திருக்குறள்

24/05/2013

3600 அரசுத் தொடக்கப் பள்ளிகள் ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றம்

தமிழ்நாட்டில் 3600அரசுத் தொடக்கப் பள்ளிகளில் வரும் சூன் மாதம்ஆங்கிலப் பயிற்று மொழி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன என்றுதமிழக அரசு அறிவித்துள்ளது.ஐந்தாம் வகுப்பு வரை உள்ள அரசுப்பள்ளிகளில் கணக்கு, சூழ்நிலையியல், அறிவியல், சமூக அறிவியல்ஆகிய பாடங்கள் இது வரை தமிழ்மொழியில் நடத்தப்பட்டு வந்தன.இனிமேல் முதல் கட்டமாக வரும் கல்வி ஆண்டில், 3600 அரசுத்தொடக்கப் பள்ளிகளில் மேற்கண்ட பாடங்கள் ஆங்கில மொழியில்நடத்தப்படும்.ஏற்கெனவே ஒன்றாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் ஒரு மொழிப்பாடமாகஅரசுத் தொடக்கப் பள்ளிகளில் நடத்தப்படுகின்றது.

அரசு உயர்நிலைப்பள்ளி,அரசு மேல் நிலைப்பள்ளிகளில் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகள் ஏற்கெனவே செயல்படுகின்றன.குறைந்தது பன்னிரண்டாம் வகுப்பு வரையாவது அரசுப் பள்ளிகளில் தமிழ்பயிற்று மொழியாக இருக்காதா என்ற பரிதவிப்பு பறிபோனது.அதன்பிறகு ஐந்தாம் வகுப்பு வரையாவது தமிழ் பயிற்று மொழியாகத்தொடராதா என்ற ஏக்கமும் பொய்த்துப் போனது!
தமிழ்நாட்டில் தன்நிதியில் நடைபெறும் தனியார் பள்ளிகளில் மழலையர்நிலை,தொடக்க நிலை,உயர்நிலை,மேல்நிலை என அனைத்துநிலைகளிலும் ஆங்கில வகுப்புகள் தான் நடக்கின்றன. அரசுப்பள்ளிகளில்தான் தமிழ்வழி வகுப்புகள்இருக்கின்றன.அவற்றையும் ஆங்கில வழியாக மாற்றினால்தமிழ்மொழிக்கு வாழ்வேது?


பெற்றோர்கள் தமிழ்வழி வகுப்புகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கமறுக்கிறார்கள்; அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழியில்நடக்கும் தனியார் பள்ளிகளுக்குப் போய்விடுகிறார்கள். மாணவர்எண்ணிக்கை இல்லாததால் பள்ளிக்கூடங்களை மூடும் நிலைஏற்படுகிறது. அதைத் தவிர்க்க, அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப்பயிற்று மொழி வகுப்புகளைத் தொடங்குகிறோம் என்று அரசு கூறுகிறது.ஆங்கில வழிப் பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளைச்சேர்க்கிறார்கள் என்பது உண்மையே! இந்த அவலத்தைப் போக்க அரசுஎன்ன செய்திருக்கவேண்டும்? தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளித்து விதிமுறைகளை உருவாக்கியிருக்கவேண்டும்.கேரளத்தில் மலையாளத்தைப் பயிற்று மொழியாகக் கொண்டுபடித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை தரும் விதியைஇயற்றியிருக்கிறார்கள்.


சமச்சீர்க்கல்வித் திட்டம் குறித்த முனைவர் முத்துக்குமரன் குழுபரிந்துரைகளை 60 விழுக்காடு செயல்படுத்தியிருந்தால் கூட, தமிழகஅரசுப் பள்ளிகள் குறிப்பாகத் தமிழ்வழிப் பள்ளிகள் பெற்றோரின்கவனத்தை ஈர்த்திருக்கும்.சமச்சீர்க் கல்வியைத் தயங்கித் தயங்கிசெயல்படுத்திய தி.மு.க.அரசு,தனியார் மெட்ரிக் பள்ளிகள் மற்றும் அரசுப்பள்ளிகள் அனைத்திலும் பயிற்றுமொழி தமிழாக இருக்க வேண்டும் என்றுமுத்துக்குமரன் குழு பரிந்துரைத்ததைசெயல்படுத்தவில்லை.மாணவர்-ஆசிரியர் விகிதம்,உள் கட்டமைப்புவசதிகள்,ஆங்கில மொழிப்பாடத்திற்கு ஆங்கில இலக்கியம் படித்தவரைமட்டுமே ஆசிரியராக அமர்த்த வேண்டும் என்பன போன்ற சிறந்தபரிந்துரைகளைத் தி.மு.க. ஆட்சி புறந்தள்ளியது.


தி.மு.க.ஆட்சி சிறிதளவு செயல்படுத்திய சமச்சீர்க் கல்வியைக் கூடஒட்டுமொத்தமாகத் தூக்கி வீசியது அடுத்து வந்த அ.இ.அ.தி.மு.க. ஆட்சி.உச்ச நீதிமன்றம் வரை போய் வழக்கு நடத்தி சமச்சீர்க் கல்வித்திட்டத்தைக் கூவத்தில் வீசப் போராடித் தோற்றார் செயலலிதா.
அரசுத் தொடக்கப் பள்ளிகளில் கழிவறை வசதி கிடையாது; கழிவறைகட்டப்பட்டிருந்தால் தண்ணீர் கிடையாதுவிளையாட்டு ஆசிரியர்கிடையாது;பாட்டு ஆசிரியர் கிடையாது. இவையெல்லாம் தனியார்நடத்தும் ஆங்கில வழிப் பள்ளிகளில் இருக்கின்றன.


முப்பது மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற விகிதம் தனியார்பள்ளிகளில் கடைபிடிக்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில்பெருங்கூட்டத்தை ஒரு வகுப்பில் உட்கார வைத்துக் கொண்டு ஒரேஆசிரியரை சமாளிக்கும்படி விட்டுவிடுகிறது தமிழக அரசு.


இவையெல்லாம்தான் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளைத் தவிர்த்து,தனியார் பள்ளிகளை நாடுவதற்கான காரணங்கள். வெறும் ஆங்கிலமோகம் மட்டுமன்று.மொழிப்பாடமாக ஆங்கிலத்தை சிறப்பாகக்கற்பிக்கும் ஏற்பாடும் இருந்தால் பெற்றோர்கள் தமிழக அரசின் தமிழ்வழிப்பள்ளிகளில் தங்களின் பிள்ளகளைச் சேர்ப்பார்கள்.கேரளாவில்விதி உண்டாக்கியிருப்பதுபோல் மேல்நிலைப்பள்ளி வரையில்தாய்மொழியை பயிற்று மொழியாகக் கொண்டு படித்தவர்களுக்குவேலைவாய்ப்புக்கான தேர்வில் அதற்காகத் தனி மதிப்பெண் கொடுப்பதுபோன்ற ஊக்குவிப்புகளைச் செய்தால் பெற்றோர்கள் தமிழக அரசுப்பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை விரும்பிச் சேர்ப்பார்கள்.


இவற்றையெல்லாம் செய்யாமல் அரசுப் பொது மருத்துவமனைகள்எல்லா நிலையிலும் ஏனோ தானோ என்று நடத்தப்பட்டு சீரழிந்துகிடப்பதுபோல் தொடக்கப்பள்ளிகளையும் சீரழிய விட்டுள்ளது தமிழகஅரசு. ஏழையாய் இருந்தாலும் கடன் வாங்கி, உடைமைகளை விற்றுஉயிர்காக்கத் தனியார் மருத்துவமனைகளை நாடுகிறார்கள். அதேபோன்ற துன்பச் சூழலில், கையறு நிலையில் தங்கள் பிள்ளைகளின்எதிர்காலம் கருதி வசூல் கூடங்களாக உள்ள தனியார் பள்ளிகளுக்குப்பிள்ளைகளை அனுப்புகிறார்கள் ஏழை, எளிய, நடுத்தர மக்கள்.மேற்கண்ட வசதிகளை அரசுப் பள்ளிகளில் செய்வதென்றால் அதற்கு நிதிவசதி இல்லை; பெற்றோர்களிடமும் கட்டணம் வசூலிக்க முடியாது;என்ன செய்ய முடியும் என்று தமிழக அரசு கேட்கலாம்.


நடுவண் அரசிடம் போராடிக் கூடுதல் நிதி பெற வேண்டும். அதற்கானஅறப்போராட்டத்தை ஆளுங்கட்சி முன்னெடுத்து மக்களைத் திரட்டிக்கொள்ள வேண்டும். வாக்கு வாங்குவதற்கான கையூட்டு போல்கொடுக்கப்படும் பல இலவசங்களைத் தவிர்த்து அத்தொகையை இலவசக்கல்வி மேம்பாட்டிற்குப் பயன்படுத்த வேண்டும்.


1998 ஆம் ஆண்டு தமிழ்ச் சான்றோர் பேரவை முனைவர் தமிழண்ணல்தலைமையில் நடத்திய 102சான்றோர் உண்ணாப்போராட்டத்தின் போதுகொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தி.மு.க. ஆட்சி ஓர்ஆணைபிறப்பித்தது. அதன் படி ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் அல்லதுதாய்மொழி கட்டாய மொழிப்பாடமாகவும் கட்டாயப் பயிற்றுமொழியாகவும் இருக்கும். இவ்வாணையை எதிர்த்து மெட்ரிக் பள்ளிமுதலாளிகள் நடத்திய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அந்தஆணை செல்லாது என்று தீர்ப்பளித்தது. 1999 இல் உச்ச நீதிமன்றத்தில்தி.மு.க. அரசு மேல் முறையீடு செய்தது. அவ்வழக்கு இன்னும்விசாரிக்கப்படாமல் உச்ச நீதிமன்றத்தின் அலமாரியில் தூங்கிக்கொண்டுள்ளது.


அவ்வழக்கை விசாரணைக்குக் கொண்டு வர தி.மு.க. அரசும்முயலவில்லை, அ.இ.அதி.மு.க. அரசும் முயலவில்லை.ஐந்தாம் வகுப்புவரைத் தமிழ் வழிக் கல்வியை கட்டாயமாக்கிய அந்த ஆணையைஅப்போது தமிழ்நாட்டில் எதிர்த்த ஒரே அரசியல் தலைவர் செயலலிதாமட்டுமே!தமிழ்மொழி மீது செயலலிதாவிற்கு இருந்த பழையகாழ்ப்புணர்ச்சியெல்லாம் இப்போது மாறியிருந்தால் நல்லது. சென்னைஉயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியில் வழக்கு நடத்த இப்போது உரிமைகோரியுள்ளார் அவர். அதே போல் தமிழ் வழிக்கல்விக்கும் அவர் முன்முயற்சி எடுக்க வேண்டும்.


3600 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்று மொழிவகுப்புகளைப் புகுத்துவதைக் கைவிட்டு, அப்பள்ளிகளை நாம் மேலேசுட்டிக் காட்டிய தரத்திற்கு மேம்படுத்தித் தமிழ் வழிப் பள்ளிகளாகவேதமிழக அரசு நடத்த வேண்டும்.


மக்களும் தமிழ் வழிக் கல்வியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைக்கஆர்வம் காட்ட வேண்டும். அதற்கான மக்கள் எழுச்சி உருவாக வேண்டும்.ஆங்கிலத்தைத் தரமான முறையில் மொழிப்பாடமாகக் கற்பிக்க, தமிழ்மொழி-தமிழின ஆர்வ அமைப்புகள், தமிழ்த் தேசிய அமைப்புகள் அரசைவலியுறுத்துகின்றன என்ற செய்தி மக்களுக்குத் தெரிய வேண்டும்.


தனது தாய்மொழியை இழந்துவிட்ட எந்த இன மக்களும் தலை நிமிரமுடியாது, இரண்டாம் தரக் குடிகளாகவே இருப்பார்கள் என்றஉண்மையைத் தமிழ் மக்கள் உணர வேண்டும்,இன்றும் சமூக மேலாதிக்கம் செய்யும் வகுப்பார்க்கு உற்ற கருவியாகஆங்கில ஆதிக்கமே உள்ளது என்பதை தமிழ் மக்கள் அறிந்து கொள்ளவேண்டும். இன்றுள்ள புதிய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீது வெளிஇனத்தார் ஆதிக்கம் செய்வதற்கும், ஆங்கில ஆதிக்கம் துணைபுரியும்என்பதையும் உணர வேண்டும்.

ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு உதவித் தொகை

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு தமிழக அரசு கல்வி உதவித் தொகை வழங்குகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் பிள்ளைகள், முதுநிலை பட்டப்படிப்பு பயில இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.

எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.எட்., எம்.எல்., எம்.சி.ஏ., எம்.பில். ஆகிய பட்டப்படிப்புகளை தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

இந்த உதவித் தொகை பெற எந்த ஊதிய வரம்பும் இல்லை. ஆனால், மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்பில் 60 மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மதிப்பெண் அடிப்படையில்தான் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த திட்டத்தின் கீழ் சாதாரண மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.120ம், விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.300ம் வழங்கப்படும்.

உண்மைத் தன்மைச் சான்று பெற அசல் பட்டச் சான்றை மட்டுமே அனுப்ப வேண்டும் - கல்வியியல் பல்கலை

ஆசிரியர்கள் பயின்ற உயர்கல்வியைப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் ஊக்க ஊதிய உயர்வு சுதந்தரித்து வழங்கவும் பதவி உயர்வுக்குத் தகுதிவாய்ந்தோர் பட்டியலில் சேர்க்கவும் உயர்கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை அறியும் பொருட்டு அவற்றின் நகல்கள் (Xerox) சார்ந்த

பல்கலைக்கழகங்களுக்கு தொடக்கக் கல்வித்துறை எனில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராலும் பள்ளிக் கல்வித் துறை எனில் தலைமையாசிரியராலும் அனுப்பப்பட்டு மெய்த்தன்மைச் சான்று (Genuinneness) பெறுவது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது.

கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படித்தோரின் சான்றை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய போது "அசல் பட்டச் சான்றையும் அசல் மதிப்பெண் பட்டியலையும் அனுப்பினால் தான் மெய்த்தன்மைச் சான்று வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டு பல்கலைக் கழகத்திலிருந்து கடிதம் திருப்பப்பட்டுள்ளது. எனவே இனிமேல் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்திற்கு உண்மைத்தன்மைச் சான்று கோரி அனுப்பும் போது அசல் சான்றிதழ்களை அனுப்பினால் கால விரயமும் கூடுதல் அஞ்சல் செலவும் தவிர்க்கப்படலாம்.

உண்மைத் தன்மைச் சான்று பெறப் பல்கலைக் கழகத்தால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வரைவோலையாகச் செலுத்தப்பட வேண்டும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் (அஞ்சல்வழி/கல்லூரி) பயின்றுள்ள அரசுப்பணியாளர்கள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்விச் சான்றுக்கு உண்மைத்தன்மை அறிய எவ்விதக் கட்டணமும் இல்லை.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு - சி.டி.இ.டி.& Check Application Status CTET- தேர்வு நேரம் 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிப்பு

சி.டி.இ.டி., எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வு நேரம், 1.30 மணியிலிருந்து 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


மத்திய மேல்நிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.,), ஆசிரியர்களுக்கான ‘மத்திய ஆசிரியர் தகுதி தேர்வை’ ஆண்டுக்கு இரண்டு (ஜனவரி, ஜூலை) முறை நடத்துகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, மத்திய தீபத்திய பள்ளிகள், அந்தமான் நிக்கோபார், சண்டிகர் போன்ற யூனியன் பிரேதேசங்களில் உள்ள மத்திய பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றலாம்.

இத்தேர்வு 2 தாள்களைக் கொண்டது. 1 முதல் 5ம் வகுப்பு வரை பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள் தாள் 1ம், 6 முதல் 8 ம் வகுப்பு வரை பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள் தாள் இரண்டையும் எழுதலாம். 1 முதல் 8 வரை பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள், இரண்டு தாள்களையும் எழுதலாம்.

இத்தேர்வுக்கு ஏப்.16 வரை விண்ணப்பிக்கப்பட்டு, தேர்வு தமிழ்நாட்டில் சென்னை, மதுரை உட்பட முக்கிய நகரங்களில் ஜூலை 28 அன்று காலை, மாலை என நடக்க இருக்கிறது.

ஜூலை 3 முதல், ஹால் டிக்கெட்டை இணையதளத்தில் டவுண்லோடு செய்யலாம். கடந்த ஆண்டு வரை 1.30 மணிநேரமாக இருந்த தேர்வு நேரம், 2.30 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தாள் 1 காலை 9.30ல் தொடங்கி நன்பகல் 12.00 மணி வரையிலும், தாள் 2, மாலை 2.00 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சி.பி.எஸ்.இ., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Central Teacher Eligibility Test (CTET)-Check Application Status

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013 (தகுதிகள்)

10+2+3 கல்விமுறை அவசியம்,ஓராண்டு படிப்பு பட்டம் தகுதியில்லை.

தாள்-1

D.T.Ed., தகுதிபெற்றோர் தேர்வு எழுதலாம்.

தாள்-2

B.Ed with B.A,BSc,B.lit
B.COM,B.SC(Computer science).BCA, B.A(Economics) WITH B.ED ARE NOT ELIGIBLE.
தகுதிபெற்றோர் தாள்-2,க்குண்டான தேர்வுகள் எழுதலாம்.

தற்போது தனியார் அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்- 23/8/2010 அன்றோ அதற்கு பிறகு நியமன ஆனண பெற்றிருப்பின் தேர்வு எழுதி கட்டாயம் 5 ஆண்டுக்குள் தேற வேண்டும்.

தற்போது தேர்வில் வெற்றிபெறுவோர் அனைவருக்கும் 7 ஆண்டுகள் செல்லத்தக்க ஆசிரியர் தகுதிசான்று வழங்கப்படும்.

தகுதிசான்று பெற்றவர்களுக்கு தனியாக வெயிட்டேஜ் (அரசு ஆணையின் படி)அடிப்படையில் பணிஆணைகள், இடஓதிக்கீடு மற்றும் காலிப்பணியிடத்திற்கு ஏற்ப வழங்கப்படும்.

இரண்டு தாள்களும் எழுத தகுதி பெற்றோர் ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனி விண்ணப்பங்களில் விண்ணப்பித்து, ஒவ்வொரு தேர்வுக்கும் தனித்தனியே கட்டணம் செலுத்தி தேர்வுகள் எழுத வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வு-2013


Recruitment Post = 13,000 (SGT+BT)ரூ-50ஐ நேரடியாக பணமாக செலுத்தி தமிழகத்தில் உள்ள அனைத்துமேல்நிலைப்பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களிடமிருந்து 17/06/2013 முதல் 01/07/2013 வரை விண்ணப்பம் மற்றும் விவரக்குறிப்பை பெறலாம்


தேர்வு கட்டணம்
>ஒவ்வொரு தாளுக்கும் ரூ-500,
>எஸ்.சி/எஸ்டி பிரிவினருக்குரூ-250
>மாற்றுதிரனாளிகளுக்கு ரூ-250-
>விண்ணப்பதுடன் கிடைக்கும் வங்கி சலான் மூலம் தேர்வு கட்டணம்செலுத்தப்பட வேண்டும்
>பாரத் ஸ்டேட் வங்கி,கனரா வங்கி,இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளைகளில்பணம் செலுத்தலாம்,
>டி.ஆர்.பி நகல் என குறிப்பிடப்பட்ட சலான் விண்ணப்பத்துடன் இணைத்துவழங்கப்படவேண்டும்
>ஓ,எம்,ஆர் எனப்படும் வினண்ணப்பத்தில் மட்டுமே கோரப்பட்ட தகவல்களைசரியாக பூர்த்தி செய்யப்பட வேண்டும்
>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மாவட்ட கல்வி அலுவலர்அலுவலகத்தில் 01.07.2013 மாலை 5.30 க்குள்ளாக நேரில் சமர்பிக்கப்படவேண்டும்.
>பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஜெராக்ஸ் நகலில் ,விண்ணப்பம்சமர்பிக்கப்பட்டதற்கான ஒப்புகை கட்டாயம் பெற அறிவிக்கப்பட்டுள்ளது.
>ஆன்லைன்,தபால்,பேக்ஸ்,கூரியர் போன்ற வழிகளிலும்,ஜெராக்ஸ் நகலில்சமர்பிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் (டி ஆர் பி மையம் அல்லதுவேறு அலுவலக முகவரிக்கு அனுப்பப்பட்டால்) நிராகரிக்கப்படும்

முதல் தாள் தேர்வு : 17.08.2013
இரண்டாம் தாள் தேர்வு : 18.08.2013
தேர்வு நேரம் : காலை 10 முதல் 1 வரை ( 3மணி நேரம்)
click here to download the TRB - TN-TET announcement Notification

21/05/2013

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள்: கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம்

தமிழகத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு முதல் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வியைத் துவங்க, மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் டி.தேவராஜன் தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியது:

ஆங்கில வழி வகுப்புகள்: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி துவங்க வேண்டும் என பெரும்பாலான பெற்றோர் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இதைப் பரிசீலித்த அரசு, இந்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளைத் துவக்க உத்தரவிட்டுள்ளது. அந்தந்த மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில், எந்தெந்தப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி வகுப்பு துவக்க பெற்றோர்கள் தரப்பில் விருப்பம் தெரிவிக்கப்படுகிறதோ, அந்தப் பள்ளிகளில் 6ஆம் வகுப்பில் ஆங்கில வழிக் கல்வி கற்பிக்கும் வகையில் ஒரு வகுப்பு துவக்கப்படும்.

அதேசமயம், அந்தப் பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பில் தமிழ் வழிக் கல்வி வகுப்பும் தொடர்ந்து இருக்கும். ஆங்கில வழிக் கல்வி பாடங்களை நடத்துவதற்கு போதுமான தகுதியான ஆசிரியர்கள் பெரும்பாலான பள்ளிகளில் ஏற்கெனவே பணியில் இருக்கின்றனர். ஏதாவது சில பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி போதிக்க ஆசிரியர்கள் தேவைப்பட்டால், அதற்கான ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை தயாராக இருக்கிறது. மேலும், விரைவில் டிஆர்பி மூலம் புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம்: ஆங்கில வழிக் கல்வி வகுப்புகளைத் துவக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அனைத்து மாவட்டங்களிலிருந்தும் விண்ணப்பித்து, பரிசீலித்து முடிவு எடுப்பதில் கால தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதை தவிர்க்கும் வகையில், அந்தந்த மாவட்டங்களிலுள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களே எந்தெந்தப் பள்ளிகளுக்கு ஆங்கில வழிக் கல்வி வகுப்புகள் தேவையோ, அதற்குரிய அனுமதியைப் பரிசீலித்து வழங்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் விவரத்தை கல்வி அதிகாரிகள் பள்ளிக் கல்வித் துறைக்குத் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

இடைக்கால ஆசிரியர் நியமன முறைக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் - நாளிதழ் செய்தி


தகுதி இல்லாதவர்கள் நியமனம் சிறப்பு ஆசிரியர்களால் கல்வி அழிகிறது

புதுடெல்லி, மே 21:
தொடக்கப் பள்ளிகளில் இடைக்கால ஆசிரியர்களை நியமிப்பதில் கல்வித் தகுதி உள்ளிட்ட வரைமுறைகளை மாநில அரசுகள் பின்பற்றாதது குறித்து உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

கல்வி உதவியாளர் நியமனம் குறித்து குஜராத் அரசு தாக்கல் செய்த முறையீட்டை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எஸ்.செüஹான், தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு திங்கள்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் குறிப்பிட்டது:

கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்த பின்பும், இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுவது அதிர்ச்சியாக இருக்கிறது. கல்வி உதவியாளர்களாக நியமிக்கப்படும் இந்த சிறப்பு ஆசிரியர்களின் கல்வி தகுதியை அறிய விரும்புகிறோம்.உத்தரப் பிரதேசத்தில் �சிக்ஷா சகாயக்� என்ற பெயரில் கல்வி உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எல்லாம் உதவியாளர்கள் அல்ல கல்வியின் எதிரிகள். நாம் அளிக்கும் கல்வியின் தரம் மிக முக்கியம். முறையான கல்வி தகுதியில்லாத சிறப்பாசிரியர்களை நியமிப்பதால், ஒட்டுமொத்த கல்வி முறையை அழிக்கிறோம்” என்றனர்.

இதுபோன்ற ஜனரஞ்சகமான திட்டங்கள் நாட்டின் வருங்காலத்தையே பாழாக்குவதை அனுமதிக்க முடியாது. இந்திய அரசியல் சட்டத்தில் கல்வி உரிமையை அளிக்கும் 21-ஏ பிரிவு இருக்கும்போது இதுபோன்ற நடைமுறைகள் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதை எப்படி அனுமதிக்க முடியும்? முறையான கல்வித் தகுதி இல்லாதவர்களை இடைக்கால ஆசிரியர்களாக நியமிப்பதால் கல்விகற்பிக்கும் முறையையே பாழடித்துவிடுகிறோம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், இடைக்கால முறையில் நியமிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பான துறைத் தேர்வுகளுக்கான நுழைவுச்சீட்டு



2013 MAY-துறைத் தேர்வுகளுக்கான நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்ய
DOWNLOAD CLICK HERE...

20/05/2013

அரசு ஊழியர் விவரம் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்-தமிழக அரசு

"அரசு ஊழியர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

அரசு ஊழியர்கள் தொடர்பான விவரங்கள் அடங்கிய மைய தரவுத் தளத்தின் மூலம், மேலாண்மை தகவல் முறையில், பணியாளர்களின் விவர எண்ணிக்கை, சம்பளம் மற்றும் அதை சார்ந்த பிற விவரங்களை பெற, வலைதள பட்டியல் மென்பொருள் உருவாக்கப்படும்.

இத்திட்டம், 2013-14ம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்காக வலைதள பட்டியல் மென்பொருள் தயாரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மனித வள மேலாண்மை தொடர்பான திட்டமிடலுக்கு, உகந்த கருவியாக அமையும் என, பொதுத் துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Sixth Economic Census Training Teachers Name List

அரியலூர் ஒன்றியம் 

அரியலூர் ஒன்றியம்
DOWNLOAD CLICK HERE...

த.தொ.க.சார்நிலைப் பணி - 2013-2014ம் ஆண்டிற்கான ஆசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைபடுத்த உத்தரவு.

த.தொ.க.சார்நிலைப் பணி - நடுநிலைப் பள்ளி த.ஆ பதவியிலிருந்து AEEO / AAEEO பணி மாறுதல் கலந்தாய்வு 25.05.2013 அன்று காலை 9.30மணிக்கு தொடக்கக் கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது. வரிசை எண். 1 முதல் 250 வரை உள்ளவர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும்.

2013-2014ம் கல்வியாண்டு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு

15/05/2013

பள்ளி படிப்பை பாதியில் விட்டவர்கள் விபரம்: புதிய மென்பொருள் மூலம் கண்டுபிடிப்பு

SCHOOL DROP OUTS SHOULD BE MONITORED THROUGH NEW SOFTWARE
           திருவள்ளூர்: மாவட்டத்தில், இதுவரை பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவர்கள், 4,826 பேர் என, கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, அனைத்து சிறுவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களுக்கு இலவச கல்வி, உணவு, பாட புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பல்வேறு காரணங்களுக்காக இடையில் நின்று விடுகின்றனர். குறிப்பாக, குடும்ப வறுமை, பெற்றோர் வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கு இடம் மாறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாணவர்கள் கல்வியை கைவிட நேரிடுகிறது.
இப்படிப்பட்ட மாணவர்களை கண்டுபிடிப்பதற்காக, தமிழக அரசால் ஒரு புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப் பட்டு உள்ள இந்த மென்பொருளுக்கு, "சைல்டு டிராக்கிங் அண்டு மானிட்டரிங்" (சிறுவர் கண்காணிப்பு) என, பெயரிடப் பட்டு உள்ளது.
இதில், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியரின் பெயர், வீட்டு முகவரி, பள்ளி முகவரி, வகுப்பு, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில், இந்த விவரங்கள் புதுபிக்கப்படுகின்றன. இதன் மூலம் இடை நிற்கும் மாணவர்கள் கண்டறியப்படுகின்றனர்.
அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, அந்த மாணவர் தொடர்ந்து கல்வி பயில்கிறாரா என்பதும் கண்காணிக்கப் படுகிறது ஒவ்வொரு மாவட்டத்தின் பதிவுகளும், மற்ற மாவட்ட பதிவுகளோடு, தகவல் வலை மூலம் இணைக்கப் பட்டு உள்ளது.
இதனால், ஒரு மாவட்டத்தில் பயின்று பாதியில் கல்வியை கைவிட்ட மாணவர், வேறொரு மாவட்டத்திற்கு சென்று பள்ளியில் சேர்ந்தாலும், இந்த மென்பொருள் காட்டிவிடும். இதனால் அவர்கள், தவறாக இடை நிற்கும் மாணவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.
இந்த மென்பொருளின் உதவியோடு சேகரித்த புள்ளி விவரங்களின்படி, மாவட்டத்தில், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 52,178 பேர் உள்ளனர். இது தவிர, இந்த வயது வரம்பில், 4,826 சிறுவர்கள் இடைநின்றுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டு உள்ளது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த கல்வியாண்டில், மாவட்டம் முழுவதும், 4,826 மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டது, கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அவர்களை பற்றிய விவரங்கள் அனைத்தும், கணினியில் பதிவு செய்யப்பட்டு, அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்றார்.
மேலும், "இந்த புதிய மென்பொருள் மூலம், மாணவர்கள் எதிர்காலத்தில் படிப்பை பாதியிலேயே கைவிட்டாலும், அவர்களை எளிதில் கண்டுபிடித்து, மீண்டும் எளிதாக பள்ளியில் சேர்க்க முடியும். நடப்பு கல்வியாண்டில், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியரின் விவரம் குறித்தும் கணக்கெடுக்கப்பட உள்ளது," என்றார்