திருக்குறள்

12/06/2013

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தில், இந்தாண்டு, நான்கு புதிய திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன

அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம், இந்தியா முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 14 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் கல்வி வழங்க வேண்டும் என்பதே, இதன் நோக்கம். அதன்படி, அனைவருக்கும் கல்வி வழங்குவதற்குத் தேவையான, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் படிப்பு, தொழில் கல்வி, மாற்றுத் திறனாளிகள் கல்விக்கு முக்கியத்துவம், மாணவியர் விடுதிகள் அமைப்பது என, நான்கு திட்டங்களை அமல்படுத்த, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

இதற்கான ஒப்புதல், ஜூலை மாதத்தில் வழங்கப்படும் என, கல்வித் துறை அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த ஆண்டு, பாட ஆசிரியர் திறன் வளர்ப்பு பயிற்சிக்கு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அரையாண்டு தேர்வுக்கு பின், பயிற்சி வழங்கினால், பொது தேர்வு எழுதும் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், பயிற்சி நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இந்தாண்டு பயிற்சியை, ஜூலையில் துவங்கி, ஆகஸ்டில் முடிக்க, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment