திருக்குறள்

16/06/2013

ஆதிதிராவிடர் விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்: அரியலூர் கலெக்டர் அறிவிப்பு

அரியலூர் மாவட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 1 கல்லூரி மாணவர் விடுதியும், 1 ஐ.டி.ஐ. மாணவர் விடுதியும், 13 பள்ளி மாணவர் விடுதிகளும், 7 பள்ளி மாணவியர் விடுதிகளும் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவ மாணவியர்கள் மற்றும் கல்லூரிகளில் பட்டப்படிப்பு பயிலும் மாணவர்கள் மேற்படி விடுதிகளில் சேர்ந்து பயனடையலாம். இதற்கு மாணவ, மாணவியர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.1லட்சத்திற்குள் இருக்க வேண்டும். 

விடுதியிலிருந்து மாணவர் குடியிருப்பு 5 கிலோ மீட்டருக்கு மேல் இருக்க வேண்டும். மாணவியருக்கு இது பொருந்தாது. மாணவ, மாணவியர்களுக்கு விடுதிகளில் தரமான உணவு காலை, மாலை மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளிலும் வழங்கப்படுகிறது. அரியலூர் மாவட்டத்திலுள்ள மாணவ- மாணவியர்கள் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் சேர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

2013-2014-ஆம் ஆண்டிற்கு விடுதியில் சேர்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் விடுதி காப்பாளினியிடம் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து அந்தந்த காப்பளார்-காப்பாளினி வசம் 30.06.2013க்குள் ஒப்படைத்திடவும் மாவட்ட கலெக்டர் எம்.ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment