திருக்குறள்

20/06/2013

பாடப் புத்தகத்தில் பாதுகாப்பு அறிவுரை: பெற்றோர், கல்வியாளர்கள் வரவேற்பு

ஒன்பதாம் வகுப்பு பாடப் புத்தகத்தில், இடம்பெற்றுள்ள, "பல்லூடகப் பாதுகாப்பு" அறிவுரைகளை, பெற்றோர் வரவேற்றுள்ளனர். மொபைல் போன், லேப்-டாப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு, இந்த அறிவுரைகள் பயன்படும் என்பதால், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள், இதை வரவேற்றுள்ளனர்.

மொபைல் போன், இணையதளம் போன்ற தகவல் தொடர்பு வசதிகளை, பயன்படுத்தும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் போதிய விழிப்புணர்வு இல்லாததால், பல சிக்கல்களுக்கு உள்ளாகின்றனர். இந்த சிக்கல் தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி பாடத் திட்டத்திலேயே அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.

ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு, புதிதாக வழங்கப்பட்டுள்ள முதல் பருவ புத்தக, பின் அட்டையில், "பல்லூடகப் பாதுகாப்பு&' என்ற தலைப்பில், அறிவுரைகள் இடம் பெற்றுள்ளன. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

* மின் இணைப்பில் உள்ள போது, அலைபேசியைப் பயன்படுத்த வேண்டாம்.

* அதிர்வு நிலைகளில், அலைபேசியை உடலோடு ஒட்டியவாறு வைத்தல் தீங்கானது.

* அறிமுகமில்லாதவர்களின், தொடர் அழைப்புகளை நிராகரிப்பது நன்று.

* அலைபேசி தொலைந்து போனால், அந்த சிம்கார்டு இணைப்பகம் மூலம், உடனடியாக செயலிழக்க வைக்க வேண்டும்.

* அறிமுகமில்லாதவர்களிடம், தனிப்பட்ட விவரங்களை, மின்னஞ்சலில் பரிமாற்றம் செய்ய வேண்டாம்.

*பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களில், தெரியாதவர்களிடம், உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதைத் தவிர்க்கவும்.

* இணையதளங்களில் காணப்படும் கருத்துக்களை, கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.

* தகாத, முறைகேடான, இழிவான செய்திகளைப் பெற நேர்ந்தால், உடனே, பெற்றோர் அல்லது தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்கவும்.

* சமூக வலைதளங்களைப் பயன்படுத்திய பின், மறவாமல் வெளிவருவதற்கான பதிவை செய்யவும்.

இவை உள்ளிட்ட, 13 அறிவுரைகள் அச்சிடப்பட்டுள்ளன. மொபைல் போன், லேப்-டாப் பயன்படுத்தும் மாணவர்களுக்கு, இந்த அறிவுரைகள் பயன்படும் என்பதால், பெற்றோர் மற்றும் கல்வியாளர்கள், இதை வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment