திருக்குறள்

16/06/2013

இடைநிலை ஆசிரியர் ஊதியக் முரண்பாடு உள்ளிட்ட 7அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி சென்னையில் செப்25 முதல் தொடர் மறியல் நடத்த தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக்குழுவில் முடிவு

சென்னையில் உள்ள மாஸ்டர் மாளிகையில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை தொடங்கியது. இப்பொதுக்குழு கூட்டத்தில் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை நீக்கவும், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் ரத்து, ஆசிரியர் தகுதித் தேர்வு ரத்து உள்ளிட்ட 7 அம்சக்கோரிக்கைளை தமிழக அரசு நிறைவேற்றிட வலியுறுத்தி செப்டம்பர் 25 முதல் சென்னையில் தொடர் மறியல் நடத்திட முடிவு செய்யப்பட்டதாகவும், இதையடுத்து வருகிற ஜூன் 29 முதல் மாநில பொதுக்குழு கோரிக்கைகளை விளக்கி மாவட்ட அளவில் ஆயுத்தக் கூட்டம் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வருகிற ஜூன் 29-ம் தேதி ஆயுத்தக் கூட்டம் திருச்சியில் நடைபெறவுள்ளது.

No comments:

Post a Comment