புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றம்
வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் புதுச்சேரியில் பள்ளி திறப்பு தேதி மாற்றப்பட்டுள்து.கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறப்பது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு மே மாத இறுதி வாரத்திலும் கோடை வெயிலின் தாக்கம் குறைய வில்லை. நாளுக்குள் நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், புதுச்சேரியில், பள்ளிகள் திறக்கும் தேதி ஜுன் மாதம் 3ம் தேதிக்கு பதில் 10ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனை புதுச்சேரி கல்வித் துறை அமைச்சர் தியாகராஜன் இன்று அறிவித்தார்.
மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயிலுக்கு நாளை 'குட் பை'
மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்த தொடங்கியது. கடந்த 4-ம் தேதி கத்திரி வெயில் தொடங்கியது. அன்று முதல் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக உயர்ந்தது. சில இடங்களில் கோடை மழை பெய்தபோதும், பயனில்லை. சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் வெயில் வெளுத்து வாங்கியது. அதிகபட்சமாக வேலூரில் 111 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. கடந்த ஒரு வாரமாக அனல் காற்று வீசியது. பகல் நேரத்தில் மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவித்தனர். பலர் வீடு மற்றும் அலுவலகங்களிலேயே முடங்கிக் கிடந்தனர். சென்னையில் நேற்று 109 டிகிரி கொளுத்தியது. சாலைகள் அனலாக கொதித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். பெரும்பாலானோர் முகத்தை துணியால் மூடிக் கொண்டும், குடை பிடித்தபடியும் சென்றனர். சுமார் ஒரு மாதமாக மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் நாளையுடன் முடிகிறது. இதையடுத்து வெயிலின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஆண்டு பருவ மழை முன்கூட்டியே தொடங்கும் என தெரிகிறது. கேரளாவில் ஜூன் முதல் வாரத்தில் பருவமழை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment