இந்த ஆண்டு முதல் கல்வி உதவித்தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஆவணங்களை மாணவர்களிடம் பெறுவது குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டன. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு தோறும் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை பெற தகுதியுள்ள மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து கல்வி மாவட்ட அளவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு ஆலோசனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில் ஆகஸ்டு 31ம் தேதிக்குள் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் 6ம் வகுப்பு முதல் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்வி வரை பயிலுவதற்கு உரிய கல்வி உதவித்தொகை வழங்க பெற்றோரின் வருமான வரம்பு உள்ளிட்ட தகுதிகள் குறித்தும் விளக்கம் வழங்கப்படுகிறது
இதுவரை மாணவர்களுக்கு காசோலையாக வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகை இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் மாணவர்களின் வங்கி கணக்குகளில் நேரிடையாக சேர்க்கப்பட உள்ளது. இதற்காக மாணவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவது, ஜாதி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் தாமதமின்றி வழங்க நடவடிக்கை எடுப்பது, விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் முறை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டிய ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது.
வங்கி மூலம் உதவித்தொகை: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி
மத்திய, மாநில அரசுகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் துவங்கி, அயல்நாடு சென்று கல்வி கற்பது வரை, கல்வி உதவித்தொகை, ஊக்கத்தொகை உள்ளிட்ட சலுகை மற்றும் திட்டங்களை செயல்படுத்துகிறது.
தமிழகத்தில், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் நலத்துறை சார்பில், மூன்றாம் வகுப்பு முதல், மருத்துவப் படிப்பு வரை, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை சார்பிலும், உழவர் பாதுகாப்பு திட்ட தொழிலாளர்களின் குழந்தைகள், அமைப்புசாரா தொழிலார்கள் துறை சார்பில், அவர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
அவை, பணமாகவே கடந்த காலங்களில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்தாண்டு முதல், கல்லூரி மாணவர்களின் பெயரில் வங்கி கணக்கு துவங்கப்பட்டு, கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஆனால், நடப்பாண்டில் வழங்கப்படும், கல்வி உதவி அனைத்தும், பள்ளி மாணவருக்கும், வங்கி கணக்கு துவங்கி, அதன் மூலமே வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
நடப்பாண்டு, மோசடியை தவிர்க்க, மாணவர்கள் பெயரில், "நெட் பேங்கிங்" வசதியுள்ள வங்கிகளில், மாணவர்களின் பெயரில் தந்தையுடன், கூட்டு அக்கவுண்ட் துவங்கப்படும்.
மாணவர்கள் வங்கிக்கு சென்று,கணக்கு துவங்க செல்ல வேண்டியதில்லை.
வங்கியாளர்களே, சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று, வங்கி கணக்கை துவங்கி கொடுப்பர். பின், எங்களது துறையில் இருந்து பணம் பரிவர்த்தனை, மாணவர்களின் கணக்கில் சேர்க்கப்படும்.
"நெட் பேங்கிங்" வசதியில்லாத பகுதி மாணவர்களுக்கு, தபால் அலுவலகங்களில் கணக்கு துவங்கி, உதவித்தொகை கிடைக்க வழிவகை செய்யப்படும். மேலும், மாணவரின் பெற்றோர் செய்யும் தொழில் குறித்த விவரங்களை, புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பத்தில், வி.ஏ.ஓ., சான்று பெற வேண்டும்.
No comments:
Post a Comment