திருக்குறள்

17/12/2013

ஜூன் 1ம் தேதிக்குள் 16 வது லோக்சபா அமையும்: வி.எஸ்.சம்பத்

வாஷிங்டன்: லோக்சபா தேர்தலுக்கான ஏற்பாடுகள் வரும் மார்ச் மாதம் தொடங்கும் என தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார். ஜூன் 1ம் தேதிக்குள் 16 வது லோக்சபா அமையும் என்றும் அவர் கூறியுள்ளார். வாஷிங்டனில் இந்திய கைத்தொழில் அமெரிக்க இந்திய வர்த்தக சபை மற்றும் கூட்டமைப்பு இணைந்து நடத்திய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், கூறியதாவது: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் பல கட்டங்களாக நடைபெற உள்ளது. தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்ய தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. இந்த தேர்தலில் 78 கோடி மக்கள், 8 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கபபடுகிறது. அதேபோல் 11.8 கோடி மின்னணு வாக்குப்பதிவு எந்திரமும் பயன்படுத்தப்படும் என்றார். இருப்பினும் தேர்தல் கால அட்டவணை எதையும் தெரிவிக்காத சம்பத், மார்ச் மாத நடுவில் இதற்கான வேலைகள் தொடங்கும் என்று சூசகமாக தெரிவித்தார். அதேபோல குறிப்பிட்ட காலத்துக்குள், அதாவது ஜூன் மாதம் 1 ஆம் தேதிக்குள் 16வது நாடாளுமன்றம் அமையும் என்றும் சம்பத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment