திருக்குறள்

13/09/2014

செப்.13: சர்வதேச முதலுதவி தின பகிர்வு..

உலக முதலுதவி தினம் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் இரண்டாம் வாரத்தின் சனிக்கிழமை அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக செஞ்சிலுவை கூட்டமைப்பு கடந்த பதினான்கு வருடங்களாக உயிர்களை காப்பதில் முதலுதவியின் முக்கியத்துவத்தை உணர வைக்க இந்த நாளை கொண்டாடி வருகிறது.

ஒரு உயிரைக்காக்க,மேலும் ஆபத்து ஏற்படாமல் இருக்க,ஒரு குறிப்பிட்ட தாக்குதலில் இருந்து பாதிக்கப்பட்டவரை மீட்க என்று பலவற்றுக்கு முதலுதவி பயன்படுகிறது. மூளை பாதிக்கப்பட்டால் கோமா நிலையும்,இதயம் பாதிக்கப்பட்டால் நாடித்துடிப்பு இறங்குவதும்,நுரையீரலில் சிக்கல் உண்டானால் மூச்சு சிக்கல்களுக்கு உண்டாகும். முதலுதவி செய்ய நீங்கள் மருத்துவராகவோ,நர்சாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை.


ஆறு முக்கியமான அம்சங்களில் கவனம் செலுத்தினால் வெவ்வேறு சமயங்களில் பல உயிர்களை காக்க முடியும்.
முதல் படி :
ஆபத்தை விளைவிக்கும் காரணியைக்கண்டறிந்து அதில் இருந்து பாதிக்கப்பட்டவர் மற்றும் உங்களை காத்துக்கொள்ளுதல். எடுத்துக்காட்டாக பிளாஸ்டிக் எரிப்பால் உண்டாகும் புகையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டால் அதை அணைக்க வேண்டும். அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டும்.

இரண்டாவது படி :
பாதிக்கப்பட்ட நபர் சுயநினைவோடு இருக்கிறாரா என்று பாருங்கள். அப்படி இருக்கிறார் என்றால் அவருக்கு ஏதேனும் உதவி தேவையா என்று கேளுங்கள். அவர் சுய நினைவில் இல்லை என்றால் முதலுதவி செய்யுங்கள்

மூன்றாவது படி :
மூக்கை பரிசோதியுங்கள். அதில் ஏதேனும் அடைப்பு இருந்தால் உங்கள் விரலால் இருக்கும் அடைப்பை நீக்குங்கள். அவரின் நெற்றியில் ஒரு கையை வைத்து தலையும் பின்புறம் நகர்த்தி,முகவாய்கட்டையை தூக்குங்கள்

நான்காவது படி :
மூச்சை ஒழுங்காக விடுகிறாரா என்பதை கேட்டு,கவனித்து,உணர்ந்து கண்டறியுங்கள். ஒரு நிமிடத்துக்கு பதினைந்து-பதினெட்டு முறை மூச்சு விடுதல் நிகழவேண்டும்.

ஐந்தாவது படி :
அப்படி மூச்சு விடாவிட்டால் வாயோடு வாய் வைத்து நிமிடத்துக்கு பத்து முறை காற்றை உள்செலுத்துங்கள். மற்றவர்களை சுற்றியிருக்க விடாதீர்கள்.

ஆறாவது படி:
ரத்த சுழற்சி : நாடித்துடிப்பை சோதித்து பாருங்கள். மூச்சுக்குழாய் பக்கம் கழுத்துக்கு பக்கவாட்டில் தொட்டுப்பார்த்து நாடித்துடிப்பு இருக்கிறதா என்று பாருங்கள். அப்படி இல்லையென்றால் மேலே சொன்ன வாயோடு வாய் வைத்து காற்றை உள்செலுத்துதலை செய்யுங்கள். அதே போல நெஞ்சை அழுத்தமாக அழுத்துவதும் அவசியம் . இந்த செயலை பாதிக்கப்பட்ட நபர் மூச்சுவிடும் வரையோ,இருமும் வரையோ அல்லது ஏதேனும் அசைவை காட்டும் வரையோ தொடர்ந்து செய்ய வேண்டும். இவை பொதுவாக செய்ய வேண்டியவை. அதே சமயம் வெவ்வேறு விபத்துக்கள் மற்றும் சிக்கல்களுக்கு ஏற்ப முதலுதவியும் மாறுபடும்

No comments:

Post a Comment