இந்த புத்தாண்டு ஒரு சிறப்புடன் பிறக்க போகிறது. 67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும்,கிழமைகளையும் கொண்டுள்ளது. இதனால் இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோதிடர்கள் ஆரூடம் கூறி பீதியை கிளப்பி உள்ளனர். புத்தாண்டு பிறக்க போகிறது என்றாலே கணிப்புகளும் கச்சை கட்டி கொண்டு கலகலப்பாக கிளம்பி விடும். அந்த வகையில் 2014ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இப்போதே பலரும் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி நடக்கும், அப்படி நடக்கும், எப்படியும் ஏதாவது நடக்கும் என்ற ரேஞ்சுக்கு கணிப்புகள் வெளிவரும். இந்த ஆண்டு இந்த வாகனத்தில் புத்தாண்டு பிறந்துள்ளதால், ஆண்களுக்கு ஆகாது என்ற கூறி வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். சகோதரிகளுக்கு ஆகாது என ஒரு முறை கூறியதால் சகோதரர்கள், சகோதரிகளுக்கு பச்சை புடவையை வாங்கி கொடுத்து பரிகாரம் செய்தனர். இதுபோல் பல விஷயங்கள் ஒவ்வொரு புத்தாண்டின் போதும் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. ஆனால், பிறக்க போகும் 2014ம் ஆண்டு, 1947ம் ஆண்டு போலவே இருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு. கடந்த 1947ம் ஆண்டை போலவே 2014ம் ஆண்டும் புதன்கிழமைதான் பிறக்கிறது. மற்ற தேதிகளும், கிழமைகளும் கூட ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அதே 1947ம் ஆண்டு காலண்டரை எடுத்து பார்த்தால், அப்படியே 2014ம் ஆண்டு காலண்டர் போலவே இருக்கும். இது போதாதா... 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்த ஆண்டு என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். அதுபோன்ற மாற்றத்தை 2014ம் ஆண்டு இந்தியா மீண்டும் சந்திக்கும் என்று பலர் கணித்துள்ளனர். இப்போது 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தல் வருவதால், இந்த ஆண்டில் இந்தியா பெரும் மாற்றத்தை காணும் என்றும் சில ஜோதிடயர்கள் பீதி கிளப்புகின்றனர். என்ன மாற்றம் வருகிறதோ, என்னவோ.. முதலில் புத்தாண்டு நல்லபடியாக பிறக்கட்டும்
No comments:
Post a Comment