திருக்குறள்

18/06/2013

2010 ஆகஸ்டு 23க்கு முன்பு சான்றிதழ் சரிபார்த்து காலதாமதமாக பணி நியமனம் பெற்றவர்களுக்கு தகுதி தேர்வு தேவையில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

கல்வி உரிமைச் சட்டம் 2009ன்படி, 1 முதல் 10ம் வகுப்பு வரை தகுதித்தேர்வு மூலம் ஆசிரியர்களை நியமிக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனம் 2010ம் ஆண்டு ஆகஸ்டு 23ல் வெளியிட்டது. அதன்படி, 2010 ஆகஸ்டு 23க்கு பிறகு பள்ளிகளில் நியமிக்கப்படும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கண்டிப்பாக தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த அறிவிப்பால் தமிழகத்தில் 2010 ஆகஸ்டு 23க்கு பிறகு அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழகத்தில் முதல் தகுதித்தேர்வு தேதி அறிவிப்புக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விதிவிலக்கு அளிக்க ஆசிரியர் அமைப்புகள் கோரின. ஆனால், டிஆர்பி மறுத்துவிட்டது. இந்நிலையில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 2010 ஆக.23க்கு முன்பு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிட்டு, சான்றிதழ் சரிபார்க்கப்பட்டு, காலதாமதமாக நியமிக்கப்பட்டவர்கள் மட்டும் தகுதி தேர்வு எழுத தேவையில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மேலும் 2010 ஆக.23க்கு பிறகு பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தால் கண்டிப்பாக தகுதி தேர்வு எழுத வேண்டும் எனவும் டிஆர்பி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment