திருக்குறள்

07/09/2013

மாணவர் விவர தொகுப்பை ஒரேநேரத்தில் பதிவேற்ற முயன்றதால் இணையதளம் ஸ்தம்பித்தது

தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கின்ற சுமார் 1.33 கோடி மாணவ, மாணவியரின் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் ஒரே நேரத்தில் தங்களது மாணவர்கள் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். ஒரே நேரத்தில் அதிக அளவில் பதிவேற்றம் செய்ய முயன்றதால் கம்ப்யூட்டர் சர்வர் முடங்கியது. இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் 4 மண்டலமாக பிரித்து இப்பணிகளை மேற்கொள்ள கால அட்டவணை வகுத்து தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார். மேலும் காலக்கெடுவும் அக்டோபர் 1ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது .இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது: ஒரே நேரத்தில் அதிக அளவிலான பள்ளிகள் இந்த இணையதளத்தில் உள்ளீடுகள் செய்ய முயல்வதை கட்டுப்படுத்தும் வகையில் மாணவர்கள் விபரங்களை உள் ளீடு செய்ய வேண்டியவர்களின் பணிகள் பாதிக்காத வகையிலும், கணினி முறையாக அனைவருக்கும் பயன்படும் விதத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களுக்கும் கால அட்டவணை வகுக்கப்பட்டு மாணவர் விபரங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் 8 மாவட்டங்களின் விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யும்போது பிற மாவட்டங்களின் விபரங்களை பதிவு செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவுகளை முழுமையாக முடிக்க வேண்டும்.

பழக்க வழக்கத்தை வைத்து ஜாதி சான்றிதழ் மறுக்கக்கூடாது



நெல்லை மாவட்டம் சிவகிரியை சேர்ந்த இசக்கிராஜ், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: நான் பழங்குடியினர் பிரிவை சேர்ந்த, இந்து காட்டுநாயக்கன் வகுப்பை சேர்ந்தவன். என் சகோதரர்கள் பூமாரிமுத்து, ஆறுமுககனி, மாமா மகன் ராஜேந்திரன் ஆகியோர், இந்து காட்டுநாயக்கன் ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளனர். காட்டு நாயக்கன் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு அரசு 2 சென்ட் இடம் வழங்குகிறது. அதன்படி என் தாயாருக்கு அரசு 2 சென்ட் இடம் வழங்கியுள்ளது. நான் இந்து காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ் கேட்டு தென்காசி கோட்டாட்சியருக்கு விண்ணப்பித்தேன். ஆனால், நான் இந்து காட்டு நாயக்கன் வகுப்பை சேர்ந்தவன் என்பதற்கு தெளிவான ஆவணங்கள் இல்லை என்றும், சகோதரர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கியதை வைத்தும், தாய்க்கு அரசு 2 சென்ட் இடம் வழங்கியதை வைத்தும் அதே ஜாதி சான்றிதழ் கேட்க முடியாது என்றும், என்னுடைய பழக்கவழக்கம், மற்ற காட்டு நாயக்கன் வகுப்பை சேர்ந்தவர்களின் பழக்க வழக்கத்தில் இருந்து மாறுபட்டு இருப்பதாகவும் சொல்லி, என் விண்ணப்பத்தை தென்காசி கோட்டாட்சியர் நிராகரித்தார். அவரது உத்தரவை ரத்து செய்து, எனக்கு ஜாதி சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை விசாரித்து நீதிபதிகள் பால்வசந்தகுமார், தேவதாஸ் பிறப்பித்த உத்தரவு: ஜாதி சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவரின் பழக்கத்தையும், அவரது உறவினரின் பழக்கத்தை மட்டும் வைத்து ஜாதி சான்றிதழ் வழங்க மறுக்கக்கூடாது. பழக்க வழக்கம் மாறியிருந்தால், அவர் குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர் அல்ல என கூற முடியாது. தேவையான, ஏற்கதக்க ஆவணங்கள் உள்ளதா என்பதை மட்டும் பார்க்க வேண்டும். மனுதாரரின் சகோதரர்களுக்கும், உறவினருக்கும் காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரரின் தாயாருக்கு, அந்த வகுப்பை சேர்ந்தவருக்கு வழங்கப்படும் 2 சென்ட் இடத்தை அரசு வழங்கியுள்ளது. இந்த ஆதாரங்கள் போதுமானது. மனுதாரருக்கு 4 வாரத்தில் இந்து காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். எக்ஸ்ட்ரா தகவல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 7,94,697 பழங்குடியினர் உள்ளனர். அரசின் பழங்குடியின பட்டியலில் 36 ஜாதிகள் இடம்பெற்றுள்ளன.

பட்டதாரி ஆசிரியர்கள் உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்றாலும் கூட எம்.பில் படிப்புக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் மதுரை ஐகோர்ட்டு உத்தர

பட்டதாரி ஆசிரியர்கள் உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்றாலும் கூட எம்.பில் படிப்புக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பட்டதாரி ஆசிரியர்கள்

மதுரை சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வருபவர் நாகசுப்பிரமணியன். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:-

நான் எம்.எஸ்சி, எம்.எட் முடித்துள்ளேன். உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதிய உயர்வு பெற்று வருகிறேன். இந்த நிலையில் 1988-ம் ஆண்டு எம்.பில் முடித்து விட்டேன். இதற்காக தனியாக ஊக்க ஊதியம் அளிக்க வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் மதுரை மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் கொடுத்தேன். ஆனால், எனது விண்ணப்பத்தை 25.11.2010 அன்று கல்வி அதிகாரி நிராகரித்தார்.

ரத்து செய்ய வேண்டும்

உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்று வந்த பட்டதாரி ஆசிரியரான காசிமணி உள்ளிட்ட சிலருக்கு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் எம்.பில் படிப்புக்காக தனியாக ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.

எனவே, எனக்கு எம்.பில் படிப்புக்காக தனியாக ஊக்க ஊதியம் தர முடியாது என்ற கல்வி அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து விட்டு எம்.பில் படிப்புக்காக எனக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அரசாணை

இதே போன்று சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்றி வரும் பாலஅய்யப்பன், சுந்தரராஜபாண்டியன், பி.எம்.ஸ்ரீனிவாசன், வி.வி.சுந்தரமூர்த்தி ஆகியோரும் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி மணிக்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில் வக்கீல் அருள்வடிவேல் சேகர் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதி உத்தரவில் கூறி இருப்பதாவது:-

உயர்கல்விக்காக 2 ஊக்க ஊதியம் பெற்று வரும் பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் எம்.பில் படிப்புக்காக தனியாக ஊக்க ஊதியம் கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அவர்களுக்கு தனியாக ஊக்க ஊதியம் வழங்க ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டு வழக்கு தொடர்ந்தவர்களுக்கு மட்டும் தனியாக ஊக்க ஊதியம் வழங்கப்படுகிறது.

கோர்ட்டு நேரம் வீணாகிறது

பொதுவாக ஒரு உத்தரவு பிறப்பிக்கும் போது வழக்கு தொடர்ந்த நபருக்கு மட்டும் தான் அது பொருந்தும் என்று அதிகாரிகள் கருதுவது தவறானது. ஒவ்வொருவரையும் கோர்ட்டுக்கு சென்று உத்தரவு பெற்று வரும் படி கூறுவதும் சரியல்ல.

தேவையில்லாமல் கோர்ட்டுக்கு செல்லும்படி கூறுவதால் தேவையில்லாமல் கோர்ட்டு நேரமும் வீணாகிறது. எனவே, ஏற்கனவே உள்ள அரசாணைப்படி மனுதாரர்களுக்கும் எம்.பில் படிப்புக்காக 4 வாரத்துக்குள் தனியாக ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

355 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதை ஜனாதிபதி வழங்கினார் கல்வியறிவு பெற்ற ஆண்-பெண் வித்தியாசத்தை ஒழிக்க வேண்டுகோள்

ஆசிரியர் தினமான  செப்-5 நாடு முழுவதும் உள்ள 355 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார். அப்போது அவர், கல்வியறிவு பெற்ற ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே எண்ணிக்கையில் இருக்கும் வித்தியாசத்தை ஒழிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.


355 ஆசிரியர்களுக்கு விருது

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான நேற்று நாடு முழுவதும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நல்லாசிரியர்களுக்கு விருதினை வழங்கினார்.177 தொடக்க பள்ளி ஆசிரியர்கள், 140 இடைநிலை ஆசிரியர்கள் உள்பட 355 பேருக்கு இந்த விருதினை அவர் வழங்கினார். சான்றிதழ், வெள்ளி பதக்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவை அவர்களுக்கு வழங்கப்பட்டது.

பெண்களுக்கு மறுப்பதா?

விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது;-

கல்வி அறிவு பெற்ற ஆண், பெண்கள் இடையே எண்ணிக்கையில் உள்ள வித்தியாசத்தை ஒழிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு செயலாற்றி, நமது வளர்ச்சி இலக்கை அடைய வேண்டும். பெண் குழந்தைகள் என்பதாலேயே அவர்களுக்கு கல்வி மறுக்கப்படுவதைவிட வருத்தமளிக்கும் செயல் வேறு எதுவும் இருக்க முடியாது.

‘அனைத்தும் அறிவுக்காகத் தான், அனைவரும் அறிவு பெற வேண்டும்’ என்ற பொன்மொழியை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

கல்வி பாடத்திட்டங்களை தரமாக்குவதற்கான தேவை அதிகம் உள்ளது பற்றிய விழிப்புணர்வு அனைத்து ஆசிரியர் சமுதாயத்திடம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். கற்கும் மற்றும் கற்பிக்கும் முறைகளில் தகுந்த, வலிமையான அணுகுமுறைகளை ஏற்படுத்த நவீன கல்விமுறைகளை சேர்ப்பது அவசியம். கல்வியின் தரத்தை மேம்படுத்த புதிய திட்டங்களை உருவாக்குவதும் நமக்கு அவசியமாக இருக்கிறது. இதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் பங்கு மிகவும் முக்கியம். அனைவரும் இணைந்து ஒரு நல்ல பலனை காண உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

சென்னை ஆசிரியைகள்

சென்னையை சேர்ந்த சி.பி.எஸ்.இ. ஆசிரியைகள் ஆர்.சி.செல்வராணி, கீதா பாலசந்தர், கன்யா ஸ்ரீதர், கீதா நந்தகுமார், ஓசூர் வசந்தி தியாகராஜன் ஆகியோரும் ஜனாதிபதியிடம் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர்.

370 ஆசிரியர்களுக்கு ராதாகிருஷ்ணன் விருது: 
உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன்
வழங்கினார்.

பள்ளி கல்வித்துறை சார்பில், நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவில், 370 ஆசிரியர்களுக்கு, ராதாகிருஷ்ணன் விருதுகளை, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.

சென்னை, சேத்துப்பட்டு, எம்.சி.சி., பள்ளியில், நேற்று மாலை விழா நடந்தது. பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், சபிதா, தலைமை தாங்கினார். பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வரவேற்றார். பள்ளி கல்வித்துறை, தொடக்க கல்வித்துறை, மெட்ரிக் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருந்து, தேர்வு செய்யப்பட்ட, 370 ஆசிரியர்களுக்கு, உயர்கல்வி அமைச்சர் பழனியப்பன், ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கினார். 5,000 ரூபாய் ரொக்கம், பாராட்டு பத்திரம் மற்றும் வெள்ளி பதக்கம் ஆகியவற்றை, அமைச்சர் வழங்கினார்.

அமைச்சர் பேசுகையில், "கடந்த, இரு ஆண்டுகளில், 63 ஆயிரம் ஆசிரியர் நியமனம் அறிவிக்கப்பட்டு, இதுவரை, 51 ஆயிரம் ஆசிரியர் நியமிக்கப்பட்டுள்ளனர். கல்வித்துறையை முன்னேற்ற, முதல்வர், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்" என்றார்.

சபிதா பேசுகையில், "அரசுப் பள்ளிகளில், ஆங்கில ழி கல்வி துவங்கப்பட்டுள்ளன. இதனால், மாணவர் சேர்க்கை, கடந்த ஆண்டை விட, ஒரு லட்சம் அதிகரித்துள்ளது. மாணவ, மாணவியர் நலனுக்காக, 14 வகையான நலத்திட்டங்களை, அரசு செயல்படுத்தி வருகிறது" என்றார்.

சென்னை மாவட்ட கலெக்டர், சுந்தரவல்லி, தேசிய ஆசிரியர் நல நிதிக்காக, மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலையை, அமைச்சரிடம் வழங்கினார். விழாவில், எஸ்.எஸ்.ஏ., திட்ட இயக்குனர், பூஜா குல்கர்னி, பாடநூல்கழக நிர்வாக இயக்குனர், மகேஸ்வரன், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குனர், இளங்கோவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


போலீஸ் ஸ்டேஷன் போனால் தான் நல்லாசிரியர் விருது கிடைக்குமா: ஆசிரியர்கள் ஆதங்கம்


மாநில நல்லாசிரியர் விருது பெற, போலீஸ் சான்றிதழ் பெற வேண்டும் என்ற கல்வித் துறையின் புதிய முடிவு, வேதனையாக உள்ளது என, ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியப் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு, செப்.,5ம் தேதி நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்தாண்டு, மாநிலத்தில் 370 ஆசிரியர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. விருது பெற குறைந்தது 20 ஆண்டுகள் வரை எவ்வித புகாருக்கும் ஆளாகாமல் பணியாற்றியிருக்க வேண்டும்.

மாணவர் மற்றும் சமுதாய மேம்பாட்டிற்கான செல்பாடுகளில் ஆசிரியர்கள் பங்கு வகித்திருக்க வேண்டும். இதையெல்லாம் விட, அரசியல் பின்னணி இருக்க கூடாது போன்ற தகுதிகள் விருது பெற பரிசீலிக்கப்படும். இந்தாண்டு, இந்த விருது பெற விண்ணப்பித்த ஆசிரியர்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில், ஐவர் கமிட்டி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கே சென்று அந்த ஆசிரியர்கள் குறித்து விசாரித்து, விருதுக்கு தகுதியானவர்களை சிபாரிசு செய்தது.

இதன்பின் பலகட்ட நடவடிக்கைக்கு பின் தான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இந்தாண்டு புதிய முடிவாக, விருதுக்கு தேர்வான ஆசிரியர், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில், "தங்கள் மீது குற்ற வழக்குகள் எதுவும் இல்லை" என்று சான்றிதழ் பெற்று வரவேண்டும் என, வாய்மொழி உத்தரவு போடப்பட்டது.

இதனால், விருது கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாட முடியாமல், ஆசிரியர்கள் போலீஸ் ஸ்டேஷன் அலையவேண்டியிருந்தது. பலர் அதுபோன்ற சான்றிதழ் பெற முடியாமல் தவித்து, ஒரு வழியாக அந்த சான்றிதழை பெற்ற பின்னர் தான் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: இருபது ஆண்டுகளுக்குமேல் கல்வி கற்பித்து அனுபவம் உள்ள ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் தான் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. விருது அறிவிக்கப்பட்ட பின் அவர்களை போலீஸ் ஸ்டேஷன் சென்று சான்றிதழ் வாங்கி வர வேண்டும் என்று கூறுவது கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்த உத்தரவை கல்வித் துறை அதிகாரிகள் உடனடியாக வாபஸ் பெறவேண்டும், என்றனர்.

இந்தாண்டு, நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்வதில் அரசியல் தலையீடு அதிகம் இருந்ததாக சர்ச்சை எழுந்தது. சிபாரிசு செய்யப்பட்ட பல ஆசிரியர்கள் மீது குற்ற வழக்குகள், பாலியல் வழக்குகள் இருந்துள்ளன. இதனால், அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், தாங்கள் தப்பிக்கவே, போலீஸ் சான்றிதழ் பெற்று வரவேண்டும் என்று கடைசி நேரத்தில் வாய்மொழியாக உத்தரவிட்டனர் என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

பி.எப். கணக்கு விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதி இன்று அறிமுகம்

பி.எஃப். கணக்கு குறித்த விவரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதி இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது என தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது.

பி.எப். சிலிப்

தற்போதுள்ள நிலையில் பி.எஃப். சந்தாதாரர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் வாயிலாக பி.எஃப். சிலிப் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக முந்தைய நிதி ஆண்டிற்கான விவரத்தை மட்டுமே தெரிந்து கொள்ளலாம். சென்ற 2012-13-ஆம் ஆண்டிற்கான கணக்கு விவரம் குறித்த சிலிப் இம்மாதம் 30-ந் தேதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில சந்தர்ப்பங்களில் இந்த கணக்கு விவரத்தை பெறுவதில் அதிக காலதாமதம் ஏற்படுகிறது.

இனிமேல் சந்தாதாரர்கள் அன்றயை நிலவரப்படி அவர்கள் கணக்கில் உள்ள தொகை குறித்த விபரத்தை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம். இதற்காக ஆன்லைனிலிருந்து பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்துக் கொள்ளலாம். இதனால் 5 கோடி சந்தாதாரர்கள் பயன் பெறுவார்கள்.

இவ்வாண்டு மார்ச் 31-ந் தேதி நிலவரப்படி சந்தாதாரர்கள் கணக்கில் உள்ள பி.எஃப். தொகை விவரத்தை வட்டியுடன் சேர்த்து தெரிந்து கொள்ளலாம் என மத்திய பிராவிடண்ட் ஃபண்டு ஆணையாளர் கே.கே. ஜலன் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதத்திலிருந்து ஒருவரது கணக்கில் உள்ள தொகையை வட்டி சேர்க்காமல் மாதந்தோறும் தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் நடப்பு நிதி ஆண்டிற்கான பிராவிடண்டு பண்டு வட்டிவிகிதம் இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை.

ஆன்லைனில் பி.எஃப். கணக்கை தெரிந்து கொள்ளும் வசதியை மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சிஸ்ராம் ஓலா புதுடெல்லியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அமைப்பின் தலைமை அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்கிறார்.

செயல்படாத கணக்கு

செயல்படாத நிலையில் உள்ள கணக்குகளின் சந்தாதாரர்கள் உள்பட அனைவரும் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். தொடர்ந்து 36 மாதங்கள் சந்தாதாரர்கள் கணக்கில் தொகை செலுத்தப்படவில்லையென்றால் அது செயல்படாத கணக்காக கருதப்படுகிறது.

05/09/2013

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கலாம்.இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு

இடைநிலை ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. இதில் 2008-ம் ஆண்டு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிட்ட மாவட்டங்களில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது,இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், 2009-ம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல் தரலாம் என தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரனையியல் 
இடைக்கால உத்தரவில் உள்ள 2009 க்குப்பிறகு பணி நியமனம் பெற்ற சுமார் 17000 இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதலுக்கான செல்லக்கூடாதென இருந்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.

மாநில பதிவு மூப்பு பற்றியோ .மாவட்ட பதிவு மூப்பு பற்றியோ இன்று எந்தவிதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை.நம் மாவட்ட மாறுதல் சம்பந்தமாக இடைக்கால உத்தரவில் உள்ள தடை மட்டுமே இன்று விலக்கிக்கொள்ளப்பட்டது .

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. வைகைசெல்வன் அத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு. வைகைசெல்வன் அத்துறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அதற்கு பதிலாக மாண்புமிகு உயர்க்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் அவர்களிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களிடம் பரிந்துரையின்படி வைகைச்செல்வன் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளார். 
இதேப்போல், அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் பொறுப்பில் இருந்தும் அவர் நீக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சரும், கட்சியின் பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

EMIS பதிவு - மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு ,எந்த மாவட்டத்திற்கு எப்போது?

தமிழகம் முழுவதும் உள்ள 55 ஆயிரம் பள்ளிகளில் படிக்கின்ற சுமார் 1.33 கோடி மாணவ, மாணவியரின் விபரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறையில் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் ஒரே நேரத்தில் தங்களது மாணவர்கள் விபரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணிகளை மேற்கொண்டனர். 

ஒரே நேரத்தில் அதிக அளவில் பதிவேற்றம் செய்ய முயன்றதால் கம்ப்யூட்டர் சர்வர் முடங்கியது.இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களையும் 4 மண்டலமாக பிரித்து இப்பணிகளை மேற்கொள்ள கால அட்டவணை வகுத்து தமிழ்நாடு பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் காலக்கெடுவும் அக்டோபர் 1ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:

ஒரே நேரத்தில் அதிக அளவிலான பள்ளிகள் இந்த இணையதளத்தில் உள்ளீடுகள் செய்ய முயல்வதை கட்டுப்படுத்தும் வகையில் மாணவர்கள் விபரங்களை உள் ளீடு செய்ய வேண்டியவர்களின் பணிகள் பாதிக்காத வகையிலும், கணினி முறையாக அனைவருக்கும் பயன்படும் விதத்தில் செயல்படுத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களுக்கும் கால அட்டவணை வகுக்கப்பட்டு மாணவர் விபரங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் 8 மாவட்டங்களின் விபரங்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் போது பிற மாவட்டங்களின் விபரங்களை பதிவு செய்ய இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பதிவுகளை முழுமையாக முடிக்க வேண்டும்.

மாவட்ட வாரியாக அட்டவணை வெளியீடு EMIS பதிவு எந்த மாவட்டத்திற்குஎப்போது?

அரியலூர், சென்னை, கோவை, கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம் மாவட்டங்கள் செப்டம்பர் 4 முதல் 10ம் தேதி.

கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர் மாவட்டங்கள் செப். 11 முதல் 17.

புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருச்சி, திருவாரூர் மாவட்டங்கள் செப்.18 முதல் 24.

தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்கள்செப்.25 முதல் அக்.1 வரைஒதுக்கீடு செய்து உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - பள்ளிகளில் கழிப்பிட வசதி பராமரித்தல் குறித்து மதிப்புமிகு பள்ளிக்கல்வி செயலாளர் வழங்கிய அறிவுரைகளை நடைமுறைப்படுத்த உத்தரவு

04/09/2013

அனைவருக்கும் ஆசிரியர் தின வா‌ழ்த்துக்கள்


ஆசிரியர் தினத்தை நினைவு கொள்வோம்.....

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. ஆசிரியர் தினம் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது டாக்டர் இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் தான்.

இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதியான இருந்து டாக்டர் பட்டம் பெற்ற ராதகிருஷ்ணன் பிறந்த நாளைத் தான் ஆசிரியர்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனைத்து பள்ளிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது.

சிறந்த மாணவர் சமூதாயத்தை உருவாக்குவதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது. மனிதர்களை மனிதனாக உருவாக்குவது ஆசிரியர்கள் தான். ஆசிரியர்கள் ஒப்படைக்கும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் வாழ்க்கை என்றால் என்ன? சமூகத்தில் எப்படி வாழ வேண்டும், சக மாணவ - மாணவிகளுக்கிடையே எவ்வாறு பழக வேண்டும், நல்லொழக்கம் ஆகிய உயர்ந்த கருத்துக்களை மாணவர்களுக்கு புரியும் வண்ணம் கற்று கொடுப்பது ஆசிரியர்கள் தான்.

மாணவர்களை படிக்க வைப்பதற்காக தன் வாழ்நாள் முழுவதும் படிப்பவர்கள் ஆசிரியர்கள். சிறந்த லட்சியத்தையும், குறிக்கோளையும் எடுத்துரைத்து, ஆரம்ப காலத்தில் இருந்தே மாணவர் மனதில் நன்கு பதிய வைத்து அதன் மூலம் கிடைக்கும் வெற்றியை பார்க்கும் பொழுது ஆசிரியர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.

தன்னிடம் படிக்கும் மாணவர்களை ஏணி போல் உயர வைத்து அனார்ந்து பார்த்து பூரிப்பவர்கள் ஆசிரியர்கள். ஒரு சிறந்த ஆசிரியர்களின் அன்பு, பாசம், குணம், பண்பு ஆகியவை மாணவர்கள் பார்த்து தானும் பின்பற்ற வேண்டும் என்று மனதில் பதிய வைக்கும். ஆரம்ப கட்டத்தில் குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் போது, குழந்தைகளாகவே மாறி விடுகின்றனர் ஆசிரியர்கள். மாணவர்களுக்கு பள்ளி பருவத்தில் கிடைக்கும் அனுபவம் உண்ணதமான அனுபவம். அந்த அனுபவத்திற்கு காரணம் ஆசிரியர்கள்.

மாதா, பிதா, குரு தெய்வம் என்றார்கள், வேறு எந்த பணிக்கும் கிடைக்காத பெருமையும், ஆத்ம திருப்தியும் ஆசிரியர்களுக்கு கிடைக்கும். அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர் தினத்தை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். மாணவ - மாணவிகள் அனைவரும் இந்த நன்னாளில் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு போட்டிகளை நடத்தி, மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்குவார்கள். மேலும் சிறந்த ஆசிரியர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் தனது ஆசிரியர்களுக்கு வாழ்த்துகள் தெரிவிப்பதோடு, லட்சிய பாதையை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு வாழ்வோம்.

அரியலூர் மாவட்டத்தில் 10 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப் பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் கண்டிராதீர்த்தம் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளம் வழுதி, கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி வாண திரையான் பட்டிணம் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் கலியமூர்த்தி வரதராஜன் கேட்டை கொண்போஸ்கோ மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கருணாமூர்த்தி, தேவாமங்கலம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை வெற்றிச் செல்வி, மீன்சுருட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பழனியம்மாள், கல்லக்குடி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி பட்டதாரி தலைமை ஆசிரியை வளர்மதி, இலுப்பையுர் ஒன்றிய நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியை விஜயராணி இடங்கன்னி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளிதலைமை ஆசிரியை அம்சவள்ளி, கோவி லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனி சாமி ஆகியோர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது.

U-DISE குறித்த தேசிய அளவிளான பயிற்சி 13.09.2013 அன்று 10.00 அளவில் செயற்கைக் கோள் (EDUSAT) வாயிலாக அளிக்க SSA திட்டம்

D.A CALCULATION SHEET

பென்சன் (PFRDA) மசோதாவிற்கு லோக்சபா ஒப்புதல்!.... அரசு ஊழியர்களுக்கான கருப்பு தினம்... கேள்விக்குறியாகும் அரசு ஊழியர்களின் எதிர்காலம்!... என்ன செய்யப்போகிறோம் நாம் ?

புதிய பென்சன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களுடன் இன்று(04.09.2013) மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட் டு இருக்கிறது. இதனால் தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) சட்டப்பூர்வமாக மாறுகிறது. இதன் ஆபத்தை சிறிதும் அறியாத அளவு அரசு ஊழியர்கள் / ஆசிரியர்களின் அறியாமையே இதற்கான அடிப்படையான காரணமாக இருந்தது. இதன் விளைவை எதிர்நோக்கும் போது தான் இந்த பேராபத்தின் தாக்கத்தை நாம் அனைவரும் உணர ப்போகிறோம்.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு இம்மாதம் 6-ந் தேதியிலிருந்து அன்றைய நிலவரப்படி சந்தாதாரர்கள் கணக்கில் உள்ள தொகை குறித்த முழு விவரங்களையும் வெளியிட ஆயத்தமாகி வருகிறது என வருங்கால வைப்பு நிதி ஆணையாளர் கே.கே.ஜலான் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள நிலையில், பி.எஃப். சந்தைதாரர்களுக்கு அவர்கள் பணி புரியும் நிறுவனங்கள் வாயிலாக பி.எஃப். சிலிப் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக முந்தைய நிதி ஆண்டிற்கான விவரத்தை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்.

புதிய திட்டத்தால் சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு விவரத்தை மாதந்தோறும் தெரிந்து கொள்ளலாம். இதற்காக ஆன்லைனிலிருந்து பதிவிறக்கம் செய்து பிரதி எடுத்துக்கொள்ளலாம். இதன் வாயிலாக 5 கோடி சந்தாதாரர்கள் பயன் பெறுவார்கள்.

ஒவ்வொரு சந்தாதாரருக்கும் வங்கி கணக்கு எண் போன்று பொதுவான எண் ஒன்றை ஒதுக்கவும் பி.எஃப். அமைப்பு முடிவு செய்துள்ளதாக ஜலான் தெரிவித்தார். இந்த திட்டத்தால் பணியாளர் வேறு நிறுவனத்துக்கு மாறும்போது அவரது கணக்கை உடனடியாக மாற்ற முடியும். இந்த திட்டம் நடப்பு நிதி ஆண்டிற்குள் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தாதாரர்கள் நலன் கருதி வருங்கால வைப்பு நிதி அமைப்பு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வருங்கால வைப்பு நிதியிலிருந்து 40 லட்சம் பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர். கம்ப்யூட்டர் வாயிலாக இவர்களின் கணக்குகளையும் ஒருங்கிணைப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக ஓய்வூதியதாரர்கள் மாதத்தின் முதல் தேதி அன்றே ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ளலாம்.மேலும் விவரங்களுக்கு Click here- http://www.epfindia.gov.in/

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி அக்டோபரில் தொடக்கம்.

தமிழகத்தில் 1-1-2014 நாளை தகுதி நாளாக கொண்டு, சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் செய்யப்பட உள்ளது. இதற்காக வரைவு வாக்காளர் பட்டியல் 1-10-2013 அன்றுவெளியிடப்படும். அதன்பின்னர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கு 1-10-2013 முதல் 31-10-2013 வரை பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். 2-10-2013 மற்றும் 5-10-2013 ஆகிய நாட்களில் அனைத்து கிராம சபை உள்ளிட்ட உள்ளாட்சி அலுவலகங்களில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சரிபார்க்கலாம்.

6-10-2013, 20-10-2013 மற்றும் 27-10-2013 ஆகிய நாட்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களில், அரசியல் கட்சிகளின் பூத் ஏஜெண்டுகளிடம் இருந்துகோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள் பெறப்படுகின்றன. அதன்பின்னர் 6-1-2014 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கு 1-1-2014 அன்று 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களுக்கு, தேசிய வாக்காளர் தினமான ஜனவரி 25-ம் தேதி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள் வழங்கப்படும்.