திருக்குறள்

24/05/2013

உண்மைத் தன்மைச் சான்று பெற அசல் பட்டச் சான்றை மட்டுமே அனுப்ப வேண்டும் - கல்வியியல் பல்கலை

ஆசிரியர்கள் பயின்ற உயர்கல்வியைப் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யவும் ஊக்க ஊதிய உயர்வு சுதந்தரித்து வழங்கவும் பதவி உயர்வுக்குத் தகுதிவாய்ந்தோர் பட்டியலில் சேர்க்கவும் உயர்கல்விச் சான்றுகளின் உண்மைத்தன்மை அறியும் பொருட்டு அவற்றின் நகல்கள் (Xerox) சார்ந்த

பல்கலைக்கழகங்களுக்கு தொடக்கக் கல்வித்துறை எனில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலராலும் பள்ளிக் கல்வித் துறை எனில் தலைமையாசிரியராலும் அனுப்பப்பட்டு மெய்த்தன்மைச் சான்று (Genuinneness) பெறுவது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் உள்ளது.

கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படித்தோரின் சான்றை தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிய போது "அசல் பட்டச் சான்றையும் அசல் மதிப்பெண் பட்டியலையும் அனுப்பினால் தான் மெய்த்தன்மைச் சான்று வழங்கப்படும்" எனக் குறிப்பிட்டு பல்கலைக் கழகத்திலிருந்து கடிதம் திருப்பப்பட்டுள்ளது. எனவே இனிமேல் தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழகத்திற்கு உண்மைத்தன்மைச் சான்று கோரி அனுப்பும் போது அசல் சான்றிதழ்களை அனுப்பினால் கால விரயமும் கூடுதல் அஞ்சல் செலவும் தவிர்க்கப்படலாம்.

உண்மைத் தன்மைச் சான்று பெறப் பல்கலைக் கழகத்தால் நிர்ணயிக்கப்படும் கட்டணம் வரைவோலையாகச் செலுத்தப்பட வேண்டும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் (அஞ்சல்வழி/கல்லூரி) பயின்றுள்ள அரசுப்பணியாளர்கள் மற்றும் அரசுப்பள்ளி ஆசிரியர்களின் உயர்கல்விச் சான்றுக்கு உண்மைத்தன்மை அறிய எவ்விதக் கட்டணமும் இல்லை.

No comments:

Post a Comment