திருக்குறள்

12/06/2013

இன்று குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம்: தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?



இன்று உலக நாடுகள் முழுவதும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் குழந்தை தொழிலாளர்களை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்புத் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி இன்று உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தன. 

குழந்தை தொழிலாளர்கள் பெரும்பாலும் ஓட்டல்களில் பெஞ்ச் துடைப்பது, பெரிய தொழிற்சாலைகளில் சுத்தம் செய்வது போன்ற பணிகளுக்குத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால், அவர்கள் வளர்ந்த பின்னும் கூலியாக மட்டுமே வாழ முடிகிறது. இதிலும் சிலர் கொத்தடிமைகளாக்கப்படுகின்றனர். 

அதேபோல், சிறுவயதிலேயே வேலைக்கு செல்லும் குழந்தைகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகக்கூடும், மனரீதியாக பாதிக்கப்படவும் வாய்ப்புகள் உண்டு. அவர்கள், சிறு வயதிலேயே கல்வி அறிவு பெறவேண்டும். என்பது போன்ற பல்வேறு காரணங்களுக்காகவே குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு தினம் ஏற்படுத்தப்பட்டது. 

இருப்பினும், இந்தியாவில் மட்டும் சுமார் 50 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் இருப்பதாக ஆய்வில் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 17.5 லட்சம் தொழிலாளர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திலும், மேற்கு வங்காளத்தில் 5.5 லட்சம் பேரும், ராஜஸ்தானில் 4.05 லட்சம், குஜராத்தில் 3.9 லட்சம் குழந்தை தொழிலாளர்கள், வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

''குழந்தை தொழிலாளர்கள் முறையை தடுக்க இந்தியாவில் தனி சட்டமே ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும், இன்னும் குழந்தை தொழிலாளர்கள் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள் என்பது வேதனையளிக்கும் விஷயமாகவே இருக்கிறது. இவர்களை தடுக்க நடவடிக்கை எடுப்பார்களா அதிகாரிகள்?'' என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.மீண்டும் ஜூன் 12ஆம் தேதி குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்புத் தினத்தினத்தை நோக்கி.........

No comments:

Post a Comment