திருக்குறள்

24/05/2013

அரசு பள்ளிகளைப்போல் தனியார் பள்ளிகளிலும் தமிழ்வழி கல்வி ஆர்வம் குறைகிறதா? மாணவர்களை சேர்க்க படாதபாடுபடும் ஆசிரியர்கள்

அரசுப் பள்ளிகளை தொடர்ந்து தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ் வழியில் கற்பவர்கள் எண்ணிக்கை குறையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கில வழி கல்வி மோகமே இதற்கு காரணம் என கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நகர்புறத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி கிராமத்தினரும் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி கல்வியில் சேர்க்க ஆர்வ மாக உள்ளனர். பெற்றோ ரின் இந்த ஆங்கில கல்வி மோகத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது.

இதை தடுத்து நிறுத்த வரும் கல்வி ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு ஒரு பிரிவை தொடங்க கல்வித்துறை பச்சை கொடி காட்டியுள்ளது. முதல் கட்டமாக 1ஆம் வகுப்பில் அரசு பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டே ஆங்கில வழி கல்வி பிரிவு தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கான பள்ளி கள் பட்டியல் மாவட்ட வாரியாக தயாரித்து அனுப்பப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளி லும் தமிழ் வழி யில் கற் கும் மாணவர்களின் எண்ணிக்கை சரிந்து வருகிறது. பல அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்கு அதிகரிக்கும் ஆர்வம் தமிழ் வழி கல்விக்கு எதிர்மறையாக உள்ளதாக கல்வியாளர்கள் கூறுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் வரை நெல்லை யில் சில பள்ளிகளில் ஏப்ரல், மே மாதங்களிலேயே 6 முதல் 9 ஆம் வகுப்புகளில் தமிழ் வழி கல்விக்கு இடம் கிடைக்காத நிலை இருந்தது. 

மேலும் சில பள்ளிகளில் ஏ முதல் ஜே வரை 10 பிரிவுகள் தொடங்கப்பட்ட பின்னரும் 6ஆம் வகுப்புக்கு இடம் கிடைக்காமல் மாணவர்கள் திரும்பும் நிலை கூட ஏற்பட்டது. இந்த ஆண்டு இது மாறி உள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து மாணவ மாணவி கள் டிசி வாங்கி செல்லும் அளவிற்கு சேர்க்கை இல்லை. 

ஆங்கில வழி கல்வி உள்ள வேறு பள்ளியில் தங்கள் பிள்ளையை சேர்க்கப் போவதாக கூறி அழைத்து செல்கின்றனர். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒரு பிரிவு மட்டுமே ஆங்கில வழி கல்வி இருப்பதால் அவர்கள் அதிக மான மாணவ மாணவி களை சேர்க்க முடியாத நிலையில் உள்ளனர். அரசு பள்ளிகளைப் போல் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்க நிர்வாகிகளும் ஆசிரியர்களும் படாத பாடுபடுகின்றனர். 

பல ஆண்டுகளாக நன் கொடை வாங்கியும் சிபாரி சின் அடிப்படையில் சேர்க்கைக்கு முன் னுரிமை வழங்கி யும் வந்த சில பள்ளிகள் மாணவர்கள் கிடைத்தால் போதும் என்ற நிலைக்கு இறங்கி வந்துள்ளனர். மேலும் சில பள்ளிகள் சேர்க்கை கட்டணத்தை கணிசமாக குறைத்துள்ளன. ரூ.100 சேர்க்கை கட்டணம் மட்டும் தந்தால் போதும் என தெரிவிக்கின்றனர். இதனால் ஆங்கில வழி கற்க ஆர்வமாக உள்ள தங்கள் பள்ளி மாணவர் களை தக்க வைக்க முடியா மலும் புதிய மாணவர்களை சேர்க்க முடியாமலும் தவிக்கின்ற நிலை உருவாகி உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த திடீர் மாற்றத்திற்கு பெற்றோரின் ஆங்கிலவழி கல்வி மோகமே முக்கிய காரணம் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்

No comments:

Post a Comment