6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான படிப்பில், வீட்டுப்பாடம் என்பதற்கு பதிலாக, ஏதேனும் வேறொரு மாற்று இடம்பெற முடியுமா? என்று பள்ளிகளிடம் CBSE
கேட்டுள்ளது.
இதுதொடர்பாக, நிரப்ப வேண்டிய ஒரு கேள்விப் படிவத்தை பள்ளிகளுக்கு, CBSE அனுப்பியுள்ளது. இதன்மூலம், வீட்டுப்பாடம்(homework) பற்றிய பள்ளிகளின் புரிந்துணர்வு மற்றும் அணுகுமுறையில் மாற்றம் ஏற்படும் என்று CBSE நம்புகிறது.
வீட்டுப்பாடம் என்பது ஒரு மாணவன் வகுப்பில் படித்த விஷயங்களை, மறுஆய்வு செய்து, அதுதொடர்பான சிந்தனைகளை வீட்டில் வளர்த்துக் கொள்வதற்கான ஒரு அம்சமே வீட்டுப்பாடம் என்பது ஒரு பொதுவிதியாக இருந்தாலும், இன்றைய வீட்டுப்பாடங்கள் அனைத்து அதுபோன்று இருக்கிறதா? என்பது குறித்த பதில்களை இதன்மூலம் CBSE எதிர்பார்க்கிறது.
சில நல்ல பள்ளிகள், உண்மையிலேயே பயனுள்ள வீட்டுப் பாடங்களை, மாணவர்களுக்கு தரும் அதேவேளையில், பல பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய அனைத்து தரப்பாரையும் எரிச்சலும், சோர்வும் அடையச் செய்யும் வகையிலான வீட்டுப்பாட திட்டத்தைக் கொண்டுள்ளன.
எனவே, இத்தகைய விஷயங்களை கருத்தில்கொண்டு, வீட்டுப்பாடம் தொடர்பான ஒரு உள்ளார்ந்த புரிதலையும், சிறப்பான மாற்றத்தையும் கொண்டுவரும் வகையில், பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக மேற்சொன்ன கேள்விப் படிவம் தயாரிக்கப்பட்டுள்ளது. அக்கேள்விப் படிவத்தில், தேவையின் அடிப்படையில், பலவிதமான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன
No comments:
Post a Comment