திருக்குறள்

11/06/2013

வாத்தியார் அடிச்சா போலீசுக்கு போறது மாறணும்' அமைச்சர் சின்னையா "அட்வைஸ்'

ஆசிரியர்கள், மாணவர்களை அடித்துவிட்டால், காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். இந்த நிலைமை மாற வேண்டும்,' என, கால்நடை துறை அமைச்சர் சின்னையா பேசினார்.கால்நடைத் துறை அமைச்சர் சின்னையா பேசியதாவது:அந்த காலத்தில், நாங்கள் பள்ளியில் படிக்கும்போது, சரியாக படிக்கவில்லை என்றால், ஆசிரியர்கள் அடிப்பார்கள். அதை பெற்றோரிடம் சென்று கூறினால், அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். மாறாக, "பிள்ளைகளை நன்றாக அடித்து, சொல்லிக் கொடுங்கள்' என, பள்ளிக்கு நேரில் வந்து, ஆசிரியர்களிடம் சொல்லிவிட்டு செல்வார்கள்.இதனால், நாங்கள் படிக்கும்போது, ஆசிரியர் பணி சுலபமான பணியாக இருந்தது. தற்போது, ஆசிரியர் பணி கடுமையான பணியாகிவிட்டது. ஆசிரியர் மாணவனை அடித்துவிட்டால், அதுகுறித்து, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். இந்த நிலைமை மாறவேண்டும். பாடுபட வேண்டும்கல்விக்காக, 18 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை, முதல்வர் ஜெயலலிதா ஒதுக்கியுள்ளார். இதனால், ஏழை மாணவர்கள் கல்வித்தரம் உயரும். எனவே, அனைத்து ஆசிரியர்களும், கடுமையாக உழைத்து, மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பாடுபடவேண்டும்.இவ்வாறு, அமைச்சர் சின்னையா பேசினார்.

No comments:

Post a Comment