2013-14ம் கல்வி ஆண்டில் தொடக்கக்கல்வி துறையில் பட்டதாரி பதவிஉயர்வு கவுன்சிலிங் இல்லை என தொடக்கக்கல்வி இயக்குநர் திட்டவட்டமாக அறிவித்துள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் 2011-12ம் கல்வி ஆண்டில் ஆசிரியர் தேர்வுவாரியத்திடம் இருந்து பெறப்பட்ட 1623 பணியிடங்களை (GO.170) திரும்பஒப்படைக்க வேண்டியுள்ளதால் பதவி உயர்வு நடக்க வாய்ப்பில்லை எனதெரிவித்துள்ளார். இதனால் பதவி உயர்வு வேண்டி காத்திருக்கும் ஆசிரியர்கள்அதிருப்தி அடைந்துள்ளனர்.
திருக்குறள்
21/06/2013
நேற்றைய ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் கூட்டம் மாலை 6 மணியளவில் அமைச்சர் வைகை செல்வன் முன்னிலையில் தொடங்கியது
பள்ளிக் கல்வி செயலாளர்,பள்ளிக்கல்வி இயக்குனர்,தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் கலந்து கொண்டனர்
முதலில் மேல்நிலைப்பள்ளிகள் சார்ந்த அனைத்து சங்க பிரதிநிதிகள் சங்கத்திற்கு மூவர் வீதம் அழைக்கப்பட்டனர்,
பின்னர் உயர்நிலைப்பள்ளி சார்ந்த ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் அழைக்கப்பட்டனர்.இதில் தொடக்கக்கல்வியோடு இனணந்து பணியாற்றும் சாஸ்திரா பட்டதாரி ஆசிரியர் கூட்டணி,பட்ட
தா
ரி ஆசிரியர் சங்கம்,தொடக்க நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்கம் ஆகியனவும் கலந்து கொண்டன.பின்னர் தொடக்கக்கல்வி ஆசிரியர் சங்கங்கள் கலந்து கொண்டன.
பின்னர் கல்வித்துறைஅமைச்சுபணியாளர்அனைத்து சங்க பிரதிநிதிகள், உ.தொ.க.அ. சங்க பொறுப்பாளர்கள் அழைக்கப்பட்டு ஆலோசணை நடத்தப்பட்டது.
வைக்கப்பட்ட கோரிக்கைகள் சில(அனைத்தும் சங்கங்களின் கருத்து தொகுப்பாக) முழுமையான விபரங்கள் இல்லை.
1.இடைநிலை ஆசிரியர் தர ஊதியம் 4200 ஆக உயர்த்துக
2.சி.பி.எஸ் முறையை கைவிடுக
3.Dual degree -க்கு பதவி உயர்வு வழங்கக்கூடாது
4.1-5,6-10,6-12 என்கிற முறையில் வகுப்புகள் கொண்ட பள்ளிகள் மட்டுமே இருக்க வேண்டும்( உயர்,மேல்நிலைப்பள்ளி சங்கங்கள்)
5.அனைத்து பள்ளிகளுக்கும் இரவுக்காவலர் நியமனம் செய்க
6.அலகுவிட்டு அலகு விட்டு மாறுதல் தருக
"மாவட்ட கல்வி அலுவலர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும், 14 வகையான இலவச பொருட்களை மாணவர்களுக்கு வழங்கும் பணியை கவனிக்க, தனி ஊழியர் நியமனம், நிலுவையில் உள்ள சிறப்புக் கட்டணத்தை, உடனடியாக வழங்க கோருதல், கம்ப்யூட்டர் ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளோம். முதல்வருடன், ஆலோசனை நடத்தி, முடிவை எடுப்பதாக, அமைச்சர் தெரிவித்தார்
பள்ளிக்கல்வித்துறையின் வெளியிட்டுள்ள புதிய நாட்காட்டியின்படி தமிழகத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் காலை 9 மணிக்கு துவங்கி மாலை 4.15 மணி வரை செயல்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை மட்டும்,மற்ற நாட்களில் வகுப்பறையில்)
9.20 - 10.00 முதல் பாடவேளை
10.00 - 10.40 இரண்டாம் பாடவேளை
10.40 - 10.50 இடைவேளை
10.50 - 11.30 மூன்றாம் பாடவேளை
11.30 - 12.10 நான்காம் பாடவேளை
12.10 - 12.25 யோகா
12.25 - 12.40 பாட இணை செயல்பாடுகள்
12.40 - 1.10 உணவு இடைவேளை
1.10 - 1.25 மதிய உணவு இடைவேளைக்கு பிந்தைய செயல்பாடுகள்
1.25 - 2.05 ஐந்தாம் பாடவேளை
2.05 - 2.45 ஆறாம் பாடவேளை
2.45 -2.55 இடைவேளை
2.55 - 3.35 ஏழாம் பாடவேளை
3.35 - 4.15 எட்டாம் பாடவேளை
மழலையர் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் தேவை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
மழலையர் பள்ளிகளுக்கும் அங்கீகாரம் தேவை என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், மழலையர் பள்ளிகளுக்கு அங்கீகாரம் தேவையில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது என்றும், தனியார் பள்ளி ஒழுங்குமுறை சட்டப்படி மழலையர் பள்ளிகளுக்கும் அரசின் அங்கீகாரம் கட்டாயம் தேவை என்றும் உத்தரவிட்டது.
20/06/2013
பாடப் புத்தகத்தில் பாதுகாப்பு அறிவுரை: பெற்றோர், கல்வியாளர்கள் வரவேற்பு
ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், இடம்பெற்றுள்ள, "பல்லூடகப் பாதுகாப்பு" அறிவுரைகளை, பெற்றோர் வரவேற்றுள்ளனர். மொபைல் போன், லேப்-டாப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு, இந்த அறிவுரைகள் பயன்படும் என்பதால், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள், இதை வரவேற்றுள்ளனர்.
மொபைல் போன், இணையதளம் போன்ற தகவல் தொடர்பு வசதிகளை, பயன்படுத்தும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். இந்த சிக்கல் தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி பாடத் திட்டத்திலேயே அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிதாக வழங்கப்பட்டுள்ள முதல் பருவ புத்தக, பின் அட்டையில், "பல்லூடகப் பாதுகாப்பு&' என்ற தலைப்பில், அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
* மின் இணைப்பில் உள்ள போது, அலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்.
* அதிர்வு நிலைகளில், அலைபேசியை உடலோடு ஒட்டியவாறு வைத்தல் தீங்கானது.
* அறிமுகமில்லாதவர்களின், தொடர் அழைப்புகளை நிராகரிப்பது நன்று.
* அலைபேசி தொலைந்து போனால், அந்த சிம்கார்டு இணைப்பகம் மூலம், உடனடியாக செயலிழக்க வைக்க வேண்டும்.
* அறிமுகமில்லாதவர்களிடம், தனிப்பட்ட விவரங்களை, மின்னஞ்சலில் பரிமாற்றம் செய்ய வேண்டாம்.
*பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், தெரியாதவர்களிடம், உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதைத் தவிர்க்கவும்.
* இணையதளங்களில் காணப்படும் கருத்துக்களை, கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
* தகாத, முறைகேடான, இழிவான செய்திகளைப் பெற நேர்ந்தால், உடனே, பெற்றோர் அல்லது தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கவும்.
* சமூக வலைதளங்களைப் பயன்படுத்திய பின், மறவாமல் வெளிவருவதற்கான பதிவை செய்யவும்.
இவை உள்ளிட்ட, 13 அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளன. மொபைல் போன், லேப்-டாப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு, இந்த அறிவுரைகள் பயன்படும் என்பதால், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள், இதை வரவேற்றுள்ளனர்.
19/06/2013
18/06/2013
2010 ஆகஸ்டு 23க்கு முன்பு சான்றிதழ் சரிபார்த்து காலதாமதமாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி, 1 முதல் 10ம் வகுப்பு வரை தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் 2010ம் ஆண்டு ஆகஸ்டு 23ல் வெளியிட்டது. அதன்படி, 2010 ஆகஸ்டு 23க்கு பிறகு பள்ளிகளில் நியமிக்கப்படும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த அறிவிப்பால் தமிழகத்தில் 2010 ஆகஸ்டு 23க்கு பிறகு அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் முதல் தகுதித்தேர்வு தேதி அறிவிப்புக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க ஆசிரியர் அமைப்புகள் கோரின. ஆனால், டிஆர்பி மறுத்துவிட்டது. இந்நிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 2010 ஆக.23க்கு முன்பு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, காலதாமதமாக நியமிக்கப்பட்டவர்கள் மட்டும் தகுதி தேர்வு எழுத தேவையில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் 2010 ஆக.23க்கு பிறகு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தால் கண்டிப்பாக தகுதி தேர்வு எழுத வேண்டும் எனவும் டிஆர்பி தெரிவித்துள்ளது.
17/06/2013
அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டதாகக் கூறி, தனியார் பள்ளிகளை மூடி வரும் நிலையில், தமிழகத்தில், "கிண்டர் கார்டன்', "ஆப்பிள் கிட்ஸ்', "ஆரஞ்ச் இன்டர்நேஷனல் ஸ்கூல்', "பிளே ஸ்கூல்', "பப்ளிக் ஸ்கூல்' என, பல பெயரில் மழலையர் பள்ளிகள் செயல்படுகின்றன.
ரூ.60 ஆயிரம் கட்டணம்:
அடிப்படை வசதி மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டதாகக் கூறி, இப்பள்ளிகளை மூடி வரும் நிலையில், தமிழகத்தில், "கிண்டர் கார்டன்', "ஆப்பிள் கிட்ஸ்', "ஆரஞ்ச் இன்டர்நேஷனல் ஸ்கூல்', "பிளே ஸ்கூல்', "பப்ளிக் ஸ்கூல்' என, பல பெயரில் மழலையர் பள்ளிகள் செயல்படுகின்றன.இதில், பிரி.கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இரண்டு மணி நேரம் வகுப்புகளுக்கு, ஆண்டுக்கு, 50 ஆயிரம் முதல், 60 ஆயிரம் ரூபாய் வரை கல்விக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.அரசின் அங்கீகாரமின்றி இப்பள்ளிகள் செயல்படுகின்றன. பணத்தை மட்டுமே மையமாகக் கொண்டு செயல்படும் இப்பள்ளிகளை, அரசு கண்காணிப்பதில்லை. பொறியியல் படிப்பு கட்டணத்தை விட, அதிக பணம் வசூலிக்கும் இப்பள்ளிகளை முறைப்படுத்த, எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அதுபோல, சி.பி.எஸ்.இ., - ஐ.சி.எஸ்.இ., கேம்பிரிட்ஜ் பள்ளி என, பல்வேறு பெயர்களில் பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இதில், 10ம் வகுப்பு வரை வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. இதற்கு கல்விக் கட்டணமாக, 50 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. இவற்றை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இழுத்தடிப்பு:
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சங்கத் தலைவர், நந்தகுமார் கூறியதாவது:குழந்தைகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத, எந்தவித அடிப்படை வசதியும் இன்றி செயல்பட்ட மழலையர், துவக்கப் பள்ளிகளை மூடுவது வரவேற்கத்தக்கது. 500க்கும் மேற்பட்ட மழலையர், துவக்கப் பள்ளிகள் பல ஆண்டுகளாக விண்ணப்பித்தும், காத்திருந்தும் அப்பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்காமல் இழுத்தடிப்பது கண்டிக்கத்தக்கது.சமச்சீர் கல்வித் திட்டம் காரணம் காட்டி, தரமான கல்வி வழங்குவதாகக் கூறி, புதிதாக 500க்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகள் துவங்க, அனுமதி வழங்கியுள்ளது. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகள் அங்கீகாரம் பெறாமலே செயல்பட்டு வருகின்றன.இவ்வாறு நந்தகுமார் கூறினார்.
மழலையர் பள்ளிக்கு அங்கீகாரம் கட்டாயமா?
தமிழகத்தில், மூடப்பட்டு வரும், 900 மழலையர், துவக்கப் பள்ளிகளில், 200க்கும் மேற்பட்ட, மழலையர் பள்ளிகள் தனியாகச் செயல்படுகின்றன. "மழலையர் வகுப்புகளுக்கு கட்டாய கல்விச் சட்டத்தின்படி அங்கீகாரம் பெற வேண்டியதில்லை' என, டில்லி ஐகோர்ட் தெரிவித்துள்ளது.இந்நிலையில், கட்டாய கல்வி சட்டம் காட்டி, தற்போது, தமிழகத்தில், 200க்கும் மேற்பட்ட நர்சரி பள்ளிகள் மூடப்பட உள்ளன. எனவே, மழலையர் பள்ளிக்கு அங்கீகாரம் பெற வேண்டுமா, இல்லையா என்பதை, மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் என, கல்வியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆசிரியர் கோரிக்கைகள் சார்பான, அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 தேதிக்கு பதிலாக 20ஆம் தேதி மாலை 5.30மணிக்கு தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு அழைப்பு
தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண். 14321 / இ1 / 2013, நாள்.15.06.2013ன் படி மாண்புமிகு பள்ளிக்கல்வி மற்றும் விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர் அவர்களால் 20.06.2013 வியாழக்கிழமை மாலை 5.30மணிக்கு, சென்னை - 6 தமிழ்நாடு பாடநூல் கழக கூட்டரங்கில் ஆசிரியர்கள் கோரிக்கைகள் சார்பாக, ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன்கூட்டம் நடத்திட பார்வையில் காணும் அரசு கடித எண்.18000/ GE(2) / 2013-1, நாள். 12.06.2013ல் உத்தரவிடப்பட்டது. அந்தந்த ஆசிரியர் சங்கங்களின் தலைவர் மற்றும் 2 மாநில பிரதிநிதிகள் கூட்டத்தில் தங்கள் கோரிக்கைகள் சார்ந்துவிவாதிக்கும் வகையில் பங்கேற்குமாறுகேட்டுகொள்ளப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு வரும் பொழுது தங்கள் சார்பான கோரிக்கைகள் 2 பிரதிகள் கொண்டுவருமாறு கனிவுடன் கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.
16/06/2013
கோவா பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் செக்ஸ் கல்வி நிபுணர் கமிட்டியின் பரிந்துரைகளை கோவா அரசு அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தும் என தெரிகிறது.
கோவாவில் சமீபத்தில் பள்ளிச் சிறுமி ஒருத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஆசிரியர் ஒருவர் மாணவிக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததால், அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்து ஆராய எம்எல்ஏ தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது. தொண்டு அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், கல்வித் துறை அதிகாரிகள் ஆகியோரை கொண்ட இந்தக் குழு, பள்ளிகளில் செக்ஸ் கல்வியை கொண்டு வர வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது. உடல் நலம், செக்ஸ் கல்வி குறித்த பாடத் திட்டம் பள்ளிகளில் சேர்க்கப்பட வேண்டும். கருத்தரங்கு, தெரு நாடகம் போன்றவை மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்களுக்கு செக்ஸ் கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பது போன்ற பரிந்துரைகளை இந்தக் கமிட்டி அரசுக்கு அளித்துள்ளது. நிபுணர் கமிட்டியின் பரிந்துரைகளை கோவா அரசு அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தும் என தெரிகிறது.
Subscribe to:
Posts (Atom)
