திருக்குறள்

17/12/2013

வருங்கால வைப்பு நிதி - 8.5 சதவீத வட்டி இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட, சந்தாதாரர்களின் கணக்கில் உள்ள டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி வழங்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.வருங்கால வைப்பு நிதி திட்டத்தில்,
சேர்ந்து கணக்கு வைத்துள்ளவர்களுக்கு, அவர்கள் கணக்கில் வரவு வைக்கப்படும் தொகைக்கு, ஆண்டுதோறும், வட்டி வழங்கப்படுகிறது
. இந்த வட்டி, எவ்வளவு சதவீதம் என்பதை, இ.பி.எப்.ஓ., என்ற, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தின் கீழ் செயல்படும், டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடி முடிவு செய்யப்படும்.இந்த வகையில், 2013 14ம் ஆண்டுக்கான, வட்டியை முடிவு செய்வதற்காக, நேற்று, டிரஸ்டிகளின் மத்திய போர்டு கூடுவதாக இருந்தது. போர்டின் தலைவரும், மத்திய தொழிலாளர் நல அமைச்சராக இருந்த சிஸ்ராம் ஓலா மறைவையடுத்து, நேற்றைய கூட்டம் ரத்து செய்யப்பட்டது.தற்போது, தொழிலாளர் துறை அமைச்சராக, ஆஸ்கர் பெர்னாண்டசுக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. விரைவில், இவர் தலைமையில் வாரிய கூட்டம் நடைபெறும். கடந்தாண்டு, இ.பி.எப்., டிபாசிட்டுக்கு, 8.5 சதவீத வட்டி அளிக்கப்பட்டது. இதுவே, 2013 14ம் ஆண்டிற்கு வழங்கப்படும் என தெரிகிறது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் (NMMS) - விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்வது குறித்த விவரங்கள் மற்றும் படிவங்கள்

அரசியல் சின்னங்கள் இடம்பெறக் கூடாது! கல்வித்துறை காணொலி பதிவில் கட்டுப்பாடு

"பள்ளிக்கல்வித்துறையின் பிரத்யேக இணையதளத்தில் (இ.எம்.ஐ.எஸ்.,) பதிவு செய்யப்பட உள்ள, காணொலிகளில் அரசியல் தலைவர்களையோ, அவர்களின் சின்னங்களையோ பிரதிபலிக்கும் வகையில் இருக்கக் கூடாது,'' என்று, மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன(எஸ்.சி.இ.ஆர்.டி., ) இயக்குனர் கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

கடந்த ஓராண்டாக, இ.எம்.ஐ.எஸ்., இணையதளத்தில் மாணவர்கள், பள்ளி, ஆசிரியர்கள் உட்பட பல விதமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. 

இந்த இணையதளத்தில், முக்கிய பாடங்கள் சார்ந்த காணொலிகள், நீதிக்கதைகள், செயல்முறை கல்வி, பள்ளிக்கல்வித்துறை நிகழ்வுகள் பதிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் சபிதா அறிவித்தார்.

அதன்படி, முதல்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த மூன்று ஆசிரியர்களை தேர்வு செய்து, காணொலிகள் தயாரிப்பதற்கான பயிற்சிகள் கடந்த 4ம் தேதி வழங்கப்பட்டது.

காணொலிகள், கேட்பொலி, போன்ற தொழில்நுட்ப கணினி வழி பதிவுகள் பிற இணையதளங்களில் இருந்து எடுத்ததாக இருக்கக்கூடாது. புதியதாக மட்டுமின்றி, ஆசிரியர்களின் திறனை பிரதிபலிக்கும் வகையில் அமைய வேண்டும். மேலும், காணொலிகள் 15 முதல் 20 நிமிடங்களுக்குள் பார்க்க கூடியதாக அமைத்தல் வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் கண்ணப்பன் கூறுகையில்,""காணொ லிகள் பதிவேற்றம் சார்ந்த பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன. முக்கிய பாடங்கள், நீதி கருத்துகள் போன்றவை காணொலி, கேட்போலி மூலம் தயாரித்து பதிவேற்றம் செய்யப்படும். காணொலிகள் தனி மனிதனையோ, தனிப்பட்ட நிறுவனம் அல்லது ஜாதி, மதம், இனம் சார்ந்ததாகவோ இருத்தல் கூடாது.

""எவ்வித அரசியல் அமைப்பு தலைவர்களையோ, சின்னங்களையோ குறிப்பிடுவதாகவும், தேவையற்ற, விரும்பத்தகாத காட்சிகள், திரை நடிகர்களை காட்டும் விதமாகவும் இருப்பின் அவற்றை பதிவு செய்ய இயலாது. கல்வியியல் மேலாண்மை தகவல் முறைமை குழுவின் ஒப்புதலை பெறும் காணொலிகள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம், ஆசிரியர்களுக்கு கற்றல், கற்பித்தல் முறை எளிமையாக்கப்படும்,'' என்றார்.

பரிட்சைகளில் புத்தகத்தைப் பார்த்து எழுதலாம்!

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் 9, 11-ஆம் வகுப்புகளில் இந்த ஆண்டு திறந்த புத்தகத் தேர்வு முறை என்ற பிரிவு புதிதாக அறிமுகம் செய்யப்படுகிறது.

வரும் மார்ச் மாதம் நடைபெறும் ஆண்டுத் தேர்வில் இந்தப் பிரிவுக்காக கூடுதலாக 30 நிமிடங்கள் ஒதுக்கப்படும் என சி.பி.எஸ்.இ. சென்னை மண்டல அலுவலர் டி.டி.சுதர்சன ராவ் கூறினார்.

மாணவர்களின் சிந்திக்கும் ஆற்றலைத் தூண்டும் வகையில் மனப்பாடம் செய்யும் கல்விமுறைக்கு மாற்றாக திறந்த புத்தகத் தேர்வு முறையை சி.பி.எஸ்.இ. இந்த ஆண்டு அறிமுகம் செய்கிறது. ஒன்பதாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும், +1 வகுப்பில் புவியியல், பொருளாதாரம், உயிரியல் ஆகியப் பாடங்களிலும் இது அறிமுகம் செய்யப்படுகிறது.

திறந்த புத்தக தேர்வுக்கு 10 மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது. தேர்வின் போது இந்தப் பிரிவுக்கான பல பதில்கள் மாணவர்களிடம் வழங்கப்பட்டு விடும். கேள்விகளுக்குத் தகுந்தபடி சரியான பதில்களை எழுத வேண்டும். கேள்விகள் மாணவர்களின் சிந்தனையைத் தூண்டும் வகையில் இடம் பெறும் என சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது.

சென்னை மண்டலத்தில் 9, 11 ஆம் வகுப்புகளில் திறந்த புத்தக தேர்வு முறையை சுமார் 4 லட்சம் மாணவர்கள் எழுதுவார்கள் என டி.டி.சுதர்சன ராவ் கூறினார்.

பிளஸ் 1 வினாத்தாள் மாற்றம் தொடர்பாக பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ. அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில், +1 வகுப்பில் திறந்த புத்தக தேர்வு முறை அறிமுகம் செய்யப்படும் பாடங்களுக்கான தேர்வுகள் வழக்கமான முறையிலேயே நடைபெறும். இந்தப் பாடங்களில் திறந்த புத்தக தேர்வு முறை மட்டும் கூடுதலாக இடம் பெறும். அந்தப் பிரிவுக்கு தலா 10 மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் என்பதால், அதற்கு ஏற்றவாறு வினாத்தாள் வடிவமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

இப்பகுதிக்குரிய விடைகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வினாக்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. +1 வகுப்புக்கான புதிய வினாத்தாள் வடிவமைப்பும் இந்தச் சுற்றறிக்கையோடு இணைக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் வகுப்புக்கும் இதே போன்ற வினாத்தாள் வடிவமைப்பு விரைவில் அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த முறைக்கு கிடைக்கும் வரவேற்பு, அதன் பயன்பாடு ஆகியவற்றைப் பொறுத்து பிற வகுப்புகளுக்கும் இது விரிவுப்படுத்தப்பட வேண்டும் பள்ளி முதல்வர்கள் தெரிவித்தனர்.

மாவட்டத்துக்கு 5 பள்ளிகளில் அறிமுகம் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம்

தமிழகத்தில் கம்ப்யூட்டர் மூலம் ஒரே நேரத்தில் பல பள்ளிகளில் பாடம் எடுக்கும் திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட 5 பள்ளிகளில் செயல்படுத்தப்பட இருக்கிறது.தமிழக பள்ளிகளில் உள்ள வகுப்பறைகளை ஒருங்கிணைத்து ‘கனெக்டிங் கிளாஸ் ரூம்‘ என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த முறையில் ஒரே நேரத்தில் எல்லா வகுப்பறைகளிலும் கணினி உதவியுடன் பாடம் போதிக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்ட 5 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக 4 மண்டலங்களில் பயிற்சி பட்டறை நடத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ஒரு பள்ளிக்கு 42 ஆயிரத்து 187 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு தேவையான உபகரணங்களும் கொள்முதல் செய்ய ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில் மாவட்டம் வாரியாக தேர்வு செய்யப்பட்ட ஐந்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆங்கில புலமையுடன் கூடிய கணினியில் திறம்பட பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவருக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதற்கான பயிற்சி பட்டறை சென்னை, திருச்சி, கோவை, மதுரை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது.சென்னை மண்டலத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தர்மபுரி மாவட்டங்களுக்கு டிசம்பர் 27ம் தேதி சென்னை சூளைமேடு ஜெய்கோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இத்தகவலை பள்ளி கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளார்.

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான வழக்கு இரண்டு வாரம் ஒத்திவைப்பு

இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய விகிதம் தொடர்பான  வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 11ஆம் எண் நீதிமன்றத்தில் நீதியரசர் சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாராணைக்கு வந்த போது அரசு தரப்பு வழக்கறிஞ்சர் இரண்டு வார காலஅவகாசம் கேட்டதை தொடர்ந்து வழக்கு 2 வாரம் ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்

இந்தியா முழுவதும் 100 பள்ளிகளை நிறுவ சர்வதேச ரோட்டரி சங்கம் திட்டம்




சர்வதேச ரோட்டரி சங்கத்தினரால் நடத்தப்படும் தெற்காசிய எழுத்தறிவு உச்சி மாநாடு இன்றும், நாளையும் புதுடெல்லியில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் திரைப்பட நடிகர்களான கபீர் பேடி, ரவி கிசென், மிருனாள் குல்கர்னி, தபேலா இசைக்கலைஞர் பிக்ராம் கோஷ் மற்றும் இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான பைசுங் பூட்டியா போன்றோர் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி இந்திய ரோட்டரி சங்கத்தின் தலைவரும், இந்த மாநாட்டினை நிர்வகிப்பவருமான சேகர் மெஹதா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் நாங்கள் மேற்கொண்ட போலியோ ஒழிப்புத் திட்டம் 100 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவை 100 சதவிகிதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்ற ரோட்டரி சங்கம் முனைந்துள்ளது. கல்வியறிவு பூரணமாக இருந்தால் மட்டுமே இந்தியாவை வளர்ந்த நாடாகக் குறிப்பிட முடியும்.

இதற்காகத் தரமான கல்வியை அளிக்ககூடிய வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் 100 பள்ளிக்கூடங்களைத் திறக்க சர்வதேச ரோட்டரி சங்கம் முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் வரும் 2017ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து கல்வி அறியாமையை விரட்டி 100 சதவிகிதம் எழுத்தறிவு பெற்ற நாடாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஜூன் 1ம் தேதிக்குள் 16 வது லோக்சபா அமையும்: வி.எஸ்.சம்பத்

வாஷிங்டன்: லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார். ஜூன் 1ம் தேதிக்குள் 16 வது லோக்சபா அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். வாஷிங்டனில் இந்திய கைத்தொழில் அமெரிக்க இந்திய வர்த்தக சபை மற்றும் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 78 கோடி மக்கள், 8 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கபபடுகிறது. அதேபோல் 11.8 கோடி மின்னணு வாக்குப்பதிவு எந்திரமும் பயன்படுத்தப்படும் என்றார். இருப்பினும் தேர்தல் கால அட்டவணை எதையும் தெரிவிக்காத சம்பத், மார்ச் மாத நடுவில் இதற்கான வேலைகள் தொடங்கும் என்று சூசகமாக தெரிவித்தார். அதேபோல குறிப்பிட்ட காலத்துக்குள், அதாவது ஜூன் மாதம் 1 ஆம் தேதிக்குள் 16வது நாடாளுமன்றம் அமையும் என்றும் சம்பத் தெரிவித்தார்.

இந்திய முழுவதும் வங்கி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி 18-ந்தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம்

சம்பள திருத்தங்கள் மற்றும் வங்கித்துறை சீர்திருத்தங்களை நிறுத்துவது தொடர்பாக வரும் 18-ம் தேதியன்று அனைத்து இந்திய வங்கி ஊழியர்களும் வங்கி சங்கங்களின் ஐக்கிய அமைப்பின் கீழ் (யுஎப்பியு) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கித்துறையில் செயல்பட்டுவரும் ஒன்பது அமைப்புகளின் இணைந்த ஒரு சங்கம் யுஎப்பியு ஆகும்.

அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் சங்கம், இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ்,வங்கி அதிகாரிகள் தேசிய அமைப்பு மற்றும் அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு போன்றவை இந்த அமைப்பின் கீழ் வருகின்றன.

அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம்,வங்கி ஊழியர்கள் தேசிய கூட்டமைப்பு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்,இந்திய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு மற்றும் வங்கித் தொழிலாளர் தேசிய அமைப்பு ஆகிய விருது பெற்ற ஐந்து ஊழியர்கள் சங்கங்களும் இந்த அமைப்பில்

இணைந்து செயல்படுகின்றன.

யுஎப்பியு அமைப்பின் தலைவர்கள் நேற்று தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும்வண்ணம் இந்திய வங்கிகள் சங்கத்தின் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தத் திருப்திகரமான முடிவும் ஏற்படாத காரணத்தினால் ஒரு நாள்

வேலை நிறுத்த முடிவை ஊழியர்கள் எடுத்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

--மாலைமலர்



15/12/2013

தகவல் அறியும் உரிமைச் சட்டம் - 2005 - பிறப்புச் சான்றிதழ் பெற சமர்பிக்கப்பட வேண்டிய ஆவணங்கள் குறித்த தெளிவுரை சார்ந்தது

விநாயக மிஷின்பல்கலைக்கழக எம்.பில்., படிப்பிற்கு யு.ஜி.சி அங்கீகரித்து ஆணை- VINAYAGA MISSION MPHIL UGC APPROVAL LETTER AVL.


நமது ஆசிரியர்கள் பெரும்பாலோர் சேலம் விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்தில் எம்.பில் பயின்றுள்ளனர். அதற்கு ஊக்க ஊதிய உயர்வு பெறுவதில் தற்போது வரை பல்வேறு காரணங்களால் மறுக்கப்படுகிறது. அப்படியே ஊக்க ஊதிய உயர்வு அனுமதித்தாலும் தணிக்கையின் போது மறுக்கப்பட்டு பிடித்தம் செய்ய ஆணையிடப்படுகிறது.
அதில் மறுக்கப்படுதற்கு மிக முக்கிய காரணமாக யு.ஜி.சி (U.G.C APPROVAL) அனுமதி இல்லை என்பதாகும். எனவே அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பயன் பெறுவதற்காகவே U.G.C APPROVAL நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதில் 2005 முதல் 2012 வரை பெறப்பட்ட பட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பாடபொருள்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களே தாயர் செய்கிறார்கள்


ஜப்பான் சீனா கனடா ரஷ்யா உட்பட 28நாடுகளில் பாடபுத்தகமே இல்லை உலகின் தலைசிறந்த கல்வியை தருகின்ற சுவிட்சர்லாந்து பின்லாந்து கியூபாவில் பாடபொருள்களை அந்தந்த பள்ளி ஆசிரியர்களே தாயர் செய்கிறார்கள்.
கியூபாவிலும் இறுதி தேர்வு என்று ஒன்றில்லை சிலி,பென்சில்வேனியா,வெனிசுலா ஆகிய நாடுகளில் பாடபுத்தகம் தாயரிப்பதில் மாணவர்களும் பங்கேற்கின்றனர். ஆனால் இங்கே மாணவர்களுக்கும் கல்வி நிலையங்களுக்கும் இடையே மிகப்பெரிய ஒரு இரும்பு திரை இருக்கிறது நுகர்வோர்களிடம் விற்கும் பொருளின் தரத்தை கேள்விகளை கேட்டு நிர்ணியுக்கும் நாம் கல்வியை நுகர்வு பொருளாக்கி ஆனால் நமக்கு தேவையில்லாததை வாங்கவும் வைக்கிறது கல்வி சமூகம் அந்த இரும்பு திரையை உடைக்க மாற்றுகல்வியை நோக்கி நமது சமுதாயத்தை செலுத்த அவசியம் அதை நோக்கி சிந்திக்க வைக்கும் புத்தகம் தான் ஆயிஷா நடராசன் எழுதிய இது யாருடைய வகுப்பறை(பாரதி புத்தகாலயம் 150ரூ) தொழில்புரட்சியால் உண்டான பள்ளிகூடங்கள் மற்றும் குழந்தை பருவத்திலிருந்து கல்வியின் வரலாறு, அரசியல் பாதிட்டம், கல்வி திட்டம்,ஆசிரியர் மாணவர் உறவு முறை,பெற்றோர் குழந்தை ஆசிரியர் உறவுமுறை,மாணவர்களின் உளவியல்,கல்வி சமந்தமான சட்டங்கள்,நான்கு சுவர்களை தாண்டி மாற்று கல்விமுறை பற்றிய சிந்தனையாளர்கள்,கல்வியில் சாதித்துள்ள நாடுகளின் கல்விமுறை மெக்காலேவின் Macalay minutes அறிக்கை முதல் யஷ்பால் கமிட்டி வரை பல்வேறு ஆய்வறிக்கைகளை மிக அழகான நடையில் மேற்குறிப்பிட்ட தகவல்களை தாண்டி மாற்று கல்வியை சிந்திக்க வைக்கும் ஒரு உந்து சக்தியா இந்த புத்தகம் இருக்கிறது ஒரு நாட்டின் கல்வி சமச்சீராக சென்றடைந்தால் தான் ஏற்ற தாழ்வற்ற ஒரு சமூகம் அமைய முக்கியகாரணியாக இருக்கும் ஆனால் நம்நாட்டில் இன்று நடப்பது என்ன? 

மாணவர்களை தேடிச்சென்று கல்வியை கொடுக்க வேண்டிய அரசாங்கம் EXPOநடத்தி விற்கு வழிவகைகள் செய்துகொண்டிருக்கிறது காசிருந்தால் கல்வி இல்லை கடன் வாங்கி படி என மாணவர்களை கடனாளியாக்கி அதை கல்வியில் பெரிய சாதனையை நிகழ்த்தியதை போல நிதியமைச்சர் கூறிக்கொண்டிருக்கும் போதுதான் அவர் திறந்தவைத்து வங்கியில் திருடர்களின் புகைபடங்களை போல கல்விகடன் வாங்கிய மாணவர் படம் ஒட்டும் மகத்தான கல்வி சாதனைகள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது கல்விமுறை ஒருவிதத்தில் மாணவர் பெற்றோர் ஆசிரியர்களை மும்முனை போட்டியாளர்களாக கல்விகூடங்கள் உருவாக்கி கல்விமுறை உருவாக்கிவருகிறது ஆசிரியர்களே தேவையில்லை என்றார் ரூசோ,

யாருடைய வகுப்பறை இது?, அறிவியல் தெரியும் ராமலிங்கத்தை தெரியுமா?,வகுப்பறையின் மேற்கூரை தீப்பற்றிய போது,உள்ளேன் டீச்சர்,அவங்க வகுப்பறை நம்ம வகுப்பறை,வகுப்பறையின் சுவர்களை தகர்தெறிந்தவர்கள் என 6 கட்டுரைகளில் நம் நாட்டில் நிலவும் கல்வி முறைகளின் மீதான கேள்விகள் ஆதங்கள் வருத்தங்கள் தீர்வுகளை தேடி கூட்டி செல்லும்முதல் நூல் மதிப்பெண்களை நோக்கி துரத்தும் வகுப்பறையில் மறுமலர்ச்சியை விரும்பும் அனைவரும் அதன் நுட்பங்களை அறிய படிக்க வேண்டிய நூல்

வலைத்தளத்தில் வசமாகும் அரசு பள்ளிகள்: ஆண்டிபட்டி "டூ' அமெரிக்கா மாணவருடன் பேச வாய்ப்பு

தமிழக கிராமத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவர், அமெரிக்காவில் பயிலும் மாணவருடன் "வீடியோகான்பரன்ஸ்' மூலம் கலந்துரையாடும் திட்டம், பள்ளி கல்வித் துறையில் விரைவில் அமலாக உள்ளது.
தமிழகத்தில் அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களின் உள்ளார்ந்த திறமைகளை வெளிப்படுத்தவும், படைப்பாக்க செயல்பாடு மற்றும் திட்டங்களை வடிவமைத்து ஆசிரியர்கள் கற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனும், "பள்ளி வகுப்புகளை ஒருங்கிணைத்து பயிலும் திட்டத்தை' (collaborative learning through connecting classrooms) அமல்படுத்த கல்வித் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இணையதளம் மூலம் "பள்ளி விட்டு பள்ளி, மாநிலம் விட்டு மாநிலம், நாடு விட்டு நாடு' என்ற அடிப்படையில், கல்வியறிவு, கற்பதற்கான புதிய வழிகளை வேறுபட்ட முறையிலும், மாறுபட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடனும் கற்கும் வாய்ப்பு இதனால் ஏற்படும். தமிழகத்தில் 160 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள், 
128 நடுநிலைப் பள்ளிகள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. சோதனை ரீதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 5 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, தொழிற்நுட்ப கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. இதன்படி, ஒவ்வொரு பள்ளியிலும், இணையதள வசதி, கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப், 3 ஜி டேட்டா கார்டு, வெப் கேமரா, மைக்ரோ போன், ஸ்பீக்கர்கள் வசதி செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தை துவக்கி வைக்க முதல்வர் ஜெயலலிதாவின் தேதிக்காக, கல்வித்துறையினர் காத்திருக்கின்றனர். இத்திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், தமிழக பள்ளிக் கல்வித்துறை வளர்ச்சியில் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: முதல்வரின், "விஷன் 2023' திட்டத்தின்கீழ் திட்டம் அமல்படுத்தப்படும். மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தவும், இடைநிலைக் கல்வியில் சிறப்புக் கவனம் செலுத்தவும் பயன்படும். முதற்கட்டமாக, மாநில பள்ளிகளில் "வீடியோகான்பரன்சிங்' வசதி செய்யப்படும். தொடர்ச்சியாக, வெளிநாட்டு மாணவர்களுடம் நம் மாணவர்கள் கலந்துரையாட விரைவில் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான தீவிர பணிகளில் கல்வித்துறை செயலாளர் சபிதா தலைமையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பாடப் புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, நூலகப் புத்தகங்களை பயன்படுத்தத் தூண்டும். வேறுபட்ட வட்டார மொழிச் சொற்களின் அறிமுகம் பெறவும், மொழியாளுகைத் திறனும் மாணவர்களிடம் வளரும், என்றார்.

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி அதிகரிப்பு

மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படி மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில், நிறைவுரை ஆற்றிய முதல்வர் ஜெயலலிதா 312 அறிவிப்புகளை வெளியிட்டார். அவற்றில் சில:

* மலைப்பகுதிகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கான படித்தொகை மாதம் ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரிப்பு.

* அரசு ஊழியர்களுக்கான குளிர்காலபடி மாதம் 500 ரூபாயாக உயர்த்தப்படும்.