தமிழகத்தில் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் வேலைநேரம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், இதனை பள்ளி கல்வித்துறை மறுத்துள்ளது.
பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது.
பள்ளி நேர மாற்றம் தொடர்பாக தமிழகம் முழுவதும் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாதிரி சுற்றறிக்கையை கல்வித் துறை அனுப்பியுள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ஆலோசனை நடத்தி அதனை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அதன் அடிப்படையில், பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. எனவே, பள்ளி நேரம் மாற்றம் தொடர்பாக வெளிவந்த தகவல் தவறானது என பள்ளி கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அனைத்து கட்ட ஆலோசனைக்குப் பின்பே, பள்ளி நேர மாற்றம் தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment