திருக்குறள்

15/05/2013

அரசு தொடக்க பள்ளிகளில் 20 மாணவர்கள் சேர்ந்தால் போதும் ஆங்கில வழி கல்வி தொடங்கலாம்:

வரும் கல்வி ஆண்டில் (2013-14) இருந்து அரசு தொடக்கப்பள்ளிகளில்ஆங்கில வழி கல்விப்பிரிவை தொடங்க தொடக்க கல்வித்துறை முடிவுசெய்துள்ளது. இதன்படி ஏற்கனவே உள்ள தமிழ் பிரிவு அப்படியே இருக்கும். கூடுதலாக ஒரு தொடக்கக் கல்வி பிரிவு தொடங்கப்படும். வகுப்புகளில் குறைந்தது 20மாணவர்கள் ஆங்கில வழியில் கற்க சேர்ந்தால் அந்த பள்ளிகளில் இந்த ஆண்டே ஆங்கில வழிவகுப்புகளை தொடங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தோராயமாகமாணவர்கள் சேர்க்கப்பட்ட பள்ளிகள் விவரம் குறித்த பட்டியல்களை தயாரித்து அங்கெல்லாம்இந்த ஆண்டே ஆங்கில வழிக் கல்வி தொடங்க அனுமதிக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்தப்பட்டியலில் இடம் பெற்ற பள்ளிகள் மட்டுமின்றி கூடுதலாக பல பஞ்சாயத்து, நகராட்சி,மாநகராட்சி பள்ளிகளும் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இந்த பிரிவில் சேரும் ஒன்றாம் வகுப்புமாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாட புத்தகங்கள் கற்றுத்தரும் ஆசிரியர்கள் குறித்தபணிகளை தொடக்க கல்வித்துறை விரைவில் ஒழுங்குபடுத்தி செயல்படுத்த உள்ளது.

No comments:

Post a Comment