திருக்குறள்

28/09/2014

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்று முதல்வர் பதவியை இழந்ததையடுத்து, தற்போது நிதி அமைச்சராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னை ரயப்பேட்டையிலுள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகளுடன் சற்று நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆளுனர் ரோசய்யாவை சந்திக்க செல்கிறார். 

பன்னீர்செல்வம் தலைமையிலான புதிய அரசு நாளை பதவி ஏற்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஓ.பன்னீர்செல்வம் ஏற்கனவே 2001 செப்டம்பர் முதல் 2002 மார்ச் மாதம் வரை தமிழக முதல்வராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment