திருக்குறள்

30/05/2013

14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தும் கட்சிகள் மீது நடவடிக்கை

குழந்தை தொழிலாளர்களை பிரசாரத்தில் ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் கமிஷன் எச்சரித்துள்ளது.இதுகுறித்து தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிவிப்பு: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை வாகனங்களில் ஏற்றி, இறக்குதல், விழிப்புணர்வு பிரசாரம், அதிகாரிகளுக்கு உதவியாக இருத்தல் போன்ற பணிகளில் குழந்தை தொழிலாளர்களை தேர்தல் அதிகாரிகள் ஈடுபடுத்தக் கூடாது. அதேபோல், தேர்தல் சமயங்களில் பிரசாரத்தில் ஈடுபடுத்துதல், கொடி கட்டுதல், வால்போஸ்டர் ஒட்டுதல், துண்டு பிரசுரம் விநியோகித்தல், பேரணி, பொதுக்கூட்டங்களில் பங்கேற்க செய்தல் போன்ற பணிகளில் குழந்தை தொழிலாளர்களை அரசியல் கட்சிகள் ஈடுபடுத்த கூடாது. விதிமுறையை மீறி 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment