திருக்குறள்

17/12/2013

இந்தியா முழுவதும் 100 பள்ளிகளை நிறுவ சர்வதேச ரோட்டரி சங்கம் திட்டம்




சர்வதேச ரோட்டரி சங்கத்தினரால் நடத்தப்படும் தெற்காசிய எழுத்தறிவு உச்சி மாநாடு இன்றும், நாளையும் புதுடெல்லியில் நடைபெறுகின்றது. இந்த மாநாட்டில் திரைப்பட நடிகர்களான கபீர் பேடி, ரவி கிசென், மிருனாள் குல்கர்னி, தபேலா இசைக்கலைஞர் பிக்ராம் கோஷ் மற்றும் இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் தலைவரான பைசுங் பூட்டியா போன்றோர் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி இந்திய ரோட்டரி சங்கத்தின் தலைவரும், இந்த மாநாட்டினை நிர்வகிப்பவருமான சேகர் மெஹதா நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் நாங்கள் மேற்கொண்ட போலியோ ஒழிப்புத் திட்டம் 100 சதவிகிதம் வெற்றியடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியாவை 100 சதவிகிதம் கல்வியறிவு கொண்ட நாடாக மாற்ற ரோட்டரி சங்கம் முனைந்துள்ளது. கல்வியறிவு பூரணமாக இருந்தால் மட்டுமே இந்தியாவை வளர்ந்த நாடாகக் குறிப்பிட முடியும்.

இதற்காகத் தரமான கல்வியை அளிக்ககூடிய வகையில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் 100 பள்ளிக்கூடங்களைத் திறக்க சர்வதேச ரோட்டரி சங்கம் முடிவெடுத்துள்ளது. இதன்மூலம் வரும் 2017ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து கல்வி அறியாமையை விரட்டி 100 சதவிகிதம் எழுத்தறிவு பெற்ற நாடாக மாற்றமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment