திருக்குறள்

20/12/2013

7-வது சம்பள கமிஷன் அமைக்கும் திட்டம் விரைவில் அமைச்சரவையில் தாக்கல்

மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை திருத்தம் செய்வதற்காக 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் கடந்த செப்டம்பர் மாதம் ஒப்புதல் அளித்தார். எனினும் 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கு முறைப்படி திட்டம் தயாரிக்கப்பட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு வைக்கப்படவில்லை.

இந்நிலையில், 7-வது சம்பள கமிஷன் அமைப்பதற்கான திட்டம் இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. இதற்காக மத்திய நிதியமைச்சகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அமைச்சரவையின் ஒப்புதலையடுத்து சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி ஒருவர் தலைமையில் வல்லுநர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட உறுப்பினர்கள் கொண்ட சம்பளக் கமிஷன் அமைக்கப்படும். இந்த கமிஷன் 2 ஆண்டுகளுக்குள் ஊதிய திருத்தம் தொடர்பான தனது பரிந்துரையை வழங்க வேண்டும். இந்த பரிந்துரை 2016-ம் ஆண்டு முதல் அமல்படுத்தப்படும். இதன்மூலம் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் பயன் அடைவார்கள்.

அதேசமயம் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தின்கீழ் வழங்கப்படும் மாத ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் 1000 ரூபாயாக வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இப்பணிகளை ஆரம்பிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment