திருக்குறள்

29/05/2013

உலக பள்ளி செஸ் போட்டி: இந்திய மாணவி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை

                                         

உலக பள்ளி செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கிரீஸ் நாட்டின் ஹால்கிடிகி நகரில் நடந்தது. இதில் பெண்களுக்கான 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மும்பை மாணவி அனன்யா குப்தாவும் கலந்து கொண்டார்.

9 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் அவர் 7–ல் வெற்றி பெற்று 3–வது இடத்தை பிடித்ததுடன், வெண்கலப்பதக்கத்தையும் தட்டிச் சென்றார். இதில் கடைசி ரவுண்டில் தன்னை விட தரவரிசையில் மிக உயர்ந்த நிலையில் இருந்த பிரான்சின் யுயான் பெலினுடன் மோதிய அனன்யா, அந்த ஆட்டத்தில் ‘டிரா’ செய்வதற்கான சந்தர்ப்பம் வந்த போதிலும் அதை ஏற்க மறுத்து, தைரியமாக தொடர்ந்து விளையாடி எதிராளியை சாய்த்தார். அவர் மொத்தம் 7 புள்ளிகள் பெற்றார். இந்த பிரிவில் கஜகஸ்தானின் அஸ்சா பயேவா (8.5 புள்ளி) தங்கப்பதக்கத்தையும், இந்தோனேஷியாவின் டையாஜெங் தெரேசா சிங்கி (8 புள்ளி) வெள்ளிப்பதக்கத்தையும் கைப்பற்றினர்.

9 வயதான அனன்யா, மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் சர்வதேச பள்ளியில் படித்து வருகிறார். இந்த போட்டிக்காக தினமும் 7 மணி நேரம் தனது பயிற்சியாளர்களுடன் பயிற்சியில் ஈடுபட்ட அவர், அடுத்து தேசிய போட்டிகளுக்காக தயாராகி வருகிறார். முன்னதாக அவர் சிங்கப்பூர் செஸ் தொடரில் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment