கல்வி குழு நிர்ணயித்ததைவிட அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுயநிதி பள்ளி கட்டண நிர்ணயக்குழு தலைவர் சிங்காரவேலு எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: தற்போது 8,226 பள்ளிகளுக்கு கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழு முன் ஆஜராகாத 3 ஆயிரம் பள்ளிகளுக்கு இன்னும் கட்டணம் நிர்ணயம் நிர்ணயம் செய்யவில்லை. தற்போது நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணம் 20015-16 ஆம் ஆண்டு வரை அமலில் இருக்கும். முந்தைய ஆண்டு கட்டணத்தை விட தற்போது அதிகமாகவே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே முந்தைய கட்டணத்தை விட தற்போதைய கட்டணத்தை ஒப்பிடக் கூடாது . சென்னை உயர் நீதிமன்றம் வரைமுறைக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு கூடுதலாக வசூலிக்கப்பட்ட கட்டணம் ஒரு கோடி ரூபாய் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டள்ளதாகவும் சிங்காரவேலு கூறினார்.
No comments:
Post a Comment