சென்னை அருகே உள்ள தாம்பரத்தில் கடந்த ஆண்டு தனியார் பள்ளியில் படித்த ஒரு மாணவி பள்ளிக்கு சொந்தமான வாகனத்தில் பயணம் செய்தபோது அதில் இருந்த ஒரு ஓட்டை வழியாக கீழே விழுந்து மரணமடைந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
இதனை அடுத்து பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. அதன் அடிப்படையில் தமிழக அரசு பள்ளி வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை விதித்து அதன்படி வாகனங்கள் சென்று வருகிறதா? என்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன் தொடர்ச்சியாக கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளி லும் வாகனங்கள் சோதனை யிடப்பட்டு பல வாகனங்க ளுக்கும், டிரைவர்களுக்கும் உரிமம் ரத்து செய்யப்பட்டது. வரும் 10-ந் தேதி இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களிலும் வட் டார போக்குவரத்து துறை, வருவாய்த்துறை, காவல் துறை அதிகாரிகள் அனைத்து பள்ளி வாகனங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாக னங்களில் சோதனை செய்வ தற்காக மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு அனைத்து வாகனங்களும் கொண்டு வர வேண்டும் என்று அறிவிக்கப் பட்டது. அதன்படி நேற்று காலை 10 மணியில் இருந்து மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊர்களில் உள்ள வேன், மினி வேன், பஸ்கள் உள்பட 50-க் கும் மேற்பட்ட வாகனங்கள் வந்தன.
இந்த வாகனங்களை அரியலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஜியா வுல்ஹக் தலைமையில் மாவட்ட வருவாய் அதிகாரி கருப்புசாமி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் ஜோதி நாதன் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொரு வாகனங்களையும் அரசு அறிவித்துள்ளபடி படிக்கட்டுகள் அவசர வழிகள், குழந்தைகள் அமரும் இருக்கைகள் போன்றவை சரியாக உள்ளதா? வண்டிகளில் ஏதே னும் ஓட்டைகள் இருக்கின்ற னவா? அனைத்து வாகனங்களும் தகுதி சான்றுகள் பெற்றுள்ளதா? என்றும், டிரைவர்க ளுக்கு குறைந்த பட்சம் 5 ஆண்டுகளுக்கு மேல் அனு பவம் இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தனர்.
ஒரு சில வாகனங்களில் உள்ள குறைகளை 2 தினங்க ளுக்குள் சரி செய்ய வேண்டும் என்றும், டிரைவர்களுக்கும் 5 ஆண்டுகளுக்கு குறைவாக உள்ளவர்களை பள்ளிவாக னங்களை ஓட்டக் கூடாது என்றும் உத்தரவிட்டனர்.
இதுபோன்று சோதனை இந்த ஆண்டு முதல் 3 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் என்று வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment