SCHOOL DROP OUTS SHOULD BE MONITORED THROUGH NEW SOFTWARE
திருவள்ளூர்: மாவட்டத்தில், இதுவரை பள்ளியில் இருந்து இடையில் நின்ற மாணவர்கள், 4,826 பேர் என, கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமை சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து, அனைத்து சிறுவர்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழக அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களுக்கு இலவச கல்வி, உணவு, பாட புத்தகங்கள், சீருடைகள், மிதிவண்டிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. எனினும், ஒவ்வொரு ஆண்டும், ஆயிரக்கணக்கான மாணவர்கள், பல்வேறு காரணங்களுக்காக இடையில் நின்று விடுகின்றனர். குறிப்பாக, குடும்ப வறுமை, பெற்றோர் வேலை நிமித்தமாக வேறு ஊர்களுக்கு இடம் மாறுதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், மாணவர்கள் கல்வியை கைவிட நேரிடுகிறது.
இப்படிப்பட்ட மாணவர்களை கண்டுபிடிப்பதற்காக, தமிழக அரசால் ஒரு புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து உருவாக்கப் பட்டு உள்ள இந்த மென்பொருளுக்கு, "சைல்டு டிராக்கிங் அண்டு மானிட்டரிங்" (சிறுவர் கண்காணிப்பு) என, பெயரிடப் பட்டு உள்ளது.
இதில், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியரின் பெயர், வீட்டு முகவரி, பள்ளி முகவரி, வகுப்பு, புகைப்படம் உள்ளிட்ட விவரங்கள் சேமிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும், பள்ளிகளில் ஆய்வு நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில், இந்த விவரங்கள் புதுபிக்கப்படுகின்றன. இதன் மூலம் இடை நிற்கும் மாணவர்கள் கண்டறியப்படுகின்றனர்.
அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதோடு, அந்த மாணவர் தொடர்ந்து கல்வி பயில்கிறாரா என்பதும் கண்காணிக்கப் படுகிறது ஒவ்வொரு மாவட்டத்தின் பதிவுகளும், மற்ற மாவட்ட பதிவுகளோடு, தகவல் வலை மூலம் இணைக்கப் பட்டு உள்ளது.
இதனால், ஒரு மாவட்டத்தில் பயின்று பாதியில் கல்வியை கைவிட்ட மாணவர், வேறொரு மாவட்டத்திற்கு சென்று பள்ளியில் சேர்ந்தாலும், இந்த மென்பொருள் காட்டிவிடும். இதனால் அவர்கள், தவறாக இடை நிற்கும் மாணவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள்.
இந்த மென்பொருளின் உதவியோடு சேகரித்த புள்ளி விவரங்களின்படி, மாவட்டத்தில், 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள், 52,178 பேர் உள்ளனர். இது தவிர, இந்த வயது வரம்பில், 4,826 சிறுவர்கள் இடைநின்றுள்ளனர் என்றும் கண்டறியப்பட்டு உள்ளது.
இது குறித்து, பெயர் வெளியிட விரும்பாத அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் அலுவலர் ஒருவர் கூறுகையில், "கடந்த கல்வியாண்டில், மாவட்டம் முழுவதும், 4,826 மாணவர்கள் பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டது, கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. அவர்களை பற்றிய விவரங்கள் அனைத்தும், கணினியில் பதிவு செய்யப்பட்டு, அவர்களை பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது," என்றார்.
மேலும், "இந்த புதிய மென்பொருள் மூலம், மாணவர்கள் எதிர்காலத்தில் படிப்பை பாதியிலேயே கைவிட்டாலும், அவர்களை எளிதில் கண்டுபிடித்து, மீண்டும் எளிதாக பள்ளியில் சேர்க்க முடியும். நடப்பு கல்வியாண்டில், 14 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவியரின் விவரம் குறித்தும் கணக்கெடுக்கப்பட உள்ளது," என்றார்

No comments:
Post a Comment