>பொது மாறுதல் கலந்தாய்வு விண்ணப்பங்கள் 13.05.2013 முதல் 17.05.2013 வரை சமர்பிக்கலாம்.
>சென்ற ஆண்டு பயன்படுத்திய விண்ணப்ப படிவமே இந்த ஆண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
>பட்டதாரிஆசிரியர்களின் பதவி உயர்வு குறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில்உள்ளதால், ஒன்றியத்திற்குள் மாறுதல் மட்டுமே கலந்தாய்வு மூலம் தற்பொழுது வழங்கப்படும் .
>பொது மாறுதல் வழங்கும் போது முதலில் ஒன்றியத்திற்குள் / நகராட்சிக்குள் உள்ள ஆசிரியர்களுக்குமாறுதல் அளித்துவிட்டு, பின்னர் ஏற்படும் காலிப்பணியிடங்களில்
2012-2013ஆம்கல்வியாண்டில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் பணி நிரவலில் சென்ற ஆசிரியர்களுக்கு முன்னுரிமைப்படி மாறுதல் அளிக்கப்பட வேண்டும்.
>2009க்கு பிறகு மாநில பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலைஆசிரியர்களுக்கு வழக்கம் போல் மாவட்டம் விட்டு மாவட்ட மாறுதல் பெற முடியாத நிலை இந்த ஆண்டும்நீடிக்கிறது.
>பெறப்பட்ட விண்ணப்பங்களை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் 20.05.2013 அன்று மாவட்ட கல்விஅலுவலரிடம் சமர்பிக்கின்றனர். >23.05.2013 இறுதி செய்யப்பட்டு தொடக்கக் கல்வி இயக்ககத்திற்கு தகவல்தெரிவிக்கப்படுகிறது.
Download CLICK HERE..
தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 02898/டி1/2013 நாள் .11.5.2013
No comments:
Post a Comment