் பெற்றோர்கள் தங்களது பிள்ளை களை நினைத்தும், தங்களது வறுமையை நினைத்தும் சோகத்தில் உள்ளனர்.எனவே, சம்மந்தப்பட்ட துறைகள் உடனே செயல்பட்டு பேரிழப்பு ஏற்படுவதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே இப்பகுதியினர் கோரிக்கையாக வைத்தனர்.
தேசிய விருதுகளுக்கு மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் (மாற்றுத் திறனாளிகள் நலன்) அமைச்சகத்தால், மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வுக்கென சிறப்பாக செயல்பட்டு வரும் தொண்டு நிறுவனங்கள், தனிநபர்கள், மாற்றுத்திறனுடைய பணியாளர்கள் ஆகியோருக்கு 3.12.2014 அன்று புதுடெல்லியில் தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிபவர்கள் / சுயதொழில் புரிபவர்கள், சிறந்த பணியமர்த்தப்படும் அலுவலர்/ நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பாக சேவை புரிந்த தனிநபர்/நிறுவனம், மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாகத் திகழ்பவர்கள், மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்தும் வகையிலான சிறந்த செயல்முறை ஆராய்ச்சி பணி/ தொழில் நுட்பம் அல்லது கண்டுபிடிப்புகள், மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு உதவிகள் வழங்கிய சிறந்த மாவட்டம், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனுடைய நபர்கள், சிறந்த படைப்பாற்றல் மிக்க மாற்றுத் திறனுடைய குழந்தை உள்ளிட்ட 14 பிரிவுகளில் மொத்தம் 58 தேசிய விருதுகள் வழங்கப்படவுள்ளன.
இந்த விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்/நிறுவனங்கள் இதற்கான படிவங்களை www.socialjustice.nic.in என்ற இணையதளத்தில் இருந்து கீழிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் அல்லது சென்னை கே.கே.நகரில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அலுவலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தக்க இணைப்புகளுடன் வருகிற 8.7.2014க்குள் 2 நகல்களில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலரின் பரிந்துரையுடன் முதன்மைச் செயலாளர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், கே.கே. நகர், சென்னை 600 078 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். 8.7.2014க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்று மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை: பி.எட்., தொலைதூர கல்வி சேர்க்கை
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜனவரி முதல் ஆரம்பமாக உள்ள தொலைதூர கல்வி பி.எட். படிப்புக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விண்ணப்பிப்பவர் தமிழ்நாட்டிலுள்ள பள்ளிகளில் முழு நேர பணியிலுள்ள இரண்டு வருட ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பல்கலைக்கழகத்தில் விண்ணப்பப் படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதல் தகவல்களுக்கு www.tnou.ac.in என்ற இணையதளத்தை அணுகலாம்.
ஆன் லைனில் பி.எப்., கணக்கு எண் பெறும் புதிய வசதி அறிமுகம்
ஆன் லைன் மூலம் விண்ணப்பித்து, தொழிலாளர் பி.எப்., கணக்கு எண் பெறும் முறை, நேற்று முதல் துவங்கப்பட்டது. இவ்வசதியை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் டோமர், டில்லியில் துவக்கி வைத்தார்.புதிய வசதி குறித்து, அவர் கூறுகையில், ''தொழிலாளர்கள் நலனுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து செயல்படுகிறது. மத்திய அரசு அமைந்து முதல் 100 நாளில், பி.எப்., சந்தாதாரர்களுக்கு, யுனிவர்சல் கணக்கு எண் அளிக்க வேண்டும் என, முடிவு செய்துள்ளோம்.
தொழிலாளர் சேம நல நிதித் துறை இந்த இலக்கை எட்டும்,'' என்றார்.தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் விஷ்ணு டியோ சாய்ஜி பேசுகையில், ''தொழில் நிறுவனங்கள், பி.எப்., கணக்குகளைத் துவங்குவதற்கு, ஆன் லைன் வசதி எளிதானது. மேலும், இதன்மூலம், வெளிப்படைத் தன்மை கடைபிடிக்கப்படும்,'' என்றார்.வழக்கமாக, பி.எப்., கணக்கு எண்ணை, தொழிலாளி ஒருவருக்குப் பெற, பி.எப்., அலுவலகம் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து, பி.எப்., எண்ணை ஒதுக்க சில காலம் பிடிக்கும். இந்த கால தாமதம், ஆன் லைன் வசதி மூலம் போக்கப்படுகிறது. பி.எப்., கணக்கைத் துவங்க, ஆன் லைன் மூலம் விண்ணப்பித்தால், ஒரு நாளில் கணக்கு எண் ஒதுக்கப்படும். மேலும், விண்ணப்பம் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும், ஆன் லைனில் தெரிந்து கொள்ளலாம்.
பி.எப்., கணக்கு துவங்க நீண்ட நாட்கள் ஆகிறது. அதிகாரிகள் விரைந்து செயல்படுவதில்லை என்பது போன்ற குற்றச்சாட்டுகளுக்கு இனி இடம் இருக்காது.தொழிலாளர்கள் எளிதாக அணுகும் வகையில், புதிய வசதி இருக்கும் என, தொழிலாளர் நலத்துறை செயலர் கவுரிகுமார் தெரிவித்துள்ளார்.
03/07/2014
சிறுபான்மையினர் குழந்தைகளுக்கான Pre/Post Matric கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். கடைசி தேதி- 01.08.2014.
சிறுபான்மையின மாணவருக்கு கல்வி உதவித்தொகை: விண்ணப்பிக்க அழைப்பு
சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில், மேல்நிலை, உயர்நிலை மற்றும் கல்லூரி, பட்டப்படிப்பு பயிலும் கிறிஸ்தவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த சிறுபான்மையின மாணவ மாணவியர் பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகை பெற www.momascholarship.gov.in என்ற இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பதற்கான கால வரையறை புதியதற்கு செப். 15, புதுப்பித்தலுக்கு அக். 10 வரை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. விண்ணப்பித்த மாணவ மாணவியர் அதை பதிவிறக்கம் செய்து உரிய ஆவணங்களுடன் தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
BRTE ஒட்டுமொத்த மாறுதலை எதிர்த்து சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS
DATED: 24.06.2014
CORAM
THE HONOURABLE Mr.JUSTICE S. NAGAMUTHU
W.P.No.16328 of 2014 and
M.P.Nos.1 & 2 of 2014
TAMIL NADU BLOCK RESOURCE
TEACHERS DEVELOPMENT ASSOCIATION REG.NO.
63/2009 REP. BY SECRETARY M.MARIYAPRAKASAM
HEAD OFF: 8 ARUMUGAM LAYOUT 2ND ST. V.
MARUTHUR VILLUPURAM. .. Petitioner
-Vs.-
1 THE PRINCIPAL SECRETARY
TO GOVERNMENT SCHOOL EDUCATION DEPARTMENT
TAMIL NADU FORT ST. GEORGE CHENNAI-9.
2 THE DIRECTOR OF SCHOOL
EDUCATION DPI CAMPUS COLLEGE ROAD CHENNAI-
6.
3 THE DIRECTOR OF ELEMENTARY
EDUCATION DPI CAMPUS COLLEGE ROAD CHENNAI-
6.
.. Respondents
PRAYER: Petition filed under Article 226 of the Constitution of India praying for the issuance of a Writ of Certiorari calling for the entire records in impugned G.O(1D) No.137, dated 09.06.2014 passed by the first respondent and quash the same.
For Petitioner : Mr.R.Prabakaran
For Respondents : Mr.R.Rajeswaran,
Special Government Pleader
ORDER
The petitioner is an Association known as TAMIL NADU BLOCK RESOURCE TEACHERS DEVELOPMENT ASSOCIATION . According to the petitioner, its members are Teachers working in various schools in the State of Tamil Nadu under the Director of School Education. By conducting a counseling, 4587 Teachers have been transferred from their original place of working to various places at their option. Challenging the same, the petitioner/Association is before this Court with this writ petition.
2.This writ petition has come up today for admission. Mr.R.Rajeswaran, learned Special Government Pleader takes notice for the respondents.
3.I have heard the learned counsel for the petitioner and the learned Special Government Pleader appearing for the respondents and I have also perused the records carefully.
4.When a specific query was made to the learned counsel for the petitioner as to how the writ petition is maintainable before this Court at the instance of an Association in a service matter when none of these 4587 Teachers has come up with any writ petition, the learned counsel for the petitioner submitted that when a group of people are affected by a single order of the Government, it is always open for the Association to represent its members to maintain a writ petition. He would further submit that in respect of service matter, no Public Interest Litigation is maintainable and therefore, it is for the Association to file a writ petition voicing the cause of its members. The learned counsel would further submit that there is violation of fundamental rights since, the order of transfer is arbitrary and un-reasonable and therefore, according to the learned counsel, the writ petition is maintainable. To substantiate the said contention, he would further submit that there are certain judgments of this Court to that effect.
5.It is now well settled that in a service matter, an Association, cannot file a writ petition, challenging the order passed against any individual Government employee. Here, in this case, based on the failure of the Government that a Teacher who is working in a particular place for more than two years is transferred, in the larger interest of the Institution, 4587 Teachers have been transferred. These Teachers participated in the transfer counseling and without any protest, they opted their own choice of place for transfer and accordingly, they have been transferred.
6.Assuming that there was no transparency in the matter of transfer of the above said 4587 Teachers and there was arbitrariness on the part of any authority, it would be appropriate for those Teachers to file writ petition. When no Teacher feels aggrieved, it is really surprising that the Association has come up with this writ petition, that too when there is no protest at the time of transfer counseling.
7.Going by the settled law, more particularly, in respect of transfer matters of Teachers, I am of the view that the writ petition filed by the petitioner in the capacity of Association cannot be maintainable. In the result, the writ petition fails and accordingly, the same is dismissed. No costs. Consequently, connected miscellaneous petitions are closed.
24.06.2014
jbm
Index : Yes/No
Internet:Yes/No
Note:- Issue copy on 30.06.2014.
To
1 THE PRINCIPAL SECRETARY
TO GOVERNMENT SCHOOL EDUCATION DEPARTMENT
TAMIL NADU FORT ST. GEORGE CHENNAI-9.
2 THE DIRECTOR OF SCHOOL
EDUCATION DPI CAMPUS COLLEGE ROAD CHENNAI-
6.
3 THE DIRECTOR OF ELEMENTARY
EDUCATION DPI CAMPUS COLLEGE ROAD CHENNAI-
6.
S.NAGAMUTHU,J.
Jbm
W.P.No.16328 of 2014
02/07/2014
வாக்காளர்களுக்கு 'பிளாஸ்டிக்' அட்டை: கலரில் மிளிரப்போகுது உங்கள் முகம்
வாக்காளர்களுக்கு வண்ண 'பிளாஸ்டிக்' அடையாள அட்டை வழங்கும் பணியை, அடுத்த மாதத்தில் துவங்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் வாக்காளர் அடையாள அட்டையில் புகைப்படம் தெளிவாக இருப்பதில்லை; 'இது யார் நானா?' என நம்மை நாமே கேட்கும் வகையில் 'கோணல் மாணலாக' இருக்கும். மேலும், எளிதில் சேதமடைந்து விடும். இதையடுத்து வண்ண புகைப்பட 'பிளாஸ்டிக்' அட்டை வழங்க தேர்தல் கமிஷன் முடிவு செய்து, அதற்கான 'டெண்டர்' விடப்பட்டது. லோக்சபா தேர்தல் வந்ததால் இதற்கான பணிகள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில், ஆகஸ்ட்டில் 'பிளாஸ்டிக்' அட்டை வழங்கும் பணியை துவங்க தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்கு முன்பே, புது வாக்காளர்களுக்கு இந்த அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டது. போதிய அவகாசம் இல்லாததால் ஒத்திவைக்கப்பட்டது. கடந்த மார்ச்சில் நடந்த சிறப்பு முகாம்களில், பெயர் சேர்த்தோருக்கு 'பிளாஸ்டிக்' அட்டைகள் வழங்கப்படும். அதைத்தொடர்ந்து, பழைய அட்டைகள் வைத்துள்ள அனைவருக்கும் படிப்படியாக மாற்றி வழங்கப்படும். இதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை.
வாக்காளர் பட்டியலில் தொடர் திருத்தப்பணி தற்போது நடக்கிறது. பெயர் சேர்ப்பு (படிவம் 6), நீக்கல் (படிவம் 7), திருத்தம் (படிவம் 8), ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் (படிவம் 8ஏ) ஆகியவற்றில், 'ஆன்லைன்' அல்லது தாலுகா அலுவலகங்களில் விண்ணப்பிக்கலாம். செப்டம்பர் வரை விண்ணப்பம் பெறப்பட்டு, அக்.,1ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அக்., 1 முதல் 31 வரை வாக்காளர் சுருக்கத்திருத்தப்பட்டியல் பணி நடைபெறும். பெயர் சேர்ப்பிற்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்; பின், இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு கூறினார்.
ஆசிரியர் பயிற்சி கலந்தாய்வு வரும் 7ம் தேதி துவங்குகிறது
ஆசிரியர் பயிற்சி சேர்க்கை கலந்தாய்வு, வரும், 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்கிறது. தமிழகத்தில், 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் (அரசு பள்ளிகள்), 9, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 42, அரசு உதவிபெறும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் 400 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 13 ஆயிரம் இடங்கள் உள்ளன. எனினும், 4,520 மாணவர்கள் மட்டும் விண்ணப்பித்துள்ளனர்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், இணையதளம் வழியாக, வரும், 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடக்கிறது. கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் மற்றும் 'ரேங்க்' பட்டியல், ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மாணவர்கள், அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து, அவரவர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு, குறிப்பிட்ட தேதியில் செல்ல வேண்டும்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் M.Ed படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தை தொடர்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் அஞ்சல் வழியில் எம்.எட். படிப்பை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது.
பி.எட். முடித்துவிட்டு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் ஆசிரியராக 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவங்கள் பாரதிதாசன்
பல்கலைக் கழகத் தொலைதூரக்கல்வி மையம் மற்றும் அதன் கல்வி மையங்களில் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பக் கட்டணம் ரூ.500. இதை டிமாண்ட் டிராப்டாகச் செலுத்த வேண்டும். பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி மையத்தின் இணையத்தில் (www.bdu.ac.in/cde) விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். விண்ணப்பம் மற்றும் கல்வி மையங்களின் விவரங்களை இந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். ஜூலை 25-ம் தேதிக் குள் விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 24-ந் தேதி நடத்தப்படும் என்று பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி மைய இயக்குநர் கே.ஆனந்தன் அறிவித்துள்ளார்.
TNTET:தாள் இரண்டில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி தேர்ச்சி பெற்றவர்களின் RTI மூலம் பெறப் பட்ட விவரம்.
2013 ஆம் ஆண்டு TET தேர்வின் இரண்டாம் தாளில் பாட வாரியாக,இன வாரியாக தேர்ச்சி பெற்றவர்களது விவரம்.

Subscribe to:
Posts (Atom)


