திருக்குறள்

29/05/2013

6-வது பொருளாதார கணக்கெடுப்பு: ஜூன் 6-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது



6-வது பொருளாதார கணக்கெடுப்பு சென்னை மாநகராட்சியில் ஜூன் 6-ம் தேதி முதல் தொடங்கும் என்று சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் சமூக பொருளாதார கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் இந்த கணக்கெடுப்பு வரும் ஜூன் மாதம் தொடங்குகிறது. இந்த கணக்கெடுப்பு தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.இது குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியதாவது:சென்னையில் பொருளாதார கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணியில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் 4,000 பேர் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 6,000 பணியாளர்கள் ஈடுபடவுள்ளனர்.இவர்களுக்கு ஜூன் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி முதல் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பின்னர் இவர்கள் கணக்கெடுப்புப் பணிகளை தொடங்குவார்கள். ஒரு பணியாளர் 150 வீடுகளில் கணக்கெடுப்பை மேற்கொள்ளவேண்டும். இந்த கணக்கெடுப்பு ஜூன் 30-ம் தேதிக்குள் முடிக்கப்படும்.இந்தக் கணக்கெடுப்புப் பணிகள் அந்தந்த மண்டல அதிகாரிகள் கண்காணிப்பில் நடத்தப்படும். இந்த கணக்கெடுப்பில் பொருளாதார ரீதியிலான தகவல்கள் சேகரிக்கப்படும். இந்த தகவல்கள் நாட்டின் பொருளாதார கொள்கைகளை வகுக்க உதவிகரமாக இருக்கும் என்று அவர் தெரிவத்தார்.

No comments:

Post a Comment