திருக்குறள்

14/06/2013

மாணவர்களுக்கு இலவச "பஸ் பாஸ்' : பட்டியல் வாங்கும் பணி சுறுசுறுப்பு


பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் வழங்கும் பணிக்காக, போக்குவரத்து கழகங்களிடம் இருந்து, மாணவ, மாணவியரின் பட்டியலை வாங்கும் பணி சுறுசுறுப்பாகியுள்ளது.

கடந்த, 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையடுத்து, பள்ளிக்கு 
சென்று வரும் மாணவ, மாணவியருக்கான இலவச பஸ் பாஸ் தயார் செய்யும் பணியில், போக்குவரத்து துறையும், பள்ளி கல்வி துறையும் இணைந்து பணியாற்றி வருகின்றன. இதற்காக, போக்குவரத்து கழகங்களிடம் இருந்து, ஏற்கனவே இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்ட பட்டியலை, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பெற்று, அந்த பட்டியலில் தேவையான திருத்தங்கள் செய்து, கழகங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதன் அடிப்படையில், பஸ் பாஸ் தயார் செய்யும் பணியை, கழகங்கள் துவங்கும். சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்தில் இருந்து, மாணவர்கள் பட்டியலை, பள்ளி கல்வி துறை தரப்பில் வாங்கிச் செல்வதில் தாமதிக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. நேற்று, "தினமலர்' நாளிதழில், இது குறித்த செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, பெரும்பாலான பள்ளிகளுக்கான பட்டியலை, பள்ளி கல்வி துறை அதிகாரிகள் பெற்று செல்வதாக, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment