திருக்குறள்

15/05/2013

புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அறங்காவலர் வங்கியாக (Trustee Bank) 01.07.2013 முதல் Axis Bank என்ற தனியார் வங்கியை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவு


01.04.2004 முதல் மத்திய அரசால் நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் புதியபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் மேலும் ஒரு அபாயகரமான முடிவினைஇடைக்கால ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையம் (PFRDA)எடுத்துள்ளது.இது நாள் வரை TRUSTEE BANK- (அறங்காவலர் வங்கி) ஆகமத்திய அரசின் பொதுத்துறை நிறுவன வங்கியான BANK OF INDIA ஓய்வூதியநிதியனை கையாண்டு வந்தது.

வருகின்ற 01.07.2013 முதல் TRUSTEE BANK (அறங்காவலர் வங்கி) ஆக வெளிநாட்டு தனியார் வங்கியான AXIS BANK ஓய்வூதிய நிதியை கையாளும்வங்கியாக தேர்வு செய்யபப்பட்டுள்ளது.NPS திட்டத்தில் ஏறக்குறைய 60ஆயிரம் கோடி உள்ளது.அதை கையாளும் உரிமை AXIS வங்கிக்கே உள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பல அமெரிக்க தனியார் வங்கிகளில் 3லட்சம் கோடி ரூபாய் ஓய்வூதிய நிதி திவால் ஆகிவுள்ள நிலையில் PFRDA -ன்TRUSTEE -BANK (அறங்காவலர் வங்கி) ஆக தேர்வுசெய்யபப்பட்டுள்ளது.ஓய்வூதியத்தில் தனியார் மயத்தின்முதல் படியாகும் .பல்வேறு நாட்டுடைமை வங்கிகளுக்கு பின்னடைவுஏற்படுத்தும்.

எனவே ஆசிரியர் நண்பர்களே ! அரசு ஊழியர்களே !!

ஒன்றுபடுவோம் !போராடுவோம்!! வெற்றி பெறுவோம்!!!

No comments:

Post a Comment