கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கை 80.1%பெண்கள்- ஆண்கள் சம அளவில்:மக்கள் தொலை வளர்ச்சியில் காஞ்சிபுரம் முதலிடம்:மக்கள் தொகை 15.6% அதிகரிப்பு:கிராமப்புறங்களில் 3.7 கோடி, நகர்ப்புறங்களில் 3.49 கோடி:பெண் குழந்தைகள் எண்ணிக்கை:கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, நாமக்கல், சேலத்தில் குறைவு:கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80.1%:கல்வியறிவில் முன்னணி- பின் தங்கிய மாவட்டங்கள்
தமிழக மக்கள் தொகை 7.2 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் மக்கள் தொகை சுமார் 97.4 லட்சம் அதிகரித்துள்ளது. அதே போல தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கை 80.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. மத்திய சென்சஸ் துறையின் தமிழக இணை இயக்குனர் கிருஷ்ணா ராவ் 2011ம் ஆண்டு சென்சஸ் முடிவுகளை இன்று வெளியிட்டார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை மக்கள் தொகை 46.8 லட்சம்!: மக்கள் தொகையில் டாப்-4 மாவட்டங்கள் காஞ்சி, வேலூர், திருவள்ளூர்
சென்னை மக்கள் தொகை 46.8 லட்சம் (46,81,087) ஆக உயர்ந்துள்ளது. 2011ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட சென்ஸஸ் விவரங்கள் வெளியிட்டப்பட்டுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னையில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26,553 பேர் வசிக்கின்றனர். இது மிக அதிகமான மக்கள் நெரிசலாகும். சென்னைக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 39.9 லட்சம் பேரும் (39,90,897), வேலூர் மாவட்டத்தில் 39.2 லட்சம் (39,28,106) பேரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 37.2 லட்சம் (37,25,697) பேரும் வசிக்கின்றனர். சென்னையில் பணியாற்றுவோர் தான் பெரும்பாலும் இந்த மாவட்டங்களில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகை மிகக் குறைவான 4 மாவட்டங்கள்: அதே நேரத்தில் மாநிலத்திலேயே பெரம்பலூர், நீலகிரி, அரியலூர், கரூர் மாவட்டங்களில் தான் மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக உள்ளது. கரூர் மாவட்டத்தில் 10.7 லட்சம் பேரும் (10,76,588), அரியலூர் மாவட்டத்தில் 7.5 லட்சம் பேரும் (7,52,481), நீலகிரி மாவட்டத்தில் 7.3 லட்சம் பேரும் (7,35,071), பெரம்பலூர் மாவட்டத்தில் 5.6 லட்சம் பேரும் (5,64,511) வசிக்கின்றனர்.
மக்கள் நெருக்கம்:
டெல்லிக்கு அடுத்த நிலையில் சென்னை!மக்கள் தொகை பெருக்க விவரம்:தமிழகத்தின் மக்கள் நெருக்கம்:அதிக மக்கள் நெருக்கம் டெல்லிக்கு அடுத்த நிலையில் சென்னை:குறைவான மக்கள் நெருக்கம் அருணாச்சல், காஷ்மீரில்:
தமிழக மக்கள் தொகை கடந்த 120 ஆண்டுகளில் 1.93 கோடியிலிருந்து 7.21 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் தலித் மக்களின் எண்ணிக்கை 16.6%: தமிழகத்தில் 18%.. ஆனால், அதிகாரம்?
நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 20 கோடியாகும் (20,13,78,086). அதாவது மொத்த மக்கள் தொகையில் 16.6% தலித் மக்கள் ஆவர். தேசிய அளவில் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்ஸஸ் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம்: நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மக்களின் எண்ணிக்கை 20 கோடியாகும் (20,13,78,086). அதாவது மொத்த மக்கள் தொகையில் 16.6% தலித் மக்கள் தான். (ஆனால், நாடு சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளில் இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரே ஒருவர் தான் நாட்டின் தலைமை நீதிபதியே ஆகியிருக்கிறார். அதே நேரத்தில் இச் சமூகத்தினர் யாரும் பிரதமர் ஆனதில்லை. ஜனாதிபதி என்ற ரப்பர் ஸ்டாம்ப் பதவி தான் தரப்பட்டுள்ளது.) இதில் 15 கோடி பேர் கிராமப் பகுதிகளில் வசிக்கின்றனர். பழங்குடி இனத்தினரின் எண்ணிக்கை 10 கோடியாகும் (10,42,81,034). இதில் 9 கோடி பேர் கிராமப் பகுதிகளில் தான் வசிக்கின்றனர். மொத்தமுள்ள தலித் மக்களில் பாதிக்கும் மேற்பட்டோர் உத்தரப் பிரதேசம் (20.5%), மேற்கு வங்கம் (10.7%), பிகார் (8.2%), மற்றும் தமிழகத்தில் (7.2%) தான் வசிக்கின்றனர். மாநில அளவிலான மக்கள் தொகையில் பஞ்சாபில் மொத்த மக்கள் தொகையில் 31.9 சதவீதத்தினர் தலித் மக்களாவர். மேற்கு வங்கம், ஹிமாச்சலப் பிரதேசத்தில் தலா 23.5, 25.2 சதவீதத்தினரும், தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் 18 சதவீதத்தினரும் தலித் மக்களாவர்.
இந்தியாவின் மக்கள் தொகை 121 கோடி: 10 ஆண்டுகளில் 17.7% அதிகரிப்பு
நாட்டின் மக்கள் தொகை 121 கோடியாக (1,21,05,69,573) அதிகரித்துள்ளது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 62.3 கோடி (62,31,21,843). பெண்களின் எண்ணிக்கை 58.7 கோடியாகுமம் (58,74,47,730). இது கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் ஒப்பிடுகையில் 17.7 சதவீத அதிகரிப்பாகும். தேசிய அளவில் 2011ம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்ஸஸ் முடிவுகள் இப்போது வெளியாகியுள்ளன. அதன் விவரம்: 2001 முதல் 2011ம் வரையிலான கடந்த 10 ஆண்டுகளில் இந்திய மக்கள் தொகை 18 கோடி அதிகரித்துள்ளது. இதில் ஆண், பெண்களின் எண்ணிக்கை சரிசமமாக தலா 9 கோடி அதிகரித்துள்ளது. நாட்டில் பெரும்பான்மையானோர் இன்னும் கிராமப் பகுதிகளில் தான் வசிக்கின்றனர். மொத்த மக்கள் தொகையில் 68.8 சதவீதம் பேர் கிராமப் பகுதிகளிலும் 31.2 சதவீதம் பேர் நகர் பகுதிகளிலும் வசிக்கின்றனர். நாட்டில் 1000 ஆண்களுக்கு 943 பெண்களே உள்ளனர். இது கிராமப் பகுதிகளில் 949 ஆகவும் நகர்ப் பகுதிகளில் 929 ஆகவும் உள்ளது. ஆக, நகர்ப் பகுதிகளில் பெண்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரை 1,000 ஆண் குழந்தைகளுக்கு 919 பெண் குழந்தைகளே உள்ளனர். இது கிராமப் பகுதிகளில் 923 ஆகவும் நகர்ப் பகுதிகளில் 905 ஆகவும் உள்ளது. ஆக, நகர்ப் பகுதிகளில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையும் குறைவாக உள்ளது. தேசிய அளவில் கல்வியறிவு பெற்றோரின் அளவு 73 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் 80.9 சதவீதமும், பெண்கள் 64.6 சதவீதமும் கல்வியறிவு பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment